ஆன்லைன் வியாபார நுணுக்கங்களை எவ்வாறு கற்று தெரிந்து கொள்வது?
உலகளவில் தற்போது இருக்கும் ஒரு மந்திர வார்த்தை “டிஜிட்டல் மார்க்கெட்டிங்” தான். டிஜிட்டல் மார்க்கெட்டிங் இல்லையென்றால் விற்பனைகள் கூடுவதற்கான வாய்ப்புகள் குறைவு என்ற வகையில் உலகமே போய்க் கொண்டிருக்கிறது.
டிஜிட்டல் மார்க்கெட்டிங் கோர்ஸ் படித்தால் அதற்கு நிறைய செலவாகும், அல்லது டிஜிட்டல் மார்க்கெட்டிங் செய்ய தனிநபர் அல்லது கம்பெனிகளை நாடினால் அதற்கும் அதிகம் செலவாகும் என்ற யோசனையில் பலர் இதை தவற விட்டு விடுகிறார்கள். மேலும் சிறு வியாபாரம் செய்பவர்களில் 89% பேருக்கு டிஜிட்டல் மார்க்கெட்டிங் பற்றி அதிகம் தெரிவதில்லை. இதை எப்படி தவிர்ப்பது?
டிஜிட்டல் மார்க்கெட்டிங் செய்ய பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் முக்கிய பங்கு வகிக்கின்றன. நவீன உலகத்தில் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் அதிகமான தனிபட்ட நபர்கள், கம்பெனிகள் தங்களை இணைத்துக் கொண்டுள்ளன.
செலவில்லாமல் எப்படி பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் மூலமாக மார்க்கெட்டிங் செய்யலாம் என்று உங்களுக்கு பேஸ்புக் கம்பெனியே சொல்லித் தருகிறது. இதற்காகவே ஒரு டிஜிட்டல் டிரெயினிங் சென்டரை ஆன்லைன் மூலமாக சொல்லித் தர ஆரம்பித்திருக்கிறது.
இதன் மூலமாக என்னென்ன கற்றுக் கொள்ளலாம்.
உங்கள் வியாபாரத்தை ஆன்லைனுக்கு எப்படி கொண்டு வருவது, ஆன்லைனில் வாடிக்கையாளர்களை எப்படி பெறுவது?
ஆன்லைனில் உங்களது நிறுவனம் இருக்கிறது என்பதை வாடிக்கையாளருக்கு எப்படி தெரிவிப்பது?
பேஸ்புக் மூலமாக விளம்பரம் செய்வது எப்படி?
பேஸ்புக்கில் உங்களுக்கு மற்றும் நிறுவனத்திற்கு என பக்கங்களை எப்படி துவக்குவது ?
பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மூலமாக உங்களது பொருட்களை எப்படி விற்பது?
உங்களுக்கு பேஸ்புக் இன்ஸ்டாகிராம் மூலமாக வரும் ஆர்டர்களை எப்படி பூர்த்தி செய்வது?
சரக்குகள் வாடிக்கையாளர்களுக்கு கிடைத்த பின் வாடிக்கையாளர் சேவையை எப்படி தொடர்வது?
கீழ்கண்ட லிங்குக்கு சென்றால் மேலும் விபரங்கள் கிடைக்கும். https://digitalskills.fb.com
இது போல கூகுள் நிறுவனமும் டிஜிட்டல் மார்க்கெட்டிங்கில் இலவச ஆன்லைன் கோர்ஸ்களை நடத்துகிறது. https://learndigital.withgoogle.com/digitalunlocked/course/digital-marketing
கூகுள் நடந்தும் இந்த ஆன்லைன் கோர்ஸில் 26 மாடியூல்கள் இருக்கின்றன. 40 மணி நேரம் படிக்கலாம்.
இது தவிர கீழ்கண்ட ஆன்லைன் கோர்ஸ்களும் இலவசமாக கிடைக்கின்றன.
இவற்றை தெரிந்து கொண்டு உங்கள் வியாபாரத்தை அடுத்த லெவலுக்கு முன்னே கொண்டு செல்லுங்கள்.