மதுரை: தவறில்லாமல் ஏற்றுமதி செய்வது, ஸ்டார்ட் – அப் தொடங்குவது, அதற்கு நிதி பெறுவதற்கு வழிகாட்டும் கருத்தரங்கை மதுரையில் ஏப்ரல் 27ம் தேதி ஞாயிறன்று ‘தினமலர் நாளிதழில் ஸ்டார்ட்-அப், ஏற்றுமதி தொடர் எழுதி வரும்’ மும்பையைச் சேர்ந்த வங்கியாளர் சேதுராமன் சாத்தப்பன் நடத்துகிறார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:
ஏற்றுமதி தொழிலின் புதிய நடைமுறைகள் தெளிவாக தெரிந்து கொண்டால், தவறில்லாமல் ஏற்றுமதி செய்யலாம். கல்லுாரி மாணவர்கள் பலருக்கும் ஸ்டார்ட்-அப் தொடங்குவதில் ஆர்வம் உள்ளது. ‘ஸ்டார்ட் அப்’ தொடங்க நிறைய விதிமுறைகள் உள்ளன. அவற்றை எளிமையாக கற்றுக்கொள்ளவும், ஏற்றுமதி குறித்து தெளிவாக தெரிந்து கொள்ளவும் தமிழில் நடக்கும் இந்த நிகழ்ச்சி உதவும்.
ஸ்டார்ட்-அப் நிதி திரட்டுவது பற்றியும், ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது குறித்தும் இந்த கருத்தரங்கில் விடை கிடைக்கும். நிகழ்ச்சியின் இடையே, பங்கேற்பவர்களின் தனிப்பட்ட சந்தேகங்களுக்கும் விடை அளிக்கப்படும். தொழில்முனைவோர், கல்லுாரி மாணவர்களுக்கு பயனுள்ள நிகழ்ச்சி இது.
400 ஸ்டார்ட் அப் தொழில்கள் அடங்கிய ரூபாய் 1200 மதிப்புள்ள 4 புத்தகங்கள், ‘வெற்றிகரமாக ஏற்றுமதி செய்வது எப்படி, ஏற்றுமதிக்கு டாக்குமெண்டேஷன் செய்வது எப்படி? உட்பட ரூபாய் 1500 மதிப்புள்ள ஏற்றுமதி சம்பந்தப்பட்ட 4 புத்தகங்கள் வழங்கப்படும். இது தவிர ரூபாய் 500 மதிப்புள்ள ஈ-புத்தகங்கள் வழங்கப்படும். மதிய உணவு வழங்கப்படும்.
இந்த நிகழ்ச்சிக்கு Venue Sponsor ஆக தியாகராஜர் கலைக்கல்லுாரி இருக்கிறது. தினமலர் ஊடக உதவி அளிக்கிறது. தமிழ் பிசினஸ் நியூஸ் மீடியா இந்த நிகழ்ச்சியை நடத்துகிறது.
காலை 9:30 மணி முதல் மாலை 5:00 மணி வரை சேதுராமன் சாத்தப்பன் நடத்தும் இந்த நிகழ்ச்சி மதுரை தியாகராஜர் கலைக் கல்லுாரியில் இந்த கருத்தரங்கம் நடக்கிறது. முன்பதிவு விபரங்களுக்கு 98197 50966, 99940 29969 என்ற எண்களில் பேசலாம்.இவ்வாறு அவர் கூறினார்.