தற்போது ப்ரஷ் சிக்கன், மட்டன், மீன் போன்றவைகளை சுகாதாரமான முறையில் பேக் செய்து உங்கள் வீட்டிற்கே டெலிவரி செய்கிறார்கள் பல
ஹோட்டல்கள் மற்றும் நிறுவனங்களுக்கு சலவைத் தொழில் சேவையை செய்து வந்த பல லாண்டரி கம்பெனிகள் தற்போது வருமானம் கூடுதலாகும் என்ற எண்ணத்தில் வீடுகளுக்கும் அதே சேவையை விரிவு படுத்தியுள்ளனர். உங்கள் வீட்டுக்கே வந்து உங்களின் பழைய அழுக்கு துணிகள், அழுக்கு பொம்மைகள், அழுக்கு ஷூக்கள் வாங்கி சென்று அதை சுத்தம் செய்து 48 மணி நேரத்தில் உங்கள் வீட்டிற்கே கொண்டு வந்து தந்து விடுவார்கள். இந்த சேவைதான் லாண்ட்ரோமேட் என்றும் அழைக்கப்படுகிறது.
பல உணவகங்கள் மேலே உள்ள கம்பெனிகளின் செயலிகளில் தங்களை பதிவு செய்து கொண்டு தங்களது விற்பனைகளை கூட்டிக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் தோன்றிய ஒரு புதிய முயற்சிதான் “கிளவுட் கிச்சன்” (Cloud Kitchen). இதில் நீங்கள் போய் உட்கார்ந்து சாப்பிட முடியாது, ஆர்டர் மட்டுமே பண்ண முடியும்.
2000 வருஷத்தில் இந்தியாவில் நுழைந்த ஈ-காமர்ஸ் துறை இன்றைய தினத்தில் கொடி கட்டிப் பறக்கிறது. காரணம் மொபைல் உபயோகம், இந்தியாவின் மக்கள் தொகை. 2000 ம் வருஷத்தில் பாசி.காம் (baazee.com) என்ற வாங்குபவர், விற்பவர் இணையதளம் ஆரம்பிக்கப்பட்ட போது பலர் இணையம் மூலமாக யாராவது பொருட்கள் வாங்குவார்களா? என்ற பெரிய கேள்வியை எழுப்பினார்கள். பின்னர் 2004ம் ஆண்டு இந்த இணையதளத்தை ஈபே நிறுவனம் 55 பில்லியன் டாலர் (இன்றைய மதிப்பில் ரூபாய் 385 கோடி) கொடுத்து வாங்கி தன்னகப்படுத்திக் கொண்டது.
2007ம் வருடம் அமேசான் நிறுவனத்தில் வேலை பார்த்த இரண்டு இளைஞர்கள் சச்சின் பன்சால், சஞ்சய் பன்சால் அவர்களுடைய அமேசான் அனுபவத்தை வைத்து பிளிப்கார்ட் நிறுவனத்தை ஒரு கார் ஷெட்டில் ஆரம்பித்தார்கள். அன்றைய தினத்தில் புத்தகங்களை மட்டும் ஆன்லைனில் விற்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட கம்பெனியாகும். ஆனால் இன்றைய தினத்தில் பிளிப்கார்ட் மூலம் விற்காத பொருட்களே இல்லை என்ற அளவிற்கு வந்து நிற்கிறது. கடந்த வருடம் பிளிப்கார்ட் தனது நிறுவனத்தை வால்மார்ட் நிறுவனத்திற்கு 16 பில்லியன் டாலருக்கு (இன்றைய மதிப்பில் 102,000 கோடி ரூபாய்களுக்கு) விற்று இருக்கிறது.
