‘Ethically’ என்ற வார்த்தைக்கு தமிழ் அகராதியில் பொருள் தேடினால், “நேர்மையான”, “நெறிமுறையான” என்ற அர்த்தங்களை சொல்லும்.
கரோனா காலத்திற்கு முன்பு உலகளவில் அதிகமாக விற்ற பொருட்களில் ஒன்று பெண்களின் தேவைகளுக்கான பொருட்கள் ஆகும். அதாவது மேக்கப், சரும பாதுகாப்பு, தலைமுடி பாதுகாப்பு, உடல் பாதுகாப்பு, இயற்கை அழகு சாதனங்கள், அம்மாவிற்கு குழந்தைக்கு தேவையான பொருட்கள், வாசனை திரவியங்கள் என்பதெல்லாம் இதில் அடங்கும்.
செய்தித்தாள்களிலும், இணையத்திலும் சமீபத்திய ஹாட் நியூஸ், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் 9.9 சதவிகித பங்குகளை ஃபேஸ்புக் நிறுவனம் சுமார் 43,574 கோடி ரூபாய் விலை கொடுத்து வாங்கியுள்ளது
இப்பொழுது எல்லோருடைய தாரக மந்திரமும் ‘விலகி இரு’ என்பதுதான். இதுபோன்ற ஒரு சூழ்நிலையில் ‘ஸ்டே டச்’ (Stay Touch) என்ற ஒரு செயலி தொடர்பில் இருப்பது சுலபமாக்குகிறது. சாதாரணமாக வியாபார நிமித்தமாகவோ அல்லது மரியாதை நிமித்தமாகவோ ஒருவரை ஒருவர் பார்க்கும்போது கைகுலுக்குவது, விசிட்டிங் கார்டுகளை கொடுப்பது போன்றவை சகஜமானவை.
தொழில் தொடங்க தேவையான நிதி திரட்டுவதில் உள்ள சிரமம்தான் சிறு தொழில் முனைவோருக்கான முதல் சவால். அடுத்தசவால், தொழில் நடத்த தேவையான நடைமுறை மூலதனம் (Working capital).ஏற்கனவே பொருளாதாரம் மந்த நிலையில் உள்ளது. தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு எந்த அளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை யாரும் உறுதிப்படக் கூற முடியாது. இந்த சூழ்நிலையில் சிறு தொழில் முனைவோர்கள் தங்களது நடைமுறை மூலதனத்தை சரியாக கையாள்வதில் கவனம் அதிகம் வேண்டும். சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் (MSME) வளர்ச்சிகளுக்காக மத்திய அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்த வண்ணம் உள்ளது. அவற்றில் குறிப்பிடத்தக்க திட்டம் ‘முத்ரா’ கடன் திட்டம்.
நிகில் இனாம்தார் எழுதிய ரோக்டா – புத்தகம் ‘பனியாக்கள்’ எப்படி வியாபாரம் செய்கிறார்கள் என்ற தலைப்பில் ஐந்து மார்வாரி தொழில்முனைவோரின் கதைகளை கொண்டது. ரோக்டா – பணம் என்று பொருள்.பனியா இந்தியாவின் ஒரு வர்த்தக வர்க்க பிரிவினர்.
பெண்கள் வீட்டிலிருந்தபடியே புடவை மற்றும் ஆடைகள் விற்பனை செய்வது என்பது புதிதல்ல. இப்போது வாட்ஸ் அப்பிலேயே வணிகம் செய்கிறார்கள். செட்டிநாட்டின் தலைநகர் காரைக்குடியில் கடந்த ஆண்டு துவக்கப்பட்ட ‘கற்பகம் பட்டு மாளிகை’ பெண்களால் நடத்தப்படும் ஒரு ‘ஸ்டார்ட் அப்’ தொழில்.
சென்னை ஆதம்பாக்கத்தில் ஒரு வீட்டில் இயங்குகிறது ‘ஸ்பெஷாலிட்டி ஃபுட்ஸ்’ என்னும் அந்த சிறு உணவுத் தொழிற்சாலை. பகல் வேளையில் பம்பரமாகச் சுழன்று மணக்க மணக்க சேவை, பொடி இட்லி, மினி இட்லி மற்றும் கொழுக்கட்டை வகைகளை தயாரிக்கின்றனர். பாரம்பரிய முறையில் தயாரிக்கப்படும் அந்த பலகாரங்கள் பிற்பகலில் ‘பேக்கிங்’ செய்து, நகரின் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களின் கேட்டரிங் துறைகளுக்கு அனுப்புகின்றனர்
ஸ்டார்ட் அப் கம்பெனிகள் வந்ததிலிருந்து பல புதிய வங்கி சாரா நிதி நிறுவனங்கள் (என்.பி.எப்.சி.,) தொழில் நுட்பத்தை அடிப்படையாக வைத்து ஆரம்பிக்கப்பட்டவை. இவை கடன்கள் வழங்க ஆரம்பித்திருக்கின்றன. அதாவது அதிக கிளைகள் இல்லாமல் ஆன்லைன் மூலமாக கடன் வழங்கும் வசதிகளை கொண்டவை. கொரோனா போன்ற சமயங்களில் இவை சிறிய, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கும், மாத சம்பளதாரர்களுக்கும், கம்பெனிகளுக்கும் இவர்களின் கடனுதவி உதவிகரமாக இருக்கும். ஆனால் வங்கிகளை விட வட்டிகள் கூடுதல் என்பதை நினைவில் வைக்க வேண்டும்.
கொரோனா வைரஸ் உலகெங்கும் பரவியதால் பல கம்பெனிகள் நீங்கள் வீட்டிலிருந்தே அலுவலக வேலைகளை செய்யலாம் என பச்சைக் கொடி அசைத்து விட்டனர். எனவே முழு இயக்கமும் நின்றுவிடாமல் ஓடிக்கொண்டிருக்கிறது. வீட்டிலிருந்து வேலை செய்வதால் பல அசௌகரியங்கள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. குறிப்பாக அலுவலகங்களில் நடைபெறும் மீட்டிங், பிரசன்டேஷன் போன்ற நிகழ்வுகள் நடக்காமல் இருக்க வாய்ப்புகள் உண்டு.