“மிட்டா மிராசு” என சொல்வது போல் பெங்களூருவில் “மிட்டா பேப்பர்ஸ்” (Mitta Papers) என்ற நிறுவனம் டிஷ்யூ பேப்பர்ஸ் உற்பத்தியில் கொடிகட்டி பறக்கும் செய்தி அறிந்து அதன் நிறுவனர் திரு. சிவக்குமார் அவர்களை அலைபேசியில் தொடர்பு கொண்டேன். பேச்சில் பழுத்த அனுபவம் பிரதிபலித்தது. 

2008 ல் தொடங்கி இப்போது இந்தியாவில் இருக்கும் மூன்று முன்னணி டிஷ்யூ பிராண்டில் தனது மிட்டாவும் ஒன்று எனப் பெருமைப்பட்டுக் கொண்டார்.

“சுற்றுசூழல் பாதுகாப்பு கருதி அதிநவீன இயந்திரங்களை கொண்டு குறைந்த விலையில் உயர்தரமான டிஷ்யூ பேப்பர்களை உற்பத்தி செய்து தருகிறோம்” என்றார். இந்த  டிஷ்யூக்களில் பல ரகங்கள் உண்டு. பாக்கெட் டிஷ்யூ, கிச்சன் டிஷ்யூ ரோல், முக டிஷ்யூ மற்றும் டிஷ்யூ ரோல் போன்று பல தயாரிப்புகள். 

இவரது அபார வளர்ச்சி குறித்து குறிப்பிடுகையில்… 

பொருள் தயாரிப்புக்கு இணையாக மேல் பேக்கிங் கவரும் இருக்கவேண்டும்.  இது ஒரு விதத்தில் நமது வாடிக்கையாளர்களை கௌரவப்  படுத்துவதாகும் என்றார். கடைகள்,  சூப்பர் மார்க்கெட் போன்றவற்றில் வாங்கும்போது வாடிக்கையாளர்களை முதலில் கவர்வது  அந்த பேக்கிங்தான்.  அந்த கவர்ச்சி பேக்கிங் பொருளை கையில் எடுத்துப் பார்க்க வைக்கிறது, பின்னர் வாங்கவும் செய்கிறது  என தனது வியாபார ரகசியத்தை கூறினார். 

எது ஒன்றிலும் அழகு மிக முக்கியம்,  அழகுக்கு மயங்காதவர்கள் உண்டா? அதுபோலவே உங்கள் தயாரிப்பின் மீது வாடிக்கையாளரின்  பார்வை பட வேண்டுமெனில் பேக்கிங் அழகாக இருக்க வேண்டும்.  வியாபாரத்தில் அழகு எவ்வளவு முக்கியம் என்ற  வித்தியாசமான கருத்தை நமது கவனத்திற்கு கொண்டுவருகிறார்.   நல்ல பேக்கிங் என்பது ஒருவிதத்தில் அது முதலீடாக கருத வேண்டும் எனக் கூறினார். 

“மிட்டா” என்ற பெயர் குறித்து கேட்கையில்,  ‘மிட்டா மிராசு’ போல தொழிலில் ஜொலிக்க வேண்டும் என்ற எண்ணம் என்றார்.

ஒட்டுமொத்தத்தில் சிவக்குமார் அவர்கள் ‘பெரிதினும் பெரிது கேள்’ எனும்  பாரதியார் சொல்லுக்கு  ஏற்றவாறு கற்பனையும்,  கனவுகளும் எல்லாமே மலை அளவுக்கு கொண்டுள்ளார்.  தனது கற்பனைகளும் கனவுகளும் நனவாக தான்  பட்ட சிரமங்கள் குறித்து அவர் விளக்கும்போது “அடேங்கப்பா” என மலைக்க வைத்தது.  

ஒரு பொருளுக்கு பிராண்டு மிக முக்கியம் என்றார். 

“You built a brand… you can built an empire” என எங்களின் உரையாடல் சமயத்தில் அடிக்கடி கூறிய அவர் நமது இதழில் குறிப்பிடவும் கேட்டுக்கொண்டார். 

பிராண்ட் உருவாக்குவது சிரமமாக இருக்கும்.  பின்னர் அந்த பிராண்ட் உங்களைப் பற்றியும் உங்கள் தயாரிப்புகளை பற்றியும் பேசும்.  பிராண்ட் உங்களை வளர்ச்சி பாதையில்  கொண்டு செல்லும்.  தனது பெயருக்கு பதிலாக தனது பிராண்ட் பெயர் சொல்லி மற்றவர் தன்னை அழைக்க வேண்டும் என்பது அவரின் பேரவா.  அதுமட்டுமல்லாமல் பல நூறு ஆண்டுகள் தனது பிராண்டும்  நிறுவனமும்  நிலைத்து பெயர் சொல்ல வேண்டும் என்பது ஆசையாம்.  

வியாபாரம் தொடங்கிய பின்னணி..  

2008 வாக்கில் பெங்களூருவில் புற்றீசல் போல் நிறைய பியூட்டி  பார்லர்கள் முளைத்தன.  அதற்கு டிஷ்யூ பேப்பர் நிறைய பயன்படுத்த வேண்டி வரும் என தனது தொலைநோக்கு பார்வை தான் இந்த தொழில் தொடங்க வைத்தது என்றார். 

தனது குழந்தைப் பருவம்,  வறுமை  காலத்தில்  தோளில் தூக்கி வளர்த்த தனது தந்தையார் அமரர் அசோக்குமார் அவர்களை அவ்வப்போது நினைவுபடுத்திக் கொள்ளவும் தவறவில்லை. 

2008 ல் தொழில் தொடங்க முதலீடு கையில் இல்லாத சூழ்நிலையில் “துணையாக நான் இருக்கிறேன்” என அவரது துணைவியார் தனது நகைகளை கழற்றி கொடுத்து உற்சாகப்படுத்தியதுதான் இன்று இந்த உயர்வுக்கு காரணம் என தன் இல்லத்தரசியை நன்றியுடன் நினைவு கூற மேலும் சிறக்க வேண்டும் என வாழ்த்து கூறி விடை பெற்றேன்.  

தொடர்புக்கு : 99723 03391

வெப்சைட்    : www.mittapapers.com

Spread the lovely business news