2800 ஆண்டுகளுக்கு முன்பு உலகிலேயே முதன் முதலில் ஆந்திரா-கோல்கொண்டாவில்தான் வைரங்கள் கண்டெடுக்கப்பட்டன. வைரங்களை பட்டை தீட்டும் முறையையும் இந்தியர்கள்தான் முதன் முதலில் கண்டுபிடித்தனர். இன்றைக்கு உபயோகிக்கும் வைரங்களில் மிகவும் வயது குறைந்த வைரம்
இன்று சிறிய அளவில் பிசினஸ் செய்கிறவர்களுக்கு இருக்கும் ஒரு பெரிய கஷ்டம் என்னவென்றால், யார் யாருக்கு என்னென்ன கடன்கள் கொடுத்திருக்கிறோம் என்பதை குறித்து வைத்து கொள்வதுதான். விற்கும் போது சின்ன சின்ன துண்டு சீட்டில் எழுதி வைத்துவிட்டு அப்படியே மறந்து விடுவது வழக்கம். பின்னர் அந்த பணத்தில் பாதி வராமல் போய்விடும்.
கிராமங்களில் பசுமாடு வளர்ப்பவர்கள் சீம்பால் பற்றி நிச்சயம் அறிந்திருப்பார்கள். ஆனால் நகரவாசிகள் பெரும்பாலானவர்களுக்கு சீம்பால் மற்றும் அதன் நன்மைகள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. பசு கன்று போட்டதும் முதல் மூன்று நாட்கள் வரும் பாலைத்தான் சீம்பால் என்று அழைப்பார்கள். அதில் இருக்கும் சத்துக்கள் வீணாகாமல் பதப்படுத்தி தூளாக்கி சந்தைப்படுத்தும் ஸ்டார்ட் அப் தொழிலைத் நடத்தி வருகிறார் சென்னையைச் சேர்ந்த எஸ். முரளி.
அந்தக் காலத்தில் தரையில் படுத்து உறங்கினோம், தரையில் உட்கார்ந்து சாப்பிட்டோம், தரையில் உட்கார்ந்து பள்ளிகளில் பாடம் படித்தோம். இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். இதனால் உடல் நலமாக இருந்தது. மூட்டுகள் பலமாக இருந்தன. டாக்டர்களிடம் அதிகம் சென்றதில்லை. அதனால் பர்சும் கனமாகவே இருந்தது. சேமிப்பும், உடல் நலமும் கூடியது. தைக்கால், பத்தமடை என்ற ஊர்கள் பாய் விற்பனைக்கு பலம் சேர்த்தன. காலங்கள் மாறின, வருடங்கள் ஓடின. பாய்கள் சுருட்டி பரணில் வைக்கப்பட்டன. அப்போதெல்லாம் கட்டில், பீரோ செய்ய வேண்டுமென்றாலும் கூட நம் வீட்டுக்கென ஒரு ஆசாரி இருப்பார். அவர் நம் வீட்டிற்கே வந்து பல நாட்கள் தங்கி மரங்களை இழைத்து, இழைத்து செய்து தருவார். அவையும் பல காலம் உழைக்கும்.
முன்பெல்லாம் சிலரின் வீடுகளில் மட்டுமே இருந்த கட்டில், பீரோ, மெத்தைகள், வார்ட் ரோப், டேபிள், சேர் ஆகியவை, இன்று இல்லாத வீடே இல்லை என்ற அளவிற்கு வந்து விட்டது. பல ஆர்கனைஸ்டு பர்னீச்சர் கம்பெனிகள் பின்னர் வந்தன. இவற்றில் பல காணாமலும் போயின.
இந்த துறையின் தற்போதைய மார்க்கெட் மதிப்பு 16 பில்லியன் டாலர் (112,000 கோடி ரூபாய்கள்) ஆகும். இன்னும் 5 வருடத்தில் இது 25 பில்லியன் டாலர் (175,000 கோடி ரூபாய்) மதிப்புள்ளதாக அதிகரிக்க உள்ளது. இந்தத் துறையில் அன் ஆர்கனைஸ்ட் (UNORGANISED) லோக்கல் கம்பெனிகள் தாம் பெரிய இடத்தை பிடித்துள்ளன. அதாவது தற்போது சுமார் 95 சதவீதம் வரை இருக்கின்றன. இது இன்னும் 5 வருடத்தில் 90 சதவீதமாக குறையும்.
இதிலிருந்து இந்த துறையில் ஒரு பெரிய பிசினஸ் ஆப்பர்சூனிட்டி இருக்கிறது என்று உங்களுக்கு புரியவில்லையா? ஆனால் இன்று பல பெரிய கம்பெனிகளுக்கு புரிந்திருக்கிறது.
