ஈகிளாஸோபீடியா (https://eclassopedia.com/ ) டெல்லியில் செய்த அதிசயம் என்ன தெரியுமா? சுமார் 300 பெண் ஆசிரியைகளை தங்களுடன் இணைத்துக் கொண்டு இந்த ஸ்டார்ட் அப் எப்படி செயல்படுகிறது தெரியுமா? அதாவது தங்களுடன் இணைத்துக் கொண்டுள்ள ஆசிரியைகளை வைத்து ஆன்லைன் மூலமாக இந்தியாவிலும், உலகளவிலும் உள்ள மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக பாடங்கள் நடத்தி வருகிறது. இந்த பெண் ஆசிரியைகள் திருமணத்திற்கு பின் பல்வேறு காரணங்களால் வேலையை விட்டு விட்டு பின்னர் சிறிது காலம் கழித்து வேலைக்கு செல்ல வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த கம்பெனியில் இணைத்துக் கொள்ளப்படுகின்றனர்.
சவீதா கார்க் என்ற பெண்மணியால் ஐந்து லட்சம் ரூபாய் மூலதனமாகப் போட்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த ஸ்டார்ட் அப் கம்பெனி, 2018-19ம் வருடத்தில் சுமார் 44 லட்சம் ரூபாய் வருமானம் ஈட்டியிருக்கிறது. வரும் வருடத்தில் சுமார் 1 கோடி ரூபாய் ஈட்டுவதற்கு முயற்சிகள் எடுத்து வருகிறது.
லைவ் வீடியோ மற்றும் லைவ் ஒயிட் போர்டு ஆகியவைகளின் உதவியால் சுமார் 50 சப்ஜெக்ட்களில் மாணவர்களுக்கு ஆசிரியைகளால் பாடங்கள் நடத்தப்படுகின்றன. இந்த பாடங்களில் ஸ்பானிஷ், ப்ரெஞ்ச், போர்ச்சுகீஸ் ஆகியவைகளும் அடங்கும். மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளை தேர்ந்தெடுக்க காரணம் வீட்டில் இருந்தே பாடங்களை புரிந்து கொள்ளலாம் (டியூஷன் சென்டர் போகும் நேரம் மிச்சம்), மேலும் மாணவர்கள் நேரத்திற்கு தகுந்தாற் போல் பாடங்கள் கற்றுக் கொடுக்கப்படுகின்றன.
தற்போது 30 நாடுகளில் உள்ள 600 மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தப்படுகின்றன. ஒரு மணி நேரத்திற்கு ரூபாய் 500 முதல் 1500 வரை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.