முன்பெல்லாம் ஒரு கார் தயாரிக்கும் தொழிற்சாலை ஆரம்பிக்க வேண்டும் என்றால் பல கோடி ரூபாய்களை முதலீடு செய்து, பல வருடங்கள் கழித்துதான் அந்த தொழிற்சாலையைத் தொடங்க முடியும்.
தற்போது சில வருடங்களாக எலெக்ட்ரிக் வாகனங்கள் மிகவும் பிரபலமாகி வருகின்றன. நிர்மலா சீதாராமன் எலெக்ட்ரிக் வாகனங்களின் வருகையால் பெட்ரோல் வாகனங்களின் உபயோகம், விற்பனை குறைந்து வருகிறது என்று சொல்லியது ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம்.
தற்போது இந்தியாவில் சிறிய, பெரிய ஸ்டார்ட் அப் கம்பெனிகள் பல எலக்ட்ரிக் வாகனங்கள் மற்றும் பேட்டரிகளை தயாரிக்கின்றன. அந்த 18 கம்பெனிகள் ஒன்று சேர்ந்து ஒரு ஆட்டோ எக்ஸ்போ டெல்லி நொய்டாவில் வரும் பிப்ரவரி 7 முதல் 12 வரை நடத்தவிருக்கின்றன.
அந்த ஸ்டார்ட் அப் கம்பெனிகளின் பெயர்களை தெரிந்து கொள்வது மிகவும் முக்கியானது.
ஒக்கினாவா ஆட்டோடெக் – குர்காம்,
தேவ்வாத் மோட்டார்ஸ் – ஜெய்ப்பூர்,
ஈவெர்வ் – பூனே,
எம்2கோ – டெல்லி,
ஓம்ஜெய் – ஒரிசா,
ஓ.என்.பி. டெக்னாலஜிஸ் – பெங்களூரு,
சேகல் எல்மோட்டோ – பூனே,
இசட். என். மொபிலிட்டி – டெல்லி,
கபிரா மொபிலிட்டி – கோவா,
சார்ஜெட் ஈ-மொபிலிட்டி – ஹைதராபாத்,
ராப்டீ எனர்ஜி – சென்னை,
ஜித்தேந்திரா ஈ.வி. டெக் – நாசிக்
காப்ரா – மும்பை
இவர்கள் தயாரித்த வாகனங்களை சாலையில் காணும் நாள் தொலைவில் இல்லை.
இந்த கண்காட்சியில் இந்தியாவின் பெரிய கார் தயாரிக்கும் கம்பெனிகளும் கலந்து கொண்டு தங்களின் எலக்ட்ரிக் வாகனங்களை அறிமுகப்படுத்த உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.