செய்தித்தாள்களிலும், இணையத்திலும் சமீபத்திய ஹாட் நியூஸ், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் 9.9 சதவிகித பங்குகளை ஃபேஸ்புக் நிறுவனம் சுமார் 43,574 கோடி ரூபாய் விலை கொடுத்து வாங்கியுள்ளது
இப்பொழுது எல்லோருடைய தாரக மந்திரமும் ‘விலகி இரு’ என்பதுதான். இதுபோன்ற ஒரு சூழ்நிலையில் ‘ஸ்டே டச்’ (Stay Touch) என்ற ஒரு செயலி தொடர்பில் இருப்பது சுலபமாக்குகிறது. சாதாரணமாக வியாபார நிமித்தமாகவோ அல்லது மரியாதை நிமித்தமாகவோ ஒருவரை ஒருவர் பார்க்கும்போது கைகுலுக்குவது, விசிட்டிங் கார்டுகளை கொடுப்பது போன்றவை சகஜமானவை.
நிகில் இனாம்தார் எழுதிய ரோக்டா – புத்தகம் ‘பனியாக்கள்’ எப்படி வியாபாரம் செய்கிறார்கள் என்ற தலைப்பில் ஐந்து மார்வாரி தொழில்முனைவோரின் கதைகளை கொண்டது. ரோக்டா – பணம் என்று பொருள்.பனியா இந்தியாவின் ஒரு வர்த்தக வர்க்க பிரிவினர்.
பெண்கள் வீட்டிலிருந்தபடியே புடவை மற்றும் ஆடைகள் விற்பனை செய்வது என்பது புதிதல்ல. இப்போது வாட்ஸ் அப்பிலேயே வணிகம் செய்கிறார்கள். செட்டிநாட்டின் தலைநகர் காரைக்குடியில் கடந்த ஆண்டு துவக்கப்பட்ட ‘கற்பகம் பட்டு மாளிகை’ பெண்களால் நடத்தப்படும் ஒரு ‘ஸ்டார்ட் அப்’ தொழில்.
கொரோனா வைரஸ் உலகெங்கும் பரவியதால் பல கம்பெனிகள் நீங்கள் வீட்டிலிருந்தே அலுவலக வேலைகளை செய்யலாம் என பச்சைக் கொடி அசைத்து விட்டனர். எனவே முழு இயக்கமும் நின்றுவிடாமல் ஓடிக்கொண்டிருக்கிறது. வீட்டிலிருந்து வேலை செய்வதால் பல அசௌகரியங்கள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. குறிப்பாக அலுவலகங்களில் நடைபெறும் மீட்டிங், பிரசன்டேஷன் போன்ற நிகழ்வுகள் நடக்காமல் இருக்க வாய்ப்புகள் உண்டு.
பொறியியல் பட்டம் பெற்று, பிரபல ஐடி நிறுவனத்தில் பணிபுரிபவர் சென்னையைச் சேர்ந்த பவித்ரா. பணிக்குச் செல்லும் நேரம் போக, மீதி நேரத்தில் இவர் செய்யும் பிசினஸ் ‘பேங்கிள் பஸ்’ (bangle buzz). ஆடைக்குப் பொருத்தமாக வளையல்களை வடிவமைத்துக் கொடுக்கும் தொழில். பலவித வண்ணங்களில், கண்கவர் வடிவங்களில் இவர் வடிவமைக்கும் ‘கஸ்டமைஸ்டு’ வளையல்கள் பார்க்கவே மிக அழகாக இருக்கின்றன.
அதிகம் பயணிக்காத சாலையில் பயணிக்க யாருக்கேனும் ஆசைவருமா? பெரும்பாலும் வருவதில்லை. ரிஸ்க் எடுக்க விரும்பாததால் `நமக்கேன் வம்பு’ என நினைத்து அனைவரும் செல்லும் பாதையிலேயே நாமும் பயணிக்கவிரும்புவோம். ஆனால் அதில் விதிவிலக்காக இருந்தவர்
அந்தக் காலத்தில் தரையில் படுத்து உறங்கினோம், தரையில் உட்கார்ந்து சாப்பிட்டோம், தரையில் உட்கார்ந்து பள்ளிகளில் பாடம் படித்தோம். இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். இதனால் உடல் நலமாக இருந்தது. மூட்டுகள் பலமாக இருந்தன. டாக்டர்களிடம் அதிகம் சென்றதில்லை. அதனால் பர்சும் கனமாகவே இருந்தது. சேமிப்பும், உடல் நலமும் கூடியது. தைக்கால், பத்தமடை என்ற ஊர்கள் பாய் விற்பனைக்கு பலம் சேர்த்தன. காலங்கள் மாறின, வருடங்கள் ஓடின. பாய்கள் சுருட்டி பரணில் வைக்கப்பட்டன. அப்போதெல்லாம் கட்டில், பீரோ செய்ய வேண்டுமென்றாலும் கூட நம் வீட்டுக்கென ஒரு ஆசாரி இருப்பார். அவர் நம் வீட்டிற்கே வந்து பல நாட்கள் தங்கி மரங்களை இழைத்து, இழைத்து செய்து தருவார். அவையும் பல காலம் உழைக்கும்.