ஆமாம், தடதடவென பல பெரிய கம்பெனிகள் ரெடிமேட் பர்னீச்சர் விற்பனையில் களம் இறங்கியுள்ளன. இந்த நிறுவனங்கள் விலை உயர்ந்த பர்மா தேக்கு, ரோஸ் வுட் ஆகியவற்றில் எல்லாம் பர்னீச்சர் செய்வதில்லை. ப்ளைவுட் அல்லது விலை குறைந்த ரப்பர் வுட் ஆகியவற்றிலிருந்து பர்னீச்சர்களை தயாரித்து குறைந்த விலையில் அளிக்கின்றன.
இப்போது பர்னீச்சர் வாங்குபவர்களும், இளைஞர்களும் அவை ஐந்து வருடம் உழைத்தால் போதும் என்ற எண்ணத்தில்தான் வாங்குகின்றனர். காரணம் புதிது, புதிதாக மாற்றிக் கொண்டிருப்பதில் அவர்களுக்கு ஒரு மகிழ்ச்சி.
இந்த மார்க்கெட் மதிப்பு தெரிந்துதான் உலகத்தின் பெரிய பர்னீச்சர் ரீடெய்லரான ஐக்கியா (IKEA) இந்தியாவில் களம் இறங்கியிருக்கிறது. ஹைதராபாத்தில் ஒரு மிகப்பெரிய ஷோ ரூமை 400,000 சதுர அடியில் திறந்துள்ளது.
பிளிப்கார்ட், தங்களுக்கென பர்பெக்ட் ஹோம் ஸ்டூடியோ (PERFECT HOME STUDIO) என்ற கம்பெனியை ஆரம்பித்திருக்கிறது. பிடிலைட் (பெவிகால் தயாரிக்கும் கம்பெனி) பெப்பர் ப்ரை என்ற பர்னீச்சர் விற்பனை கம்பெனியில் முதலீடு செய்திருக்கிறது. ரிலையன்ஸ் இன்னும் களத்தில் இறங்கவில்லை.
பலருக்கு பல சமயங்களில் ஒரு முறை அணிந்த உடைகளை மீண்டும் அணிவது பிடிக்காது. ஒவ்வொரு முறையும் வித்தியாசமான புதிய உடைகளை அணிவது பிடிக்கும்
முன்பு பாக்குமட்டை என்பது அழுகி அழியக்கூடியது என்பதாகக் கருதி அதை ஒதுக்கி வைத்திருந்தனர். ஆனால் இவர் இதற்குப் பலவித உருவங்கள் கொடுத்து உண்ணும்போது பரிமாறப் பயன்படுத்தக்கூடிய தட்டுகள், கப், காபி கப், கிளாஸ் இப்படியாகப் பல பொருட்களாக மாறி, இவை விருந்தோம்பலில் மிக முக்கியமான இடத்தைப் பிடித்துவிட்டது என்றால் மிகையாகாது.
கார்மெண்ட் இண்டஸ்டிரியின் முக்கியமான தேவை பேப்ரிக்ஸ் தான். பலருக்கு எங்கு என்ன மாதிரி பேப்ரிக்ஸ் கிடைக்கின்றன, எங்கு வாங்குவது என்ற குழப்பங்கள் ஏற்படும். இதையெல்லாம் தவிர்க்கவும், உங்கள் கம்பெனியில் நீங்கள் கார்மெண்ட் உற்பத்தி செய்தது போக மீதமுள்ள துணிகளை (பேப்ரிக்ஸ்) விற்கவும் ஒரு மார்க்கெட் இருந்தால் எப்படி இருக்கும்
நம்முடைய டிஸைனை நாம் ஏன் நமது டி சர்ட்டில் போடக் கூடாது, நாமே ஏதாவது டிசைனை செலக்ட் செய்து அதை ஏன் துணியில் பிரிண்ட் செய்து வாங்கக்கூடாது. இவையெல்லாம் தற்போது நடைமுறை சாத்தியமாகி விட்டது
அன்றாட தேவைகளுக்கு நவீன முறையில் தீர்வுகளை சுலபமாக வழங்குவதே இவர்களது நோக்கம். ஆமாம் ரொம்ப சிம்பிளாக உங்கள் சட்டை பாக்கெட்டில் சூப்பர் மார்க்கெட்டை செயல்பட வைத்திருக்கிறார்கள்.
அடுத்த வருடம் நுகர்வோர்களின் தேவைகளில் என்னென்ன மாற்றங்கள் வரும் என்பது பலருக்கு தெரியாமல் இருக்கும் சூழ்நிலையில், சிறிய மற்றும் நடுத்தர கம்பெனிகளின் உரிமையாளர்களிடம் சென்று அடுத்த பத்து வருடங்களை பற்றி தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள், அப்படி தெரிந்து வைத்துக் கொண்டால்தான் உபயோகிப்பாளர்களின் மனங்களை புரிந்து கொண்டு நீங்கள் அதற்கு தகுந்தாற்போல் உங்களுடைய தயாரிப்புகளை நுகர்வோர்களிடம் கொண்டு செல்ல முடியும் எனக் கூறினால்