இப்பொழுது எல்லோருடைய தாரக மந்திரமும் ‘விலகி இரு’ என்பதுதான். இதுபோன்ற ஒரு சூழ்நிலையில்          ‘ஸ்டே டச்’ (Stay Touch) என்ற ஒரு செயலி  தொடர்பில் இருப்பது சுலபமாக்குகிறது.    சாதாரணமாக வியாபார நிமித்தமாகவோ அல்லது மரியாதை நிமித்தமாகவோ ஒருவரை ஒருவர் பார்க்கும்போது கைகுலுக்குவது, விசிட்டிங் கார்டுகளை கொடுப்பது போன்றவை சகஜமானவை. ஆனால் இப்போதும் கொரோனா காலம் முடிந்த பின்னரும் இந்த பழக்கம் தொடருமா என்பது சந்தேகம்தான். 

ஒருவரிடமிருந்து நீங்கள் விசிட்டிங் கார்டுகளை   வாங்கியவுடன் என்ன செய்வீர்கள்?  உடனடியாக அதை உங்கள் மொபைல் போனில்  அவருடைய பெயர், தொடர்பு முகவரி, தொடர்பு எண் போன்றவற்றை பதிவு செய்ய நினைப்பீர்கள்.

அந்த கஷ்டம் எல்லாம் இப்போது இல்லை, உங்கள் மொபைலில் ஸ்டே  டச் செயலி இருக்க  நீங்கள் சந்திப்பவரின் மொபைலிலும் அதே செயலி இருக்குமானால், இருவரும் ஒருவருக்கொருவர் மொபைல்    போன் வழியாகவே உங்களுடைய  விசிட்டிங் கார்டு விவரங்களை பகிர்ந்து கொள்ளலாம். 

ஒரு வேளை நீங்கள் சந்திக்கும் நபரிடம் ஸ்டே டச் செயலி இல்லாவிட்டால் என்ன செய்வது என்று யோசிக்கிறீர்களா? அவருக்கு வாட்ஸ்அப், ஈமெயில், டெலிகிராம், ஸ்கைப், எஸ்எம்எஸ் மூலமாக உங்களுடைய விசிட்டிங் கார்டு               விவரங்களை உங்கள் செயலியில் இருந்து அவருடைய மொபைலுக்கு அனுப்பலாம்.ஒருவருடைய விசிட்டிங் கார்ட் விபரங்களை பதியும்போது அவர் யார் என்பதை ஞாபகம் வைத்துக்           கொள்வதற்காக அவரைப் பற்றிய விவரங்களையும் எழுதுவதற்குஇடமும் இந்த செயலியில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஸ்டார்ட் அப் கம்பெனியின் இணையதளம் www.staytouch.com

Spread the lovely business news