இந்தியாவில் வெளிநாட்டு கம்பெனிகள் back office processing தொடர்பான பணிகளை செய்ய ஆரம்பித்ததிலிருந்தே அந்த கம்பெனிகளில் வேலைக்கான ஆட்கள் தேவை அதிகரித்துள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான வேலைக்கு ஆட்கள் தேடும் கம்பெனிகள் புதிதாக வந்துள்ளது.

இருந்தாலும், 100 ஆட்கள் ஒரு கம்பெனிக்கு தேவை என்றால் ஆயிரம் பேரிடம் போன் செய்து பேசி அவர்களில் pre-screening செய்து அதன் பின்னர் அந்தந்த கம்பெனிகளுக்கு இண்டர்வியூக்கு அனுப்புவது என்பது ஒரு recruitment company களுக்கு  மிகப்பெரிய கடினமான வேலை. இதுவே ஒரு கம்பெனிக்கு 1000 பேர் வரை தேவை என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். அந்த 1000 பேரை தேர்ந்தெடுப்பது இன்னும் எவ்வளவு கடினமாக இருக்கும்.

குரல் தான் அடிப்படை

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, குரல் அதாவது வாய்வழி தொடர்பு மனிதகுலத்தின் முதன்மையான தகவல்தொடர்பு முறையாக செயல்படுகிறது. இன்றும் கூட, அது நமது தொடர்புகளுக்கு மையமாக உள்ளது. குரல் நமக்குள் வேரூன்றி உள்ளது.

ரூட்டில் (Rootle) என்ற ஸ்டார்ட் அப் கம்பெனி வேலைக்கு ஆட்களை தேர்ந்தெடுக்கும் போது pre-screening க்கு அவர்களை அழைக்கும் போது ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் டெக்னாலஜியை உபயோகப்படுத்தி வேலைக்கு ஆட்கள் சேர்க்கும் பணியில் மனிதனைப் போன்ற உரையாடலைப் பயன்படுத்துவது, ஆட்சேர்ப்பு செயல்முறைக்கு தனிப்பயனாக்கப்பட்ட மற்றும் திறமையான தொடர்பைக் கொண்டு வரும் என்று அறிந்து அதில் முழுமையாக கவனம் செலுத்தி வெற்றியும் கண்டிருக்கிறார்கள்.

பாரம்பரியமாக நாம் கடைபிடிக்கும் ஒவ்வொருவரையும் நாமே கூப்பிட்டு அவர்களுடன் பேசுவதில் பல நன்மைகள் இருந்தாலும், நாம் ஆட்களை அழைக்கும் போது பாதி நேரங்களில் அவர்களை தொடர்பு கொள்ள முடிவதில்லை. இதனால் வேகமாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த உலகத்தில் பல சமயங்களில் வெறுப்பாகி விடுகிறோம். சரியான திறமையைக் கண்டறிய ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான அழைப்புகளைச் செய்வது ஆட்சேர்ப்பு செய்பவர்களுக்கு சோர்வாக இருக்கிறது.

இதற்கு தீர்வு ஜெனரேட்டிவ் ஏஐ மூலமாக செய்யப்படும் வாய்ஸ் இண்டர்வியூக்கள் தாம். அதாவது இந்த ஸ்டார்ட் அப் கம்பெனி ஆட்டோமேட்டிவ் காலிங் மூலமாக அந்த நபர் கிடைக்கும் வரையில் பல தடவைகள் அவரை தொடர்பு கொள்ளுகிறது. அப்படி தொடர்பு கிடைக்கும் போது தானாகவே வாய்ஸ் இண்டர்வியூவை ஆரம்பிக்கிறது. சரியாக கூறுவதானால், உண்மையான மனித தொடர்புகளைப் பிரதிபலிக்கும் இயற்கையான ஒலி உரையாடல்களை உருவாக்க இது உதவுகிறது.

இது நேரத்தையும் முயற்சியையும் மிச்சப்படுத்துவது மட்டுமல்லாமல், சாத்தியமான candidates களுடன் தொடர்புகளை உறுதி செய்கிறது.

இந்த ஆட்டோமேஷன் ஆட்சேர்ப்பு செய்பவர்களின் நிர்வாகச் சுமையைக் குறைப்பது மட்டுமல்லாமல், முழு நேர்காணல் செயல்முறையையும் துரிதப்படுத்துகிறது, பணியமர்த்தல் மற்றும் செலவுக்கான நேரத்தை மிச்சப்படுத்துகிறது. இது அதிக எண்ணிக்கையிலான விண்ணப்பதாரர்களைக் கையாள்பவர்களுக்கு குறிப்பிடத்தக்க நன்மையாகும். AI அமைப்புகள் மூலம் ஒரே நேரத்தில் பல நேர்காணல்களை திறமையாக கையாள முடியும். இது தேர்வாளர்கள் மதிப்பீட்டின் தரத்தை சமரசம் செய்யாமல் பார்த்து கொள்ளவும் உதவுகிறதுமேலும் விபரங்களுக்கு இந்த ஸ்டார்ட் அப் கம்பெனியின் இணையதளம் www.rootle.ai. சென்று பாருங்கள்.

Read More