2007க்கு பிறகு பல வெற்றிகரமான டிராவல்ஸ், கல்யாண புரோகர், வாங்குபவர் விற்பவர் இணையதளங்கள் ஆகியவை வந்து இன்றைய தினமும் அவை சக்கைப் போடு போட்டுக் கொண்டிருக்கின்றன. ஐஆர்சிடிசி, மேக்மை டிரிப், யாத்ரா, கிளியர்டிரிப், ஓயோ, பாலிசி பஜார், பாங்க் பஜார், ரெண்ட்மோஜோ போன்ற நூற்றுக்கணக்கான ஏன் ஆயிரக்கணக்கான இணையதளங்கள் வந்தன.
இந்த ஈ காமர்ஸ் துறை 2021ம் வருடம் 5.88 லட்சம் கோடி ரூபாய்க்கு வர்த்தகமாகும் துறையாக இருக்கும் என கணிக்கப்பட்டிருக்கிறது. அதே சமயத்தில் ரீடெய்ல் துறையில் வர்த்தகம் 84 லட்சம் கோடிகளுக்கு நடக்கும் என கணிக்கப்பட்டிருக்கிறது.
இந்த துறையின் அபரிதமான வளர்ச்சியை மனதில் கொண்டு ரிலையன்ஸ் நிறுவனமும், பிளிப்கார்ட், அமேசான் நிறுவனங்களுக்கு போட்டியாக ஈகாமர்ஸ் துறையில் பெரிய அளவில் வந்து கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடதக்கது.
கோடிக்கணக்கானவர்களின் கையில் மொபைல் இருப்பதால், உங்களிடம் நல்ல யோசனைகள் இருந்தால் பல லட்சங்களுக்கு ஏன் கோடிகளுக்கு நீங்களும் அதிபராகலாம்.
இப்போது எங்கு சென்றாலும் உங்களின் கையடக்கமான மொபைல் போனில்பல்லாயிரக்கணக்கான புத்தகங்களை ஓரிடத்தில் பார்க்க முடியும் படிக்க முடியும் என்ற நிலை வந்துவிட்டது. முன்பெல்லாம் ஊருக்கு போறோம்ன்னா நாம் எடுத்து வைக்கிற சாமான்களுடன் நான்கு புத்தகங்களும் கூடவே இருக்கும். புத்தகங்கள் துணை இல்லாமல் பலர் வெளியூர் செல்லவே மாட்டார்கள் தற்போது பலருக்கு படிக்கும் பழக்கமே மறந்துவிட்டது. மேலும் புத்தகங்களை எடுத்துச் செல்வது சிரமமாக இருப்பதால், புத்தகங்கள் படிக்கும் பழக்கத்தை இனிமையாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் பல வருடங்களுக்கு முன்பு கிண்டில் ரீடர் வந்தது. கையடக்க பதிப்பு போல, கையடக்க ரீடர்.
பல்லாயிரக்கணக்கான புத்தகங்களை தன்னகத்தே கொண்டு உனக்கு வேண்டியவற்றை எடுத்து படி என்று ஆவலைத் தூண்டுகிறது. இது போல பல ரீடர்கள் வந்துவிட்டாலும், தற்போது சந்தைக்கு புதிதாக வந்திருப்பது ஏர்டெல் புக்ஸ் (Airtel Books). இதில் என்ன புதிய அம்சம் என்றால், இதை தனியாக கிண்டில்ரீடர் போல எடுத்துச் செல்ல வேண்டாம். உங்களிடம் தற்போது இருக்கும் மொபைலில் இந்த செயலியை நிறுவிக் கொள்ளலாம். இதன் மூலம் பல ஆங்கிலம் மற்றும் இந்தி புத்தகங்களை படிக்கும் வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கிறது. ஆனால் புத்தகம் படிப்பதற்க்கும் டவுன்லோட் செய்வதற்க்கும் சிறிது பணம் கட்ட வேண்டியிருக்கும் என்பதை நினைவில் கொள்ளவும். பயணத்தில் தனிமை என்ற பயம் இனி வேண்டாம். உங்களுடன் புத்தகங்களும் பயணிக்கிறது என்பது ஒரு இனிமையான அனுபவம். புத்தகப்பிரியர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம். ஆரம்பித்த ஒரு மாதத்திலேயே ஒரு லட்சம் டவுண்லோட் கள் செய்யப்பட்டுள்ளது என்பது இதன் சிறப்பம்சம்.
