பீகாரை சேர்ந்த ‘சாப்த் கிருஷி சயின்டிபிக்’ என்ற கம்பெனி, விவசாயிகளின் விளைபொருட்களை, குறிப்பாக, காய்கறிகளை குறைந்தபட்ச நாட்கள் கெடாமல் வைத்திருக்க உதவும் ஒரு குளிர்சாதனப் பெட்டியை கண்டுபிடித்திருக்கிறது. இது, ‘சப்ஜி கோதி’ என்று அழைக்கப்படுகிறது. குறைந்த விலையில் உருவாக்கப்பட்ட சேமிப்பு மற்றும் போக்குவரத்துக்கான ஒரு தீர்வு.
இந்திய அரசின் உணவு பதப்படுத்தும் தொழில்களின் அமைச்சகம் வெளியிட்ட உலக உணவு இந்தியா 2017 மாநாட்டின் அறிக்கையின் புள்ளி விபரங்களை இங்கு காண்பது மிகவும் முக்கியமானது. நவீன அறுவடை முறைகள் மற்றும் குளிர்பதன வசதிகள் உள்கட்டமைப்பு போதுமானதாக இல்லாததால், ஆண்டுதோறும் பழங்கள் மற்றும் காய்கறிகள் 4.6% முதல் 15.9% வரை வீணடிக்கப்படுவதை நாம் காணமுடிகின்றது.
சுவக்கி, ஜமோட்டா, உபர் ஈட்ஸ் இருக்கும் உலகத்தில் வேறு ஒரு சிறிய கம்பெனி போட்டி போட முடியுமா என்பதே ஒரு பெரிய கேள்விக்குறிதான். திருவிளையாடல் படத்தில் வரும் வசனமான “சபாஷ் சரியான போட்டி” என்பது போல கோழிக்கோட்டில் ஒரு சரியான போட்டி நடந்துக் கொண்டிருக்கிறது. அதாவது ஒரு சிறிய டெலிவரி கம்பெனிக்கும், பெரிய ஜாம்பவான்களுக்கும் இடையே.
தற்போது ப்ரஷ் சிக்கன், மட்டன், மீன் போன்றவைகளை சுகாதாரமான முறையில் பேக் செய்து உங்கள் வீட்டிற்கே டெலிவரி செய்கிறார்கள் பல
ஹோட்டல்கள் மற்றும் நிறுவனங்களுக்கு சலவைத் தொழில் சேவையை செய்து வந்த பல லாண்டரி கம்பெனிகள் தற்போது வருமானம் கூடுதலாகும் என்ற எண்ணத்தில் