கால்களில் சக்கரத்தை மாட்டிக்கொண்டு இயந்திரகதியாக ஓடிக்கொண்டிருக்கும் மக்களுக்கு தற்போதைய தொழில் நுட்பம் மிகவும் துணை போகிறது.
உலகத்தில் சுற்றுப்புற சூழல் மாசுபாடு அதிகம் உள்ள நகரங்களின் பட்டியலில் முதல் இருபது இடங்களில் இந்தியாவின் 10 நகரங்கள் இடம்பெற்றுள்ளன. இது உங்களில் பலருக்கு கவலையும் அதிர்ச்சியுமாக இருக்கும். காரணம் உங்கள் வருங்கால சந்ததிகள் இந்த மாசுக் கட்டுப்பாடுகளை எப்படி எதிர்கொள்ளப் போகிறார்களோ என்று நினைத்து.
எல்லாம் தெரிந்திருந்தும் எதற்கும் கவலைப்படாமல் பலர் நமது ஊர்களையும் சுற்றுப்புறங்களையும் பல வகைகளில் சுகாதாரக் கேடுகளுக்கு ஆளாக்கி கொண்டிருக்கிறார்கள் என்பது மிகவும் வருந்தத் தக்கது.
உலகமே ரூம் போட்டு யோசித்து கொண்டிருப்பது கொரோனாவை எப்படி ஒழிப்பது அல்லது படிப்படியாக குறைப்பது என்பதுதான். பெங்களூரை சேர்ந்த விஞ்ஞானி ஒரு கருவியை கண்டுபிடித்துள்ளார். ட்ரம் வடிவில் இருக்கும் அந்த கருவிக்கு ஷைக்கோகேன் (Shycocan) என்று பெயரிட்டுள்ளது. கரோனா வைரஸில் பரவியிருக்கும் ஸ்பைக் புரோட்டீனை நடுநிலையாக்குவதில் இந்த கருவி பெரும் பங்கு வகிக்கிறது. இந்த ஸ்பைக் புரோட்டீனை நடுநிலையாக்குவதால் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க முடிகிறது. கொரோனா வைரஸ் உள்ள ஒருவர் தும்மும்போதும், இருமும் போதும் பரவும் வைரஸ் கிருமிகளை பெருமளவில் இந்த கருவி கட்டுப்படுத்துகிறது. இந்தக் கருவியை அமெரிக்காவிலுள்ள யுஎஸ் எப்.டி.ஏ., யூரோப்பியன் யூனியன் ஆகியவை அங்கீரித்துள்ளன. இந்த கருவியிலிருந்து வெளியேற்றப்படும் எலக்ட்ரான் கதிர்கள் சுமார் 99.6 சதவிகிதம் கொரோனா வைரஸ் கிருமிகளை கொல்லும் ஆற்றல் கொண்டவை. விரைவில் அமெரிக்காவில் முதலில் சந்தைக்கு வரும் என எதிர்பார்க்கலாம்.
இந்தியாவில் தற்போது ஆறு கோடிக்கும் அதிகமான குறு, சிறு மற்றும் நடுத்தர கம்பெனிகள் இருக்கின்றன. அதாவது எம்.எஸ்.எம்.இ., (MSME) என்று அழைக்கப்படும் கம்பெனிகள். இது தவிர இந்தியாவில் லட்சக்கணக்கான கைவினைக் கலைஞர்கள், ஸ்டார்ட் அப் கம்பெனிகள் உள்ளது. இவர்கள் வெளிநாடுகளில் தங்களுடைய பொருட்களை விற்பதுதான் கடினமான காரியம், இதுதான் இந்த கம்பெனிகளின் தலையாய பிரச்சினை.
கண்ணன், சேலம்: ஒரு வணிக நிறுவனத்தின் முகப்பில் அல்லது வாசலில் கண்டிப்பாக பெயர் பலகை (Display of Name Board) வைக்க வேண்டுமா?
தரம் உங்கள் பொருள்களுக்கு மிகவும் முக்கியமானது. ஸ்டார்ட் அப் கம்பெனிகள் அதன் முக்கியத்துவத்தை தெரிந்து கொள்வது மிகவும் முக்கியம். இதை உங்களுக்கு இந்த தொடர் கட்டுரை மூலமாக எடுத்துரைக்கிறார் மதுரையை சேர்ந்த செல்வ சுந்தர் ராஜன். இவர் தர நிர்ணயம் பற்றி பல இடங்களில் வகுப்புகள் எடுத்து வருபவர்.
தனிநபர் வசிப்பிடமாக கருதப்படும் வீடுகளுக்கு செலுத்தப்படும் வாடகைக்கு சரக்கு மற்றும் சேவை வரிவிதிக்கப்படுகிறதா ?
காலம் காலமாக விவசாயிகள் தங்களுடைய உற்பத்திகளை தரகர்கள் மூலமாகத் தான் விற்று வந்திருக்கின்றனர். நேரடியாக உபயோகிப்பாளர்களுக்கு விற்று பழக்கமில்லை. இடைத்தரகர்களிடமிருந்து விவசாயிகளுக்கு உற்பத்தி பொருளுக்கான பணம் மிகவும் குறைவாகவும், தாமதமாகவும் கிடைத்தது.
உலக சுகாதார மையம் (WHO), ஆயுஷ் (AYUSH), மற்றும் ஐஎஸ்ஓ (ISO) போன்ற அங்கீகாரங்களைப் பெற்ற, திருச்சியில் உள்ள ஆரண்யா ஹெல்த்கேர் நிறுவனர் திருமதி. வீரஜோதி அவர்களை அலைபேசியில் பேட்டி எடுக்கும் ஒரு வாய்ப்பு கிடைத்தது. இயக்குனராக இருந்து நிறுவனத்தை திறம்பட இயக்கும் இவரது கணவர் திரு. மாரிமுத்து அவர்களும் பேட்டியில் இணைந்து கொண்டார்.
இன்று சிறிய அளவில் பிசினஸ் செய்கிறவர்களுக்கு இருக்கும் ஒரு பெரிய கஷ்டம் என்னவென்றால், யார் யாருக்கு என்னென்ன கடன்கள் கொடுத்திருக்கிறோம் என்பதை குறித்து வைத்து கொள்வதுதான். விற்கும் போது சின்ன சின்ன துண்டு சீட்டில் எழுதி வைத்துவிட்டு அப்படியே மறந்து விடுவது வழக்கம். பின்னர் அந்த பணத்தில் பாதி வராமல் போய்விடும்.