ப்ளே ஸ்டோரில் சென்று Airtel Books யை டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
பேட்டி, கட்டுரையாளர் : அ. ஹுமாயூன், சிதம்பரம்.
பொதுவாக பல ஊர்கள்ல ஒரு லாபநோக்கமற்ற கூட்டம் நடத்த இடம் கிடைப்பது மிகவும் சிரமமாக இருக்கும். அதுவும் தொடக்கநிலை தொழில் முனைவோர் சந்திப்பு பெரும்பாலும் ஒரு ஹோட்டலிலோ அல்லது ஒரு பொது இடமான காபி ஷாப் மாதிரி இடங்களிலோ நடக்கும்போது அதிக மக்கள் கலந்துக்க யோசிக்கிறாங்க. மதுரைக்கும் இது விதிவிலக்கல்ல.
கம்யூனிட்டி என்பது கூட்டுறவு அமைப்பாக ( மதுரை ஸ்டார்ட் அப்ஸ் (Startups) கம்யூனிட்டி போல) மாதம் ஒருமுறை ஒரு கூட்டம் நடத்தி அதுல ஒருவருக்கொருவர் பரஸ்பரம் அனுபவத்தை பகிர்ந்து கொள்ளுவது தான். இது போல பல கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது. சில மாதங்களில் சந்திப்பு நடத்த இடம் கிடைப்பது பெரும் சிரமம் இருந்துள்ளது. இதனால் நமக்குன்னு ஒரு இடம் வேண்டும் என்று கோரிக்கை முறையில் உரிய இடம் ரெடி பண்ணவும், அந்த இடம் பெண்களும் தயக்கமின்றி வர கம்யூனிட்டி மெம்பர்களில் ஒருவரான லட்சுமி அவர் கணவரின் ஒரு தொழில்முனைவு முயற்சிக்காக சென்னையிலிருந்து, மதுரைக்கு இடம் பெயர்ந்தபோது பெங்களூர் மற்றும் சென்னையில் இருக்கிற மாதிரி மதுரையில் ஒரு ஏற்பாடு இல்லைன்னு ஏற்பட்ட ஏக்கத்தின் வடிகால் தான் “625001in”. தன்னோட வீட்டு் மாடியில் இருந்த உபரியான இடங்களை ஒரு பகிர் அலுவலகம் அல்லது இணை உழைப்பு இடம் (Co work space) ஆக மாற்றினார்.
இங்கு உங்களுக்கு அதிவேக இணையமும் (Hi-speed Internet), தொழில் முனைவோர் தொடர்பும் இருக்கும். அதுபோக தொடர்ச்சியாக சனி, ஞாயிறுகளில் சந்திப்பு நடக்கிறதனால நிறைய வர்த்தக தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளலாம். புதுசா ஒரு ஐடியாவை வச்சு தொழில் தொடங்க நினைத்திருப்பவர்களுக்கும், ப்ரீலான்ஸ்சர்கள் / கன்சல்டன்ட்கள், அடிக்கடி ட்ராவல் பண்றவங்க இவங்க எல்லாம் சந்தித்து பேசுவதற்கு மேலும் தற்காலிகமாக வேலை பாக்குறதுக்கு ஒரு பகிரப்பட்ட இடம்தான் இந்த “625001in” என்று பெயர் பெற்றிருக்கும் www.625001.in என்ற ஸ்டார்ட் அப்.
