தவறில்லாமல் ஏற்றுமதி செய்வது, ஸ்டார்ட்அப் தொடங்குவது, அதற்கு நிதி பெறுவதற்கு வழிகாட்டும் கருத்தரங்கை
இந்தியாவில் வெளிநாட்டு கம்பெனிகள் back office processing தொடர்பான பணிகளை செய்ய ஆரம்பித்ததிலிருந்தே அந்த கம்பெனிகளில் வேலைக்கான ஆட்கள் தேவை அதிகரித்துள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான வேலைக்கு ஆட்கள் தேடும் கம்பெனிகள் புதிதாக வந்துள்ளது.
இருந்தாலும், 100 ஆட்கள் ஒரு கம்பெனிக்கு தேவை என்றால் ஆயிரம் பேரிடம் போன் செய்து பேசி அவர்களில் pre-screening செய்து அதன் பின்னர் அந்தந்த கம்பெனிகளுக்கு இண்டர்வியூக்கு அனுப்புவது என்பது ஒரு recruitment company களுக்கு மிகப்பெரிய கடினமான வேலை. இதுவே ஒரு கம்பெனிக்கு 1000 பேர் வரை தேவை என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். அந்த 1000 பேரை தேர்ந்தெடுப்பது இன்னும் எவ்வளவு கடினமாக இருக்கும்.
குரல் தான் அடிப்படை
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, குரல் அதாவது வாய்வழி தொடர்பு மனிதகுலத்தின் முதன்மையான தகவல்தொடர்பு முறையாக செயல்படுகிறது. இன்றும் கூட, அது நமது தொடர்புகளுக்கு மையமாக உள்ளது. குரல் நமக்குள் வேரூன்றி உள்ளது.
ரூட்டில் (Rootle) என்ற ஸ்டார்ட் அப் கம்பெனி வேலைக்கு ஆட்களை தேர்ந்தெடுக்கும் போது pre-screening க்கு அவர்களை அழைக்கும் போது ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் டெக்னாலஜியை உபயோகப்படுத்தி வேலைக்கு ஆட்கள் சேர்க்கும் பணியில் மனிதனைப் போன்ற உரையாடலைப் பயன்படுத்துவது, ஆட்சேர்ப்பு செயல்முறைக்கு தனிப்பயனாக்கப்பட்ட மற்றும் திறமையான தொடர்பைக் கொண்டு வரும் என்று அறிந்து அதில் முழுமையாக கவனம் செலுத்தி வெற்றியும் கண்டிருக்கிறார்கள்.
பாரம்பரியமாக நாம் கடைபிடிக்கும் ஒவ்வொருவரையும் நாமே கூப்பிட்டு அவர்களுடன் பேசுவதில் பல நன்மைகள் இருந்தாலும், நாம் ஆட்களை அழைக்கும் போது பாதி நேரங்களில் அவர்களை தொடர்பு கொள்ள முடிவதில்லை. இதனால் வேகமாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த உலகத்தில் பல சமயங்களில் வெறுப்பாகி விடுகிறோம். சரியான திறமையைக் கண்டறிய ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான அழைப்புகளைச் செய்வது ஆட்சேர்ப்பு செய்பவர்களுக்கு சோர்வாக இருக்கிறது.
இதற்கு தீர்வு ஜெனரேட்டிவ் ஏஐ மூலமாக செய்யப்படும் வாய்ஸ் இண்டர்வியூக்கள் தாம். அதாவது இந்த ஸ்டார்ட் அப் கம்பெனி ஆட்டோமேட்டிவ் காலிங் மூலமாக அந்த நபர் கிடைக்கும் வரையில் பல தடவைகள் அவரை தொடர்பு கொள்ளுகிறது. அப்படி தொடர்பு கிடைக்கும் போது தானாகவே வாய்ஸ் இண்டர்வியூவை ஆரம்பிக்கிறது. சரியாக கூறுவதானால், உண்மையான மனித தொடர்புகளைப் பிரதிபலிக்கும் இயற்கையான ஒலி உரையாடல்களை உருவாக்க இது உதவுகிறது.
இது நேரத்தையும் முயற்சியையும் மிச்சப்படுத்துவது மட்டுமல்லாமல், சாத்தியமான candidates களுடன் தொடர்புகளை உறுதி செய்கிறது.
