இந்த நாடே பெருந்தொற்று நோயுடன் போராடிக் கொண்டிருக்கும்போது ‘Necessity is the mother of invention’ (தேவைதான் கண்டுபிடிப்பின் தாய்) என்ற வாசகத்துக்கு இணங்க, சில புதிய முயற்சிகளும் கண்டுபிடிப்புகளும் நாள்தோறும் வந்து கொண்டிருக்கின்றன.
கரூர் ஸ்ரீ சங்கர வித்யாலயா பள்ளியின் மாணவர் விகாஷ் தனது ஆசிரியர் திரு. சதீஷ்குமார் அவர்களின் உதவியோடு டிபார்ட்மென்டல் ஸ்டோர்களில் பயன்படுத்தப்படும் பில் போடும் ட்ராலிகளை உருவாக்கியுள்ளார்.
100 ஆண்டுகளைக் கடந்த பூனா பொறியியல் கல்லூரி, 160 ஆண்டுகளை கடந்த சசூன் மருத்துவமனைக்காக ‘நார்ட் டிரைவ் சிஸ்டம்’ நிறுவனத்தின் இந்திய தொழிற்சாலையின் தொழில்நுட்ப உதவியுடன் மோட்டார் பொருத்தப்பட்ட ஸ்ட்ரெச்சர் படுக்கையை சமீபத்தில் வடிவமைத்து தயாரித்துள்ளது.
நம் அனைவருக்கும் குழந்தைகள் என்றால் உயிர். ஆட்டிஸம், பெருமூளை வாதம் (செரிபரல் பாலஸி), பேச்சுத் திறன் குறைவு போன்ற குறைபாடு உள்ள குழந்தைகள் பேசும்போது, என்ன சொல்ல வருகிறது என பல நேரங்களில் நமக்குப் புரியாது. குழந்தை என்ன சொல்கிறது என்று புரியாமல் அதன் பெற்றோர்கள் தவித்துப் போவார்கள்.
உலகமே பிளாஸ்டிக் கழிவுகளைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறது. அதற்கு மாற்று வழி என்ன என்று தேடிக்கொண்டிருக்கிறது.