‘Ethically’ என்ற வார்த்தைக்கு தமிழ் அகராதியில் பொருள் தேடினால், “நேர்மையான”, “நெறிமுறையான” என்ற அர்த்தங்களை சொல்லும்.
இந்தியாவில் இருக்கும் கம்பெனிகள் நேர்மையாக நெறிமுறையில் நடக்கின்றனவா என்று அரசாங்கம் ஒவ்வொரு நிறுவனத்தையும் கண்காணிக்க முடியாது. எனவே கம்பெனிகளை கண்காணித்து, ஆய்வு செய்து அதற்கு சான்றிதழ்களை வழங்க நிறுவனங்கள் தேவை. இந்திய நிறுவனங்கள் இப்போது பன்னாட்டு நிறுவனங்களுக்கு சரக்குகள் தயார் செய்து தருவதால், இது போன்ற சேவை நிறுவனங்களுக்கு தேவை அதிகரித்து வருகிறது.
ஸ்டார்ட் அப் கம்பெனியாக ஆரம்பிக்கப்பட்டிருக்கும் Ethically Inc – இந்தியாவை தளமாகக் கொண்ட சப்ளை செயின் & சஸ்டைனபிலிட்டி மேனேஜ்மென்ட் சிஸ்டம் சேவை நிறுவனம். இது ஜனவரி 2020 இல் தொடங்கி மார்ச் 2020 இல் ஸ்டார்ட் அப் இந்தியா திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டது.
இந்த நிறுவனத்தை, தேசிய அளவில் புகழ்பெற்ற, பொறுப்புள்ள வணிக மேலாண்மை நிபுணர்களில் ஒருவரான நீலமேகம் சோனைமுத்து மூவெந்திரன் அவர்கள் தொடங்கினார்கள். இவர் B.Sc., M.B.A., மற்றும் Standards, C.S.R., (கார்ப்பரேட் சமூக பொறுப்பு) மற்றும் Supply chain management ஆகியவற்றில் பட்டமும், பட்டயமும் பெற்றவர்.
இந்த தொழிலில் 10 ஆண்டுகளுக்கு மேலான அனுபவம் கொண்ட வல்லுனர்களை இணைத்து இவர்களின் இரு கம்பெனிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
இந்த கம்பெனி பணியிட மதிப்பீடுகள், ஆலோசனை, பயிற்சிகள் மற்றும் பணியிட மேம்பாட்டு சேவைகளை வழங்குகிறது.
Ethically Inc நிறுவனத்தின் முதல் இரண்டு வணிக முயற்சிகள்:
www.GoEthiGo.com
இந்த பிரிவின் தனித்துவமான சேவை என்னவென்றால், ‘குறைகள் இல்லாத பணியிடமாக’ மாற்ற விரும்பும் உங்கள் நிறுவனங்களை ஆதரிக்கும் நோக்கத்துடன் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தில் உள் புகார் கமிட்டி (Internal Complaints Committee) நிர்வாகத்தின் சட்ட தேவைகளையும் பூர்த்தி செய்கிறார்கள்.
முதலில் வேலை செய்யும் இடங்களுடன் ஒரு வருட காலத்திற்கு ஒப்பந்தம் செய்கிறார்கள். பிறகு அந்த கம்பெனியின் பணியிட குறைகளை (பொது, துன்புறுத்தல் மற்றும் துஷ்பிரயோகம்) எங்கள் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ‘குறை தீர்க்கும் மேலாண்மைத் திட்டத்தைப்’ பயன்படுத்தி கண்காணிக்கிறாரக்ள். குறைகளை பெறுதல், பகுப்பாய்வு செய்தல் மற்றும் ‘தனிப்பட்ட ஆன்லைன் / ஆஃப்லைன் கணக்கெடுப்பு’ மற்றும் பல்வேறு விழிப்புணர்வு / பயிற்சி திட்டங்கள் மூலம் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளை இவர்கள் தெளிவுபடுத்துகிறார்கள்.
எந்தவிதமான குறைகளும் இல்லாமல் ஒரு வருடம் வெற்றிகரமாக முடிந்த பிறகு, பணியிடமானது ‘‘குறைகள் இல்லாத பணியிடம்’’ என்ற குறிச்சொல்லைப் பயன்படுத்தலாம், அதற்காக ஒரு சான்றிதழை வழங்குகிறார்கள். குறைகள் இருந்தால் சான்றிதழ் வழங்கப்படமாட்டாது.
www.StandardsBazar.com
சப்ளை செயின் & சஸ்டைனபிலிட்டி, மற்றும் மேலாண்மை அமைப்பு தொழிலுக்கான டிஜிட்டல் மையம்.
இந்த கம்பெனியை உருவாக்க இவர்கள் ஏறத்தாழ இரண்டு ஆண்டுகள் உழைத்திருக்கிறார்கள். சப்ளை செயின் மேனேஜ்மெண்ட் துறையில் இந்தியா மற்றும் உலகளாவிய தொழில்களில் ஆயிரக்கணக்கான தரநிலைகள் (ஐஎஸ்ஓ 9001, ஐஎஸ்ஓ 14000, எஸ்ஏ 8000, GOTS, WRAP, BSCI, Higgs, COC போன்றவை) உள்ளன.
இவர்களின் 20 வருடத்திற்கு மேலான அனுபவத்தை பயன்படுத்தி, பங்குதாரர்களுக்கு (வாடிக்கையாளர்கள், தணிக்கை நிறுவனங்கள், ஆதார நிறுவனங்கள், தணிக்கையாளர்கள், தணிக்கை படிவங்கள், ஆலோசகர்கள் போன்றவை) இல்லாமல் போனவைகளை கவனித்து அவைகளையும் சரி செய்கிறார்கள்.
இப்போது நீங்கள் உங்கள் சப்ளை செயின் & சஸ்டைனபிலிட்டி, மற்றும் மேலாண்மை அமைப்பு தொடர்புடைய தரநிலைகள், சான்றளிக்கப்பட்ட சப்ளையர்கள், சான்றளிக்கப்பட்ட உற்பத்தியாளர்கள், சான்றிதழ் நிறுவனங்கள், ஆலோசகர்கள், தணிக்கையாளர்கள் போன்றவற்றைத் இந்த இணையதளத்தில் தேடலாம், அவர்களுடன் உடனடி தகவல் தொடர்புகளைத் தொடங்கலாம் என்பது இந்த இணையத்தின் ஒரு முக்கிய அம்சம்.
www.standardsbazar.com போர்ட்டலில், நீங்கள் உறுப்பினராக பதிவு செய்தால், உங்கள் கம்பெனியை இந்த இணையதளத்தில் சேர்க்கலாம். இதன் மூலம் பல வசதிகளை பெறும் வாய்ப்புகள் இருக்கிறது.
இது மேலாண்மை அமைப்புகள் தொழிலுக்கான முதல் இந்திய போர்டல் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலே கண்ட சேவைகள் பல கம்பெனிகளுக்கு தேவையாக இருக்கலாம்.
விவரங்களுக்கு 94431 89636
nsmoovendran@gmail.com க்கு எழுதலாம்.