இது மதுரையில் ஒரு புதிய முயற்சி. இது நிறைய ஆதரவாளர்களின் பங்கேற்பால் தொடர்ச்சியாக கடந்த 5-6 வருடமாக மதுரையில் மாதாந்திர தொழில்முனைவோர் கூட்டத்தை நடத்திட்டு இருக்காங்க. சிறப்பு அழைப்பாளர்கள் ஏற்பாடு செஞ்சு மூன்று அல்லது ஆறு மாதத்திற்கு ஒருமுறை பெரியளவிலான நிகழ்வுகளை நடத்திட்டு இருக்காங்க.
கடந்த சில ஆண்டுகளாக ஸ்டார்ட்-அப் சுய தொழில் மோகம் இந்தியாவில் பரவலாக பரவிக்கொண்டு வருகிறது. வேலைத் தேடி அலுவலகம் ஏறி இறங்கிய காலம் மாறி சுய தொழில் செய்ய வாய்ப்புகளை வலைப்போட்டு பிடிக்கின்றனர் இன்றைய இளைஞர்கள். ஸ்டார்ட்-அப்கள் அதிகரிப்பதையே தனக்கு சாதகமாய் பயன்படுத்தி ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு குறைந்த விலையில் இடமளிக்க ஆரம்பிக்கப்பட்டது தான் www.625001.in.
பிரத்தியோகமாக ஸ்டார்ட்-அப்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது இந்த நிறுவனம். இந்நிறுவனம் மூலம் தொழில் தொடங்கும் சிறு தொழில் முனைவோர்கள் குறைந்த முன்பணம் செலுத்தி குறைந்த வாடகை கொடுத்து நிரந்தரமான அலுவலகம் அமைக்காமல் பயன்பாட்டிற்கு ஏற்ற தொகையை செலுத்தி பயன்படுத்தலாம். ஒரு நாள், ஒரு வாரம், ஒரு மாதம் அல்லது ஏன் ஒரு மணி நேரத்திற்கு மட்டும் சந்திப்புகளை நடத்த / வேலைகளை செய்ய – WiFi மற்றும் மற்ற வசதிகளுடன் இடவசதியை அமைத்திருக்கிறது இந்த நிறுவனம்.
ப்ரொஜக்டர் வசதியுடன் கான்ஃபரன்ஸ் ஹால் எதிர்பார்க்கும் ஸ்டார்ட்-அப்களுக்கு அதையும் குறைந்தக் கட்டணத்தில் அளிக்கின்றனர்.
ஸ்டார்ட்-அப்கள் வளர்ந்து வரும் நிலையில் தனது தொழிலுக்கான வளர்ச்சியை தன்னால் பார்க்க முடிகிறது என்றும் மேலும் ரியல் எஸ்டேட் போல் மாறாமல், அதிக லாபம் எதிர்பார்க்காமல் சிறு தொழில் நிறுவனர்கள் அதிக பயனடையும் நோக்கிலே தனது நிறுவனம் செயல்படும் என நம்பிக்கை தொனிக்க 625001in நிறுவனர் தெரிவிக்கிறார்.
உலகத்தின் பெரும்பான்மையான நீர் பரப்பை கடின நீர் தான் ஆட்கொண்டுள்ளது. மென் நீர் உலகத்தில் 2.5 சதவீதம் தான் உள்ளது.
