கொரோனா தொற்று வந்தவர்கள் உயிர் பிழைக்க மிகவும் அவசியம் வெண்டிலேட்டர்.  காரணம் இந்த கிருமிகள் சுவாசக் குழாயில் சென்று அந்த நோயாளியை மூச்சு விட சிரமமாக்கி விடுகிறது. இதனால் அவர் குணமடையும் வரை அந்த நோயாளிக்கு வெண்டிலேட்டரின் உதவி மிகவும் அவசியம். மருத்துவமனைகள் வைத்திருக்கும் வெண்டிலேட்டர்கள் லட்சக்கணக்கில் (சுமார் 600,000 ரூபாய்) விலையாக இருப்பதாலும், பற்றாக்குறையாக இருப்பதாலும் நோயாளிகளுக்கு தற்போதைய முக்கிய தேவையான வெண்டிலேட்டர்களை தயாரிக்க உடனடியாக களம் இறங்கியிருப்பவை சில ஸ்டார்ட் அப் கம்பெனிகள்.

தீபக் அகர்வால் என்ற நியூரோ சர்ஜன் கண்டுபிடித்த கையில் எடுத்து செல்லக் கூடிய (PORTABLE) டோஸ்டர் சைஸ் (TOASTER SIZE) அளவில் உள்ள வெண்டிலேட்டர்களை அக்வா ஹெல்த்கேர் (AGVA HEALTHCARE) மாதம் 500 தயாரித்து கொண்டிருத்த கெபாசிட்டியை 20,000 தயாரிக்கும் அளவிற்கு கூட்டியிருக்கிறது. எப்படி இவர்களால் உற்பத்தி  கெபாசிட்டியை உடனடியாக கூட்ட முடிந்தது என்றால் அதற்கு உதவி செய்தது கார் தயாரிக்கும் மாருதி  கம்பெனி.

இந்த வெண்டிலேட்டர்கள் விலையும் சுமார் 140,000 ரூபாய் வரைதான் என்பது குறிப்பிடதக்கது.

இது தவிர ONEBREATH, BIODESIGN INNOVATION LABS ஆகிய ஸ்டார்ட் அப் கம்பெனிகளும் விலை குறைந்த வெண்டிலேட்டர்கள் தயாரிக்கின்றன.

Spread the lovely business news