நாம் இருப்பது மில்லினியல்கள் அதிகமாக வாழும் காலம். ஆதலால் பழையன கழிதலுக்கு அதிகம் ஸ்டார்ட் அப் கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதில்  ஆச்சரியம் இல்லை. அந்த காலத்தில் ஒரு கட்டில் வாங்கினாலோ அல்லது ஒரு டேபிள் வாங்கினாலோ அது காலத்துக்கும் உழைக்குமா என்று பார்ப்பார்கள். பெரும்பாலும் ஆசாரி வீட்டிற்கு வந்து அந்த கட்டிலை அல்லது டேபிளை செய்து கொடுப்பார். ஆனால் இன்றைய தினத்தில் ஓடிக்கொண்டிருக்கும் உலகத்தில் யாருக்கும் எதற்கும் நேரமில்லை. குறிப்பாக இளைஞர்களுக்கு நேரமே இருப்பதில்லை. ஆதலால் எல்லாவற்றையும் “டூ மினிட்ஸ் நூடுல்ஸ்” போல உடனடியாக கடைக்கு சென்று வாங்க நினைக்கிறார்கள். அது 3 முதல் 5 வருடம் வரை உழைத்தால் போதும் என்று நினைக்கிறார்கள். ஏனெனில் 5 வருடம் கழிந்தால் புதிய மாடல் வந்து விடும், அதை வாங்க வேண்டும் என்ற எண்ணம் தான்.  இதனால் இவர்களை குறி வைத்து பல பழையன கழிதலுக்கு இணையதளங்கள் வந்துள்ளன.  இதன் மூலம் பழைய பொருட்களை ஒருவர் விற்க முடியும். அதை வாங்கவும் ஒருவர் இருப்பார் என்பது தான் கால சக்கரம்.

இது போன்ற இணையதளங்கள், உபயோகப்படுத்தப்பட்ட மொபைல் போன் களிலிருந்து, கார்கள் வரை விற்கின்றன.  ஒருவருக்கு உபயோகப்படாத பொருள் இன்னொருவருக்கு மிகவும் தேவைப்படும் பொருளாகவும் இருக்கலாம். இதை வைத்துதான் இந்த இணையதளங்கள் தங்கள் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கின்றன.

இதற்கென ஆரம்பிக்கப்பட்டுள்ள சில ஸ்டார்ட் அப் இணையதளங்கள் சில பொருட்களில் மட்டுமே கவனம் செலுத்துகின்றன. சில இணையதளங்கள் சில ஊர்களில் மட்டுமே கவனம் செலுத்துகின்றன என்பதை நினைவில் வைக்க வேண்டும். கீழ்க் கண்ட இணையத்தளங்களுக்கு போய் பாருங்கள் :

www.secondhandbazaar.in 

www.togofogo.com 

www.allindiabazaar.in 

www.usedfurnitures.in 

www.cardekho.com 

www.secondhandmall.com 

www.olx.in 

www.maxdeal.in 

www.quikr.com www.gozefo.com

Read More