கடின நீரை மென் நீராக ஆக்காமல் உபயோகிப்பதால் பல விளைவுகள் இருக்கின்றன. இது பல தோல் வியாதிகள், முடி வறண்டு போவது, முடி உதிருவது, கிட்னி ஸ்டோன் ஆகியவற்றை உண்டாக்குகிறது. இது பற்றிய பல ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. பல கண்டுபிடிப்புகள் வந்துள்ளன. ஆனால் விலை குறைவாக, எளிதாக செய்யும் வசதி வந்திருக்கிறதா என்றால் அதற்கு விடை புதிதாக ஆரம்பித்து இருக்கும் இந்த ஸ்டார்ட் அப் தான். டி கால் (d-cal) என்ற இந்த கம்பெனி கடின நீரை மென் நீராக ஆக்கும் சிறிய சாதனத்தை கண்டுபிடித்துள்ளது. இது ரூபாய் 3600 விலையில் கிடைக்கும். ஒரு வருடம் உபயோகிக்கலாம். இது மார்க்கெட்டில் இருக்கும் பல ப்ராடக்ட்களை விட விலை குறைவு, உபயோகிப்பது எளிது, மின்சார செலவு இல்லை.சென்று பாருங்கள் இவர்களின் இணையதளத்தை www.dcal.co.in
நாம் இருப்பது மில்லினியல்கள் அதிகமாக வாழும் காலம். ஆதலால் பழையன கழிதலுக்கு அதிகம் ஸ்டார்ட் அப் கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதில் ஆச்சரியம் இல்லை. அந்த காலத்தில் ஒரு கட்டில் வாங்கினாலோ அல்லது ஒரு டேபிள் வாங்கினாலோ அது காலத்துக்கும் உழைக்குமா என்று பார்ப்பார்கள். பெரும்பாலும் ஆசாரி வீட்டிற்கு வந்து அந்த கட்டிலை அல்லது டேபிளை செய்து கொடுப்பார். ஆனால் இன்றைய தினத்தில் ஓடிக்கொண்டிருக்கும் உலகத்தில் யாருக்கும் எதற்கும் நேரமில்லை. குறிப்பாக இளைஞர்களுக்கு நேரமே இருப்பதில்லை. ஆதலால் எல்லாவற்றையும் “டூ மினிட்ஸ் நூடுல்ஸ்” போல உடனடியாக கடைக்கு சென்று வாங்க நினைக்கிறார்கள். அது 3 முதல் 5 வருடம் வரை உழைத்தால் போதும் என்று நினைக்கிறார்கள். ஏனெனில் 5 வருடம் கழிந்தால் புதிய மாடல் வந்து விடும், அதை வாங்க வேண்டும் என்ற எண்ணம் தான். இதனால் இவர்களை குறி வைத்து பல பழையன கழிதலுக்கு இணையதளங்கள் வந்துள்ளன. இதன் மூலம் பழைய பொருட்களை ஒருவர் விற்க முடியும். அதை வாங்கவும் ஒருவர் இருப்பார் என்பது தான் கால சக்கரம்.
இது போன்ற இணையதளங்கள், உபயோகப்படுத்தப்பட்ட மொபைல் போன் களிலிருந்து, கார்கள் வரை விற்கின்றன. ஒருவருக்கு உபயோகப்படாத பொருள் இன்னொருவருக்கு மிகவும் தேவைப்படும் பொருளாகவும் இருக்கலாம். இதை வைத்துதான் இந்த இணையதளங்கள் தங்கள் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கின்றன.
இதற்கென ஆரம்பிக்கப்பட்டுள்ள சில ஸ்டார்ட் அப் இணையதளங்கள் சில பொருட்களில் மட்டுமே கவனம் செலுத்துகின்றன. சில இணையதளங்கள் சில ஊர்களில் மட்டுமே கவனம் செலுத்துகின்றன என்பதை நினைவில் வைக்க வேண்டும். கீழ்க் கண்ட இணையத்தளங்களுக்கு போய் பாருங்கள் :
இதை மனதில் வைத்து தான் ஆரம்பிக்கப்பட்டது “பேசிஸ்” (Basis) என்ற இணையதளம். இவர்களது எண்ணம் என்னவென்றால் இந்தியாவில் அதிக அளவு பெண்களை சேமிப்பு பழக்கத்தில் ஈடுபடுத்த வேண்டும் அதுவும் குறிப்பாக மியூச்சுவல் ஃபண்ட் மற்றும் பங்குச் சந்தையில் அதிகளவு பெண்கள் நுழைய வேண்டும் என்பதே இவர்களது குறிக்கோள். முதலில் முதலீடுகளை ஊக்கப்படுத்தி பின்னர் மியூச்சுவல் பண்ட் மற்றும் பங்குச்சந்தை முதலீடுகளை அவர்களுக்கு கற்றுக் கொடுத்து அதன் மூலம் பெண்களைஇந்த வகையான முதலீடுகளில் ஆர்வம் ஏற்படுத்தவேண்டும் என்பது தான் இவர்களது குறிக்கோள். இன்னும் 3 மாதங்களில் முழுவதுமாக செயல்படுத்த நினைத்துள்ளார்கள்.