இந்த ஆட்டோமேஷன் ஆட்சேர்ப்பு செய்பவர்களின் நிர்வாகச் சுமையைக் குறைப்பது மட்டுமல்லாமல், முழு நேர்காணல் செயல்முறையையும் துரிதப்படுத்துகிறது, பணியமர்த்தல் மற்றும் செலவுக்கான நேரத்தை மிச்சப்படுத்துகிறது. இது அதிக எண்ணிக்கையிலான விண்ணப்பதாரர்களைக் கையாள்பவர்களுக்கு குறிப்பிடத்தக்க நன்மையாகும். AI அமைப்புகள் மூலம் ஒரே நேரத்தில் பல நேர்காணல்களை திறமையாக கையாள முடியும். இது தேர்வாளர்கள் மதிப்பீட்டின் தரத்தை சமரசம் செய்யாமல் பார்த்து கொள்ளவும் உதவுகிறதுமேலும் விபரங்களுக்கு இந்த ஸ்டார்ட் அப் கம்பெனியின் இணையதளம் www.rootle.ai. சென்று பாருங்கள்.
இந்தியாவில் வளர்ப்புப் பிராணிகள் அல்லது செல்லப் பிராணிகள் சார்ந்த சந்தையானது வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது. இதற்கு முக்கியக் காரணம் நுகர்வோர்களின் மாறிவரும் மனநிலையும், செல்லப் பிராணிகள் வளர்ப்போரிடையே படிப்படியாக மாறிவரும் நடத்தைகளும் ஆகும்.
செல்லப் பிராணிகள் சார்ந்த சந்தையின் மொத்த விற்பனையில் அதற்கான உணவுப் பொருள்களின் பங்களிப்பு 70 சதவீதமாகவும், ஷாம்பூ, கண்டிஷனர், கூடுதல் சத்துணவு, மற்றும் செல்லப் பிராணிகளுக்குத் தேவையான பொருள்கள் ஆகியவை மீதமுள்ள 30 சதவீதமாகவும் இருக்கிறது. இச்சந்தையின் கூட்டு வளர்ச்சி சுமார் 20 சதவீதமாகும். இச்சந்தையானது 2025 ஆம் ஆண்டில் ரூ 20,000 கோடிக்கும் மேலான விற்பனையைத் தொடும் என இத்துறை சார்ந்தவர்கள் கணித்திருக்கின்றனர்.
`செல்லப் பிராணிகளை வளர்ப்பதில் இள வயது பெற்றோர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். இவர்களுடைய குழந்தைகள் பெரும்பாலும் ஆறு வயதுக்கு குறைவான வயதை உடையவர்களாக இருக்கிறார்கள்’ என்று இத்துறை சார்ந்த நிறுவனமொன்றின் பொது மேலாளர் குறிப்பிடுகிறார்.
பெருநகரங்கள் மற்றும் நகரங்களில் வாழ்பவர்கள் பூனை வளர்ப்பதில் நாட்டம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். நாய் வளர்ப்பதில் கிராமத்தினர், நகரங்களில் வாழ்பவர் இரு தரப்பினரும் ஏறக்குறைய சம அளவில் இருக்கிறார்கள்.
இந்தியாவில் செல்லப் பிராணிகள் வளர்க்கும் குடும்பங்களின் எண்ணிக்கை நகர்ப்புறத்தில் 25 சதவீதமாக இருந்து வருகிறது. இது 2025 ஆம் ஆண்டில் 35 சதவீதத்தைத் தொடக்கூடும்.
பிராணிகளிடையே பரிவு காட்டுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் தாங்கள் வளர்க்கும் செல்லப் பிராணிகளுக்கு சிறப்பான பொருள்களையும் சேவைகளையும் வாங்குவதற்கு அதன் உரிமையாளர்கள் அல்லது `பெற்றோர்கள்’ தயங்குவதில்லை.
செல்லப் பிராணிகளுக்குத் தேவையான பொருள்களை வாங்குவதற்கு சந்தாவின் அடிப்படையிலான சேவைகள் அதிகரித்து வருகின்றன. அது போல செல்லப் பிராணிகளின் நலன் மீது அக்கறை கொண்டவர்களின் விருப்பங்களைப் பூர்த்தி செய்யும் வகையில் அதன் நலனைத் தொடர்ந்து கண்காணிப்பதற்குத் தேவையான நவீன தொழில்நுட்ப அடிப்படையிலானக் கருவிகளும், புதுமையான தீர்வுகளும் அதிகரித்து வருகின்றன.