முன்பெல்லாம் சிலரின் வீடுகளில் மட்டுமே இருந்த கட்டில், பீரோ, மெத்தைகள், வார்ட் ரோப், டேபிள், சேர் ஆகியவை, இன்று இல்லாத வீடே இல்லை என்ற அளவிற்கு வந்து விட்டது. பல ஆர்கனைஸ்டு பர்னீச்சர் கம்பெனிகள் பின்னர் வந்தன. இவற்றில் பல காணாமலும் போயின.
இந்த துறையின் தற்போதைய மார்க்கெட் மதிப்பு 16 பில்லியன் டாலர் (112,000 கோடி ரூபாய்கள்) ஆகும். இன்னும் 5 வருடத்தில் இது 25 பில்லியன் டாலர் (175,000 கோடி ரூபாய்) மதிப்புள்ளதாக அதிகரிக்க உள்ளது. இந்தத் துறையில் அன் ஆர்கனைஸ்ட் (UNORGANISED) லோக்கல் கம்பெனிகள் தாம் பெரிய இடத்தை பிடித்துள்ளன. அதாவது தற்போது சுமார் 95 சதவீதம் வரை இருக்கின்றன. இது இன்னும் 5 வருடத்தில் 90 சதவீதமாக குறையும்.
இதிலிருந்து இந்த துறையில் ஒரு பெரிய பிசினஸ் ஆப்பர்சூனிட்டி இருக்கிறது என்று உங்களுக்கு புரியவில்லையா? ஆனால் இன்று பல பெரிய கம்பெனிகளுக்கு புரிந்திருக்கிறது.
ஆமாம், தடதடவென பல பெரிய கம்பெனிகள் ரெடிமேட் பர்னீச்சர் விற்பனையில் களம் இறங்கியுள்ளன. இந்த நிறுவனங்கள் விலை உயர்ந்த பர்மா தேக்கு, ரோஸ் வுட் ஆகியவற்றில் எல்லாம் பர்னீச்சர் செய்வதில்லை. ப்ளைவுட் அல்லது விலை குறைந்த ரப்பர் வுட் ஆகியவற்றிலிருந்து பர்னீச்சர்களை தயாரித்து குறைந்த விலையில் அளிக்கின்றன.
இப்போது பர்னீச்சர் வாங்குபவர்களும், இளைஞர்களும் அவை ஐந்து வருடம் உழைத்தால் போதும் என்ற எண்ணத்தில்தான் வாங்குகின்றனர். காரணம் புதிது, புதிதாக மாற்றிக் கொண்டிருப்பதில் அவர்களுக்கு ஒரு மகிழ்ச்சி.
இந்த மார்க்கெட் மதிப்பு தெரிந்துதான் உலகத்தின் பெரிய பர்னீச்சர் ரீடெய்லரான ஐக்கியா (IKEA) இந்தியாவில் களம் இறங்கியிருக்கிறது. ஹைதராபாத்தில் ஒரு மிகப்பெரிய ஷோ ரூமை 400,000 சதுர அடியில் திறந்துள்ளது.
பிளிப்கார்ட், தங்களுக்கென பர்பெக்ட் ஹோம் ஸ்டூடியோ (PERFECT HOME STUDIO) என்ற கம்பெனியை ஆரம்பித்திருக்கிறது. பிடிலைட் (பெவிகால் தயாரிக்கும் கம்பெனி) பெப்பர் ப்ரை என்ற பர்னீச்சர் விற்பனை கம்பெனியில் முதலீடு செய்திருக்கிறது. ரிலையன்ஸ் இன்னும் களத்தில் இறங்கவில்லை.
பெரிய ஜாம்பவான்களான ரிலையன்ஸ் ரீடெய்ல், பிக் பஜார், டி-மார்ட், அமேசான், பிளிப்கார்ட் போன்ற கம்பெனிகள் வந்ததிலிருந்து சிறிய கடைகள் அவர்களிடம் போட்டி போட வேண்டிய ஒரு சூழ்நிலை
ஒரு நாள் சான்ஃப்ரான்சிஸ்கோ காஃபி ஷாப்பில் அமர்ந்திருக்கும்போது, தான் ஆரம்பிக்க இருக்கும் நிறுவனத்துக்கு `அலிபாபா’ என பெயர் வைத்தால் எப்படியிருக்கும் என யோசித்துக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு அங்கு காஃபி கொண்டுவந்த பணியாளப் பெண்ணிடம் `அலிபாபா’ என்றால் என்னவென்று தெரியுமா எனக் கேட்க அவர், `ஓப்பன் சீசேம் (திறந்திடு சீசேம்)” என பதிலளித்தார்