இயந்திரகதியாக ஓடிக்கொண்டிருக்கிற உலகத்தில் இட்லி, தோசைக்கு மாவு அரைப்பது என்பது ஒரு பெரிய வேலை. அதற்கு யாரிடமும் நேரம் இருப்பதில்லை. இதை மனதில் வைத்து பல இடங்களில் சிறிய அளவில் மாவு அரைத்து, பாக்கெட்டில் போட்டு வியாபாரம் செய்து வருகிறார்கள். இதில் ஒரு பெரிய வியாபாரம் இருப்பதை மனதில் கொண்டு ஐ.ஐ.எம். படித்த முஸ்தபா அதிகமாக மக்கள் வேலைக்குப் போகும் பெங்களூர் நகரில் ஐ.டி. (I.D.) என்ற பெயரில் (I.D. என்றால் இட்லி, தோசை என்று பொருள்) இட்லி, தோசை மாவுகளை வியாபாரத்திற்கு கொண்டு வந்தார். பின்னர் அது ஊர் ஊராக விரிவடைந்து வியாபாரம் பல ஊர்களுக்கு இன்று பரவியுள்ளது. வியாபாரமும் சக்கைப் போடு போடுகிறது. இட்லி, தோசை மாவு தவிர பல வகை உணவுப் பொருட்கள் தயாரிப்பதிலும் இறங்கியுள்ள இவர்கள், தற்போது புதிதாக கொண்டு வந்திருப்பது, ஐ.டி. டிகாஷன் ஆகும்.

Read More