இட்லி, தோசை என்றால் மயங்காதவர்கள் இல்லை. வெளிநாட்டுக்காரர்கள் இந்தியா வந்தாலும் சரி, வடநாட்டுக்காரர்கள் ஹோட்டலுக்கு சென்றாலும் சரி அங்கு முதலில் கேட்பது இட்லி, தோசை தான்.
மேலும், இந்தியர்கள் வெளிநாடுகளுக்குச் சென்றால் ஏங்குவது அங்கு இட்லி கிடைக்காதா? தோசை கிடைக்காதா? என்று தான்.
அந்த காலத்தில் வீட்டில் குடைக்கல்லில் மாவு அரைத்தார்கள், அவர்களுக்கு நேரமிருந்தது. அப்போது இட்லி அரைக்கும் கல் நிரந்தரமாக இருக்கும், கை மூலம் குழவி மாவை ஆட்டும். ஆனால் தற்போது மாவு அரைக்கும் இயந்திரத்தில் கல் சுற்றுகிறது, குழவி நிரந்தரமாக இருக்கிறது.
ஆனால் இயந்திரகதியாக ஓடிக்கொண்டிருக்கிற உலகத்தில் இட்லி, தோசைக்கு மாவு அரைப்பது என்பது ஒரு பெரிய வேலை. அதற்கு யாரிடமும் நேரம் இருப்பதில்லை. இதை மனதில் வைத்து பல இடங்களில் சிறிய அளவில் மாவு அரைத்து, பாக்கெட்டில் போட்டு வியாபாரம் செய்து வருகிறார்கள். இதில் ஒரு பெரிய வியாபாரம் இருப்பதை மனதில் கொண்டு ஐ.ஐ.எம். படித்த முஸ்தபா அதிகமாக மக்கள் வேலைக்குப் போகும் பெங்களூர் நகரில் ஐ.டி. (I.D.) என்ற பெயரில் (I.D. என்றால் இட்லி, தோசை என்று பொருள்) இட்லி, தோசை மாவுகளை வியாபாரத்திற்கு கொண்டு வந்தார். பின்னர் அது ஊர் ஊராக விரிவடைந்து வியாபாரம் பல ஊர்களுக்கு இன்று பரவியுள்ளது. வியாபாரமும் சக்கைப் போடு போடுகிறது. இட்லி, தோசை மாவு தவிர பல வகை உணவுப் பொருட்கள் தயாரிப்பதிலும் இறங்கியுள்ள இவர்கள், தற்போது புதிதாக கொண்டு வந்திருப்பது, ஐ.டி. டிகாஷன் ஆகும். அதாவது ரெடிமேட் டிகாஷன். பில்டர் காபி விரும்புபவர்களுக்கு இது ஒரு இனிப்பான செய்தி ஆகும். இது தவிர ஆர்கானிக் இட்லி, தோசை மாவு வியாபாரத்திலும் இறங்கியுள்ளார்கள்
நலன் ப்ரஷ்இட்லி, தோசை மாவுகளுக்கு எல்லா ஊர்களிலும் வரவேற்பு இருக்கிறது. இதை மனதில் வைத்துக் கொண்டு கோவையைச் சேர்ந்த “நலன் ப்ரஷ்” என்ற நிறுவனம் மிகவும் சுகாதாரமான முறையில் கைப்படாமல், ஆர்.ஓ. வாட்டர் சேர்த்து, இயற்கையான முறையில் புளிக்க வைத்து கோவையில் தற்போது பெரிய அளவில் விற்பனை செய்து வருகிறார்கள். வீடுகளுக்கும் பால் போடுவது போல் நேரடியாக கோவையில் சப்ளை செய்கிறார்கள். விரைவில் சென்னைக்கும் வரவிருக்கிறார்கள். இவர்களின் இணையதளம் www.nalanfresh.com தொடர்பு கொள்ள 7010025007