இன்று சிறிய அளவில் பிசினஸ் செய்கிறவர்களுக்கு இருக்கும் ஒரு பெரிய கஷ்டம் என்னவென்றால், யார் யாருக்கு என்னென்ன கடன்கள் கொடுத்திருக்கிறோம் என்பதை குறித்து வைத்து கொள்வதுதான். விற்கும் போது சின்ன சின்ன துண்டு சீட்டில் எழுதி வைத்துவிட்டு அப்படியே மறந்து விடுவது வழக்கம். பின்னர் அந்த பணத்தில் பாதி வராமல் போய்விடும்.
சென்னை – ஆழ்வார்ப்பேட்டை ‘மில்லட் மேஜிக் மீல்’ உணவகத்தில் ‘மில்லட்’ வகைகளில் பல சுவையான ‘மேஜிக்’ ரெசிபிகளைப் பார்க்கலாம்!
ஐடியாக்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் வரலாம். விளையும் பயிர் முளையிலே தெரியும் என்பதுபோல கல்லூரி மாணவர்களிடம் இருக்கும் புதுமையான சிந்தனைகளை, வணிக வடிவமாக்க இந்தியாவில் படிக்கும் இளங்கலை மற்றும் முதுகலை கல்லூரி மாணவர்களுக்கான ஒரு ஸ்டார்ட்-அப் ஐடியாக்கள் போட்டியை கென் 42 (ken 42) என்ற நிறுவனம் அறிவித்துள்ளது. ஃபிக்கி (FICCI) உடன் இணைந்து இந்த போட்டியை நடத்துகிறது.
விவசாயிகள் பகுதிநேரமாகவோ அல்லது முழுநேரமாகவோ செய்யக்கூடிய தொழில் கோழி வளர்ப்பு ஆகும். அதன் மூலம் அவர்களின் வாழ்வாதாரம் மேம்பட வாய்ப்புகள் உள்ளது.
கார்மெண்ட் இண்டஸ்டிரியில் வேஸ்டேஜ் குறைப்பது எப்படி, வேலை மற்றும் நேரத்தை எப்படி சேமிப்பது என்பதை சொல்லி தந்து உங்கள் கம்பெனியின் லாபத்தை கூட்டுவதுதான் இந்த ஸ்டார்ட்அப் கம்பெனியின் நோக்கம்.
இத் தொடரில் சுயம்புவாக அலங்கரிப்பவர் ஒரு பெண். அன்னையர் தினத்தன்று (மே 10) ஆப்ரிக்க அமெரிக்க இனத்தைச் சேர்ந்த ஓப்ரா கெயில் வின்ஃப்ரே (Oprah Gail Winfrey) பற்றி எழுதியது ஒரு தற்செயலான நிகழ்வு.
இந்திய அரசின் உணவு பதப்படுத்தும் தொழில்களின் அமைச்சகம் வெளியிட்ட உலக உணவு இந்தியா 2017 மாநாட்டின் அறிக்கையின் புள்ளி விபரங்களை இங்கு காண்பது மிகவும் முக்கியமானது. நவீன அறுவடை முறைகள் மற்றும் குளிர்பதன வசதிகள் உள்கட்டமைப்பு போதுமானதாக இல்லாததால், ஆண்டுதோறும் பழங்கள் மற்றும் காய்கறிகள் 4.6% முதல் 15.9% வரை வீணடிக்கப்படுவதை நாம் காணமுடிகின்றது.
கிராமங்களில் பசுமாடு வளர்ப்பவர்கள் சீம்பால் பற்றி நிச்சயம் அறிந்திருப்பார்கள். ஆனால் நகரவாசிகள் பெரும்பாலானவர்களுக்கு சீம்பால் மற்றும் அதன் நன்மைகள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. பசு கன்று போட்டதும் முதல் மூன்று நாட்கள் வரும் பாலைத்தான் சீம்பால் என்று அழைப்பார்கள். அதில் இருக்கும் சத்துக்கள் வீணாகாமல் பதப்படுத்தி தூளாக்கி சந்தைப்படுத்தும் ஸ்டார்ட் அப் தொழிலைத் நடத்தி வருகிறார் சென்னையைச் சேர்ந்த எஸ். முரளி.
தமிழகத்தின் மான்செஸ்டர் நகரம் என பெருமையுடன் அழைக்கப்படும் கோயம்புத்தூரில், சர்வதேச விமான நிலையத்திலிருந்து 3 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள கேமியோ பம்புகள் மற்றும் மோட்டார்ஸ் (CAMEIO Pumps and Motors) ஒரு பிரபலமான உலகத் தரம் வாய்ந்த பிராண்ட். இது “ஆர்கோ ஆட்டோமேஷன்” என்ற பதிவு செய்யப்பட்ட பெயரில் தயாரிக்கப்படுகிறது.
தன்னுடைய நலத்திற்காக ஆரம்பித்து பல அணுகூலங்கள் கண்ட கரூரைச் சேர்ந்த இல்லத்தரசி கருணாம்பிகை, மற்ற பெண்களுக்கும் பயன்பட வேண்டும் என நினைத்து தொடங்கியதுதான் ‘மெல்லினம்’ ஆர்கானிக் சானிடரி நாப்கின் தயாரிக்கும் சிறுதொழில். அதற்கு துணையாக இருப்பவர் துணைவர் அருள்முருகன்.