இந்தியா போன்ற பெரிய நாடுகளில் சுற்றுப்புற சூழல் மாசு பெரிய தீங்குகளை விளைவிக்கிறது. நமக்கு தெரிந்தும், தெரியாமலும் பல மாசுக்களை உருவாக்க காரணமாக நாம் இருக்கிறோம்.
உலகத்தில் சுற்றுப்புற சூழல் மாசுபாடு அதிகம் உள்ள நகரங்களின் பட்டியலில் முதல் இருபது இடங்களில் இந்தியாவின் 10 நகரங்கள் இடம்பெற்றுள்ளன. இது உங்களில் பலருக்கு கவலையும் அதிர்ச்சியுமாக இருக்கும்.
ஒரு முறை உபயோகித்துவிட்டு தூக்கி எறியும் பிளாஸ்டிக் பைகளால் சுற்றுச்சூழலுக்கும் புவிக்கும் மனிதனுக்கும் ஏற்படும் தீமைகளைப் பட்டியலிட்டு, அவ்வகை பிளாஸ்டிக் பைகளை உபயோகிக்க வேண்டாம் என்று அரசாங்கம் கூறியதும், பெரும்பாலான வணிக நிறுவனங்களும் கடைகளும் துணிப்பைகள் மற்றும் காகிதப் பைகளை உபயோகிக்க ஆரம்பித்துவிட்டன. இதிலிருந்துதான் தனது ‘ஸ்டார்ட் அப்’ தொழில் ஐடியாவைப் பிடித்துள்ளார்