கோவிட்-19 தொற்றின் மூலம் உலகையே அடங்கிக் கிடக்கச் செய்து பொருளாதார நலிவு ஏற்படக் காரணம் சீனாதான் என அமெரிக்கா குற்றஞ்சாட்ட, சீனாவிலிருந்து வெளியேறும் நிறுவனங்களை வரவேற்க பல நாடுகள் சிவப்புக் கம்பளம் விரித்துக் காத்திருக்கிறது. சீனாவில் ஒரு ஏழ்மைக் குடும்பத்தில் பிறந்து கோடீஸ்வரியான செள குன்ஃபே
இந்த கொரோனா காலத்தில் பெரும்பாலான சிறிய கடைகள் திறந்து வைத்து மக்களுக்கு சேவைகள் செய்தன என்பதை யாரும் மறுக்க முடியாத உண்மை. அவர்கள் கடைகளை திறந்து வைக்காவிடில் பலருக்கு பொருட்கள் கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டிருக்கும். ஆன்லைன் ஷாப்பிங் வந்த பிறகு பலரும் மறந்திருந்த மளிகை / கிரானா கடைகள் மீண்டும் மக்களின் கண்களுக்கு தெரிய ஆர்ம்பித்ததோடு அவர்களின் மனதிலும் நீங்கா இடம் பெற்றுவிட்டது.
ஊரடங்கு முடக்க நிலை படிப்படியாக தளர்த்தப்படும் சூழலில் மக்கள் ஒன்று கூடும் இடங்களில் சானிடைசர் கொண்டு கைகளை சுத்தப்படுத்துவது கட்டாயமாகிறது. அத்தகைய சானிடைசர் கிருமி நாசினியை பலரும் கையால் தொட்டு பயன்படுத்துவது பாதுகாப்பற்றது.
தொழில் தொடங்க தேவையான நிதி திரட்டுவதில் உள்ள சிரமம்தான் சிறு தொழில் முனைவோருக்கான முதல் சவால். அடுத்தசவால், தொழில் நடத்த தேவையான நடைமுறை மூலதனம் (Working capital).ஏற்கனவே பொருளாதாரம் மந்த நிலையில் உள்ளது. தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு எந்த அளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை யாரும் உறுதிப்படக் கூற முடியாது. இந்த சூழ்நிலையில் சிறு தொழில் முனைவோர்கள் தங்களது நடைமுறை மூலதனத்தை சரியாக கையாள்வதில் கவனம் அதிகம் வேண்டும். சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் (MSME) வளர்ச்சிகளுக்காக மத்திய அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்த வண்ணம் உள்ளது. அவற்றில் குறிப்பிடத்தக்க திட்டம் ‘முத்ரா’ கடன் திட்டம்.
கொரோனா வைரஸ் உலகெங்கும் பரவியதால் பல கம்பெனிகள் நீங்கள் வீட்டிலிருந்தே அலுவலக வேலைகளை செய்யலாம் என பச்சைக் கொடி அசைத்து விட்டனர். எனவே முழு இயக்கமும் நின்றுவிடாமல் ஓடிக்கொண்டிருக்கிறது. வீட்டிலிருந்து வேலை செய்வதால் பல அசௌகரியங்கள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. குறிப்பாக அலுவலகங்களில் நடைபெறும் மீட்டிங், பிரசன்டேஷன் போன்ற நிகழ்வுகள் நடக்காமல் இருக்க வாய்ப்புகள் உண்டு.
கொரோனா தொற்று வந்தவர்கள் உயிர் பிழைக்க மிகவும் அவசியம் வெண்டிலேட்டர். காரணம் இந்த கிருமிகள் சுவாசக் குழாயில் சென்று அந்த நோயாளியை மூச்சு விட சிரமமாக்கி விடுகிறது. இதனால் அவர் குணமடையும் வரை அந்த நோயாளிக்கு வெண்டிலேட்டரின் உதவி மிகவும் அவசியம். மருத்துவமனைகள் வைத்திருக்கும் வெண்டிலேட்டர்கள் லட்சக்கணக்கில் (சுமார் 600,000 ரூபாய்) விலையாக இருப்பதாலும், பற்றாக்குறையாக இருப்பதாலும் நோயாளிகளுக்கு தற்போதைய முக்கிய தேவையான வெண்டிலேட்டர்களை தயாரிக்க உடனடியாக களம் இறங்கியிருப்பவை சில ஸ்டார்ட் அப் கம்பெனிகள்.
கொரோனா வைராஸால் பாதிக்கப்பட்ட கம்பெனிகளுக்கு எழும் தற்காலிக பணப்புழக்க தட்டுப்பாட்டை சரி செய்வதற்காக தற்காலிக கடன் வசதியை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா ஏற்படுத்தியிருக்கிறது