24 வயதுக்கும் 40 வயதுக்கும் இடைப்பட்ட சுமார் 400 பெண்களை இன்டர்வியூ செய்து அவருடைய சேமிப்பு பழக்கத்தை முழுமையாக ஆராய்ந்த போது தெரிய வந்தது என்னவென்றால் அவர்களில் பெரும்பாலானவர்கள் வங்கியில் வைப்பு நிதி அல்லது சேமிப்பு திட்டத்தில் அல்லது தங்கத்தில் மட்டுமே முதலீடுசெய்து வந்திருக்கிறார்க்ள் என்பது தெரியவந்தது. ஆனால் பெண்கள் தங்களுடைய வருமானத்தில் 20 சதவீதம் வரை சேமிக்கும் பழக்கத்தை வைத்திருப்பது தெரிய வந்தது. ஆனால் இந்த சேமிப்பு பங்குச் சந்தையிலோ மியூச்சுவல் ஃபண்டிலோ செல்லவில்லை என்பது தான் ஒரு ஆச்சரியமான விஷயம். எல்லாம் தங்கம், வங்கியில் வைப்பு நிதி அல்லது சேமிப்புக் கணக்கு என்பதிலேயே சென்று கொண்டிருக்கிறது.
உங்கள் முதலீடுகளை ஆன்லைனிலேயே செய்ய பல கம்பெனிகள் இப்பொழுது வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளன. அவற்றில் முக்கியமான கம்பெனிகளாக கருதப்படுபவை, Paytm Money, ET MONEY, Wealthy, Scripbox, Fisdom, WealthTrust, MyUniverse, MoneyLover, MoneyView, MTrakr, and IOU (I Owe You). இதில் ஒரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் இவற்றில் பல கம்பெனிகள்ஸ்டார்ட் அப் கம்பெனிகள் ஆகும். “பேசிஸ்” கம்பெனிக்கு மேலே கண்ட கம்பெனிகளிடமிருந்து பெரிய அளவில் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கலாம். ஆனால் அவர்கள் இந்தப் போட்டியைப் பற்றி அதிகம் கவலைப்படவில்லை. காரணம் பெண்களை மட்டும் குறி வைத்து அவர்களை மியூச்சுவல் பண்டுகள் மற்றும் ஷேர் மார்க்கெட்டில் முதலீடுகள் செய்ய வழிகள் சொல்லித் தர அதிகம் ஆட்கள் இல்லாததால் இதை ஒரு சாதகமான விஷயமாக இந்த கம்பெனி பார்க்கிறது. www.getbasis.co என்ற இணையதளத்தில் சென்று முழு விவரங்களை பார்க்கலாம்.
2001ஆம் ஆண்டு அறிக்கை படி இந்திய மக்கள் தொகையில் 2.1 சதவீத மாற்றுத் திறனாளிகள் இருந்திருக்கிறார்கள். 2011 ஆண்டு அறிக்கைப்படி இது 2.21 சதவீதமாக இருக்கிறது. இதில் ஆண்கள் 55.6 சதவீதமும் பெண்கள் 44.4% இருக்கிறார்கள். இவர்களில் கிராமப்புறங்களில் 66 சதவீதமும், நகர்ப்புறங்களில் 33 சதவீதமும் இருக்கிறார்கள்.