உங்களிடம் ஒரு நல்ல ஐடியா இருக்கிறது, அதை ஒரு வணிக வடிவமாக மாற்ற விரும்புகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அப்போது உங்களுக்கு யார் உதவுவார்கள் என்ற எண்ணம் தான் முதலில் வரும்.
‘‘தமிழ்நாடு இன்னும் தனக்கென தனியாக ஒரு ஸ்டார்ட் அப் பாலிசி கொண்டு வரவில்லை. இதற்காக பல வருடங்களாக பேசி வருகிறது. பாலிசியும் ரெடியாகி விட்டது. தமிழ்நாட்டின் இரண்டாம் கட்ட நகரங்கள், கிராமங்கள் முன்னேறும் வகையில் அங்கு ஸ்டார்ட் அப்-கள் அமைக்கும் வகையில் பாலிசி அமையும் எனத் தெரிகிறது. ஆனால் இன்னும் அறிமுகமாகவில்லை. லேட்டா வந்தாலும், லேட்டஸ்டா வந்திருக்கேன் என்ற பாணியில் நல்ல ஒரு ஸ்டார்ட்அப் பாலிசி தமிழ்நாட்டிற்கு தேவை…’’