இத்துறையில் இயங்கிவரும் முக்கியமான ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள்: Heads Up For Tails (HUFT), Just Dogs & Zigly, Supertails, Vetic (இது பிராணிகளுக்கென வைத்தியசாலைகளை நிர்வகித்து வருகிறது) மற்றும் Wiggles ஆகும். இது வரை இத்துறை சார்ந்த நிறுவனங்கள் சுமார் 170 மில்லியன் டாலர் மூதலீட்டை ஈர்த்திருக்கின்றன. இதில் Drools என்கிற ஸ்டார்ட்-அப் மட்டும் L Catterton என்கிற முதலீட்டாளரிடமிருந்து 60 மில்லியன் டாலரை முதலீடாகப் பெற்றிருக்கிறது. இது போல HUFT என்கிற ஸ்டார்ட்-அப் 37 மில்லியன் டாலரையும், Just Dogs என்கிற நிறுவனம் 7 மில்லியன் டாலரையும் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கதாகும். இவை தவிர Sploot Products, Zoivane, Snouters போன்ற பல நிறுவனங்கள் இத்துறையில் காலடி பதிக்க ஆரம்பித்திருக்கின்றன.
செல்லப் பிராணிகளுக்குக் காப்பீடு எடுப்பது என்பது ஆரம்பகட்டத்தில் இருந்தாலும் இது குறித்த விழிப்புணர்வும், விருப்பமும் அதிகரித்து வருகிறது. இதில் செல்லப் பிராணிகளுக்கு ஏற்படும் உடல்நலமின்மை, காயம், விபத்தில் மரணித்தல், அறுவை சிகிச்சை, மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறுவது, செல்லப் பிராணிகளால் பாதிப்புக்கு உள்ளாகும் மூன்றாம் தரப்பினருக்கான நஷ்ட ஈடு என அனைத்தும் அடங்கும். செல்லப் பிராணிகளுக்கானக் காப்பீட்டு பிரிமீயம் அதனுடைய வயது, அளவு, எந்த இனத்தைச் சேர்ந்தது, அதனுடைய உடல் ஆரோக்கியம், எவ்வளவு தொகைக்குக் காப்பீடு தேவை ஆகியவற்றைப் பொறுத்ததாகும். தற்சமயம் ஓரியண்டல் இன்சூரன்ஸ், பஜாஜ் அலியான்ஸ், நியூ இண்டியா அஷ்யூரன்ஸ், ஃப்யூச்சர் ஜெனராலே ஆகியவை செல்லப் பிராணிகளில் பிரதானமாக நாய்களுக்கான காப்பீட்டுச் சேவையை வழங்கி வருகின்றன.
இத்துறைக்கான முதலீடு அதிகரித்து வருவதால் இதற்கென தெளிவான நெறிமுறைகளையும், தரநிலைகளையும் வடிவமைப்பது அவசியமென இத்துறையில் இயங்கி வரும் நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் கூறுகிறார்கள். இதோடு செல்லப் பிராணிகளுக்கான உணவு தயாரிக்கும் நிறுவனங்களையும் `உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்கத் தொகை (Production Linked Incentive – PLI)’ திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்கிற கோரிக்கையையும் முன் வைத்திருக்கின்றனர். இத்துறை சார்ந்த நிறுவனங்களில் முதலீடு செய்ய முதலீட்டாளர்களும் ஆர்வம் காட்டி வருவது நல்லதொரு சமிக்ஞை ஆகும்.
செல்லப் பிராணிகள் குறித்த சில சுவராசியமான புள்ளிவிவரக் கணிப்புகள் (2024 ஆம் ஆண்டு மார்ச் வரை):
- 2024 ஆம் ஆண்டில் செல்லப் பிராணிகளின் எண்ணிக்கை 42 மில்லியனைத் தொடும்
- இதில் நாய்களின் எண்ணிக்கை சுமார் 36.5 மில்லியனாகவும் பூனைகளின் எண்ணிக்கை 5.5 மில்லியனாகவும் இருக்கும்
- செல்லப் பிராணிகள் தொடர்பான பொருள்களின் சந்தைப் பங்கு மொத்த விற்பனையில் 20 சதவீதம். அதாவது 0.75 பில்லியன் டாலர், இதன் கூட்டு வளர்ச்சி அடுத்த 10 ஆண்டுகளில் 23.7 சதவீதமாக இருக்கும் என கணக்கிடப்பட்டிருக்கிறது.
