பொதுவாக மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்றால் ஆர்கானிக் என்ற ஒரு சர்டிபிகேட்  அல்லது லேபிள் வாங்கி விட்டால் போதும் என்று.  அது தவறு. இயற்கை வளங்களை உபயோகப்படுத்துவதிலும், தரத்திலும் நாம் உயர்வாக இருக்க வேண்டும். அப்போது தான் ஆர்கானிக் பொருட்கள் சிறப்படையும், விரும்பப்படும், விற்பனை கூடும்.

2018-19 ம் வருடத்தில் இந்தியா சுமார் 5151 கோடி ரூபாய் அளவிற்கான ஆர்கானிக் பொருட்களை ஏற்றுமதி செய்துள்ளது.  இது  2017-18 ம் வருடத்தில் செய்த ஏற்றுமதியான  3453 கோடி ரூபாயை விட 49 சதவீதம் அதிகமாகும்.

ஆர்கானிக் பொருட்களில்  அதிக அளவு வாங்கப்படும் பொருட்கள் flax seeds, sesame and soybean,  pulses such as arhar (red gram), chana (pigeon pea), rice, tea and medicinal plants  ஆகும்.

ஆர்கானிக் பொருட்களை இந்தியாவிலிருந்து அதிக அளவில் வாங்கும் நாடுகளாக அமெரிக்கா மற்றும் ஜெர்மனி திகழ்கின்றன.   இது தவிர தென் கொரியா, ஐரோப்பிய யூனியன் நாடுகள், கனடா, ஆஸ்திரேலியா, இஸ்ரேல்,  வியட்நாம்,   நியூசிலாந்து, ஜப்பான் ஆகிய நாடுகளும் நம்மிடமிருந்து   ஆர்கானிக் பொருட்களை வாங்குகின்றனர்.

இந்தியாவில் 31 மார்ச் 2019 வரை 3.56 மில்லியன் ஹெக்டேர் அளவு நிலத்தில் ஆர்கானிக் பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.  மத்திய பிரதேச மாநிலம் அதிக அளவு ஆர்கானிக் நிலங்களை கொண்டுள்ளது.  அதைத் தொடர்ந்து ராஜஸ்தான், மகாராஷ்டிரா, உத்திரப்பிரதேசம் ஆகியவை  வருகின்றன. 

2016 ம் வருடம் சிக்கிம் மாநிலம் ஒரு மிகப் பெரிய சாதனையை செய்தது.  அதாவது அவர்களிடம் இருக்கும் உபயோகப்படுத்தக்கூடிய 70,000 ஹெக்டேர் நிலத்தையும் ஆர்கானிக் நிலமாக மாற்றி விவசாயம் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள்.

2019 ம் வருடம் 2.67 மில்லியன் டன் ஆர்கானிக் பொருட்களை உற்பத்தி செய்துள்ளது.

Spread the lovely business news