ஸ்டார்ட் அப் கம்பெனிகளின் பெரிய பிரச்சனையே அவர்களின் ஆபீஸ் இடத்திற்கு வாடகை கொடுப்பதுதான். அதாவது அவர்களே தங்களது நிறுவனத்தை நிலை நிறுத்த முயற்சித்துக் கொண்டிருக்கும் போது மனதில் வாடகை மலையாக வந்து பயமுறுத்தும். இதை தவிர்க்கும் விதமாக இந்தியாவின் பல இடங்களிலும் கோ வொர்கிங் ஸ்பேஸ் வந்தது. அவற்றில் எல்லா வசதிகளும் கிடைத்தாலும் வாடகை என்பது சிறிது கூடுதலாகவே இருந்தது தான் ஒரு குறை. இதை போக்கும் விதமாக புதிதாக ஒரு மாடலை, ஒரு ஸ்டார்ட் அப் கம்பெனி கண்டுபிடித்திருக்கிறது. அதாவது ஹோட்டல் அல்லது ரெஸ்டாரெண்ட், விடுதிகள் ஆகியவற்றில் அதிகம் கூட்டம் வராத சமயத்தில் அவர்களின் நாற்காலி, மேசை காலியாகத்தானே இருக்கும். அவற்றை ஒரு மணி நேரத்திற்கு ஒரு நபருக்கு 25 ரூபாய் என்ற வகையில் வாடகைக்கு கோ வொர்கிங் ஸ்பேஸாக கொடுக்க பல இடங்களில் ஒப்பந்தம் போட்டுள்ளார்கள். மேலும் காலியாக இருக்கும் ஆபீஸ் ஸ்பேஸ் போன்றவற்றுடனும் இவர்கள் அரேஞ்ச்மெண்ட் வைத்துள்ளனர்.
இது தவிர மீட்டிங் நடத்த இடங்களையும் ஒரு மணி நேரத்திற்கு 150 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை அரேஞ்ச் செய்து தருகிறார்கள்.
ஸ்டார்ட் அப் ஆரம்பிக்க நினைப்பவர்கள் தாங்கள் வேலை செய்ய வேண்டும் என்றாலோ அல்லது மீட்டிங் நடத்த வேண்டும் என்று நினைத்தாலோ அதை அதிக செலவு இல்லாமல் செய்யலாம்.
கோ ப்ளோட்டர்ஸ் (Go Floaters) என்ற செயலியை தரவிறக்கம் செய்து கொண்டு உபயோகப்படுத்தலாம்.
www.gofloaters.com என்ற இணையதளத்தில் சென்று மேலும் விபரம் பாருங்கள்