செல்லப் பிராணிகள் ஆரோக்கியம் சார்ந்த சேவையின் மதிப்பு சுமார் 1.25 பில்லியன் டாலர். இதன் கூட்டு வளர்ச்சி சுமார் 8.6 சதவீதமாக இருக்கும் எனத் தெரிகிறது.
ஒரு இடம் அல்லது வீடு வாங்கும் போது பல பிரச்சனைகளை நாம் சந்திக்க நேரிடும். இந்தியாவில் நில ஆவணத்தை சரிபார்ப்பது கடினமான செயலாகும். ஆவணங்களைப் பெறவும், சரிபார்க்கவும் ஒருவர் பல முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். ரியல் எஸ்டேட் வாங்குவது தொடர்பான ஆவணங்களை சரிபார்க்க இந்தியாவில் பொதுவான தரவுத்தளம் இல்லை. ஒவ்வொரு மாநிலமும் வெவ்வேறு பெயர்களில் ஆவணங்களைத் தயாரிப்பதற்கு வெவ்வேறு வழிகளைக் கொண்டுள்ளன. இவை அனைத்தையும் ஒருங்கிணைத்து லேண்டீட் (Landeed) என்ற ஒரு ஸ்டார்ட் அப் இந்த செயல்களை விரைவாக முடிக்க வழிவகை செய்கிறது.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பா போன்ற முன்னேறிய நாடுகளில் ரியல் எஸ்டேட் வாங்குவது, இந்தியாவுடன் ஒப்பிடும் போது, அதிகம் தொந்தரவு இல்லாதது. இந்தியாவில் உள்ள அனைத்து நீதிமன்ற வழக்குகளில் மூன்றில் இரண்டு பங்கு நிலத் தகராறுகளைப் பற்றியது ஆகும். இந்த ஸ்டார்ட் அப் என்ன செய்கிறது என்றால், மக்கள் தங்கள் சொத்து தொடர்பான பல்வேறு ஆவணங்களைப் பார்க்கவும், வழக்குகளைக் குறைக்கவும் உதவுகிறார்கள்.
பல்வேறு மாநில அரசுகளால் நிறுவப்பட்ட தளங்களை ஒன்றிணைக்கும் தளத்தை லேண்டீட் உருவாக்கியுள்ளது. இந்த ஸ்டார்ட்-அப் ஒவ்வொரு மாநிலத்திலும் பதிவு மற்றும் வருவாய் துறைகளுக்கு இடையே ஒரு பாலத்தை உருவாக்கியுள்ளது, மேலும் நீங்கள் ஒரு சொத்தின் விவரங்களை உள்ளிட்டு, அனைத்து துறைகளில் இருந்து வரைபடங்கள் உட்பட தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் ஒரே நேரத்தில் எடுக்க முடிகிறது. இது ஒரே நேரத்தில் பல பிரச்சனைகளை தீர்க்கிறது.
என்னென்ன ஆவணங்கள்?
இந்தியாவில் உள்ள 20+ மாநிலங்களில் இருந்து 100க்கு அதிகமான சொத்து தொடர்பான ஆவணத்தையும் உங்களுக்கு வழங்குகிறது. நிலம், என்கம்பரன்ஸ் சான்றிதழ்கள், 7/12, RoR, பட்டா/சிட்டா மற்றும் பல ஆவணங்களைப் பதிவிறக்கம் செய்யலாம். இந்த ஸ்டார்ட் அப் கம்பெனி இதுவரையில் 10 லட்சம் பேருக்கு மேல் 50 லட்சத்திற்கும் அதிகமான ஆவணங்களை வழங்கியுள்ளது.
மொழிகள் என்று பார்த்தால் ஆங்கிலம், இந்தி, கன்னடம், மராத்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் கிடைக்கிறது. அரசாங்க சர்வர் செயலிழந்தாலும் உங்கள் ஆவணங்களைப் பெறலாம். ஆவணங்கள் தயாரானதும் இந்த ஸ்டார்ட் அப் கம்பெனி உங்களுக்குத் தெரிவிக்கும். அதிகாரப்பூர்வ அரசாங்க தரவுத்தளத்திலிருந்து சில நொடிகளில் சமீபத்திய ஆவணங்களைப் பெறலாம்.
லீகல் ஓப்பினியன்
பல சமயங்களில் டாக்குமெண்ட்களை வழக்கறிஞர்களிடம் கொடுத்து லீகல் ஓப்பினியன் வாங்க வேண்டியிருக்கும். அப்படி இருக்கும் பட்சத்தில் நாம் லீகல் ஓப்பினியன் பெற நாம் தேர்ந்தெடுத்த வழக்கறிஞர் தகுதியான நபர் தானா என்ற சந்தேகம் வரும். இந்த ஸ்டார்ட் அப் லீகல் ஓப்பினியன் வழங்கவும் செய்கிறார்கள். மூத்த வழக்கறிஞர்கள் சொத்து தொடர்பான ஆவணங்களை மதிப்பாய்வு செய்து, சொத்து பற்றிய கருத்தை உங்களுக்கு வழங்குவார்கள். ஒரு சொத்தை வாங்கும்போது, விற்கும்போது அல்லது அடமானம் வைக்கும்போது இது பயனுள்ளதாக இருக்கும்.
லேண்டீட் இலவசமா?
லேண்டீட் முதல் முறை பயனர்களுக்கு, தேடல் வரம்பு வரை இலவசம். அதன் பிறகு, நீங்கள் ஒரு ஆவணத்திற்கு இவ்வளவு பணம் என்று செலுத்த வேண்டியிருக்கும். பல ஆவணங்கள் தேவைப்பட்டால் ஒரு பேக்கேஜ் வாங்கலாம். உபயோகிப்பாளர்கள் ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தொகைக்கு வரம்பற்ற தேடல்களைச் செய்ய முடியும்.
இந்த ஸ்டார்ட்-அப் அடுத்த இரண்டு மாதங்களில் இரண்டு நாடுகளில் இது போன்ற இணையதளத்தை கொண்டுவரவிருக்கிறது.மேலும் விபரங்களுக்கு இவர்களின் இணையதளத்தை சென்று பாருங்கள் www.landeed.com
இந்தியா போன்ற பெரிய நாடுகளில் சுற்றுப்புற சூழல் மாசு பெரிய தீங்குகளை விளைவிக்கிறது. நமக்கு தெரிந்தும், தெரியாமலும் பல மாசுக்களை உருவாக்க காரணமாக நாம் இருக்கிறோம்.
இந்தியாவில் 70 சதவீதத்துக்கும் அதிகமான மக்கள் கிராமப்புறங்களில் வசிக்கிறார்கள். அதேநேரம் 70 சதவீதத்துக்கும் மேலான டாக்டர்கள் நகரங்களில் வசிக்கின்றனர்.
ஆம்னி பஸ்களுக்கு ரெட் பஸ் , ஹோட்டல்களுக்கு OYO போன்ற ஒரு தளம் மாதிரிதான் இந்த பட்ஜெட் பிரைவேட் பள்ளிகள்.
மருத்துவத்தின் தந்தை, ஹிப்போகிரட்டீஸ், கழுதைப் பாலின் நன்மைகளைப் பற்றி முதலில் எழுதியவர். புராதன எகிப்தின் ராணியான கிளியோபாட்ரா தனது தோலின் அழகையும், இளமையையும் பாதுகாக்க 700 கழுதைகளின் பாலில் குளித்ததாக வரலாறு உண்டு.
உலகத்தில் கொடிய நோய்களில் ஒன்று கேன்சர். யாருக்கு வரும், எப்போது வரும், உடலில் எந்த இடத்தில் வரும் என்று சொல்ல முடியாத ஒரு நோய். தன் குடும்பத்தில் ஒருவருக்கு கேன்சர் வந்து, அவர் படும் கஷ்டங்களை பார்த்து தாங்கமுடியாமல், கேன்சர் வந்தவர்களுக்கு உதவும் ந்ல்ல எண்ணத்தில் தொடங்கப்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனம் இது.
மத்திய மாநில அரசுகள் பல நூற்றுக்கணக்கான மக்கள் நலத்திட்டங்களை கொண்டு வந்துள்ளது. நம்மில் பலருக்கு அரசாங்கத்தின் திட்டங்கள் யாவை? அதில் யார் பயன் பெற முடியும்? என்பது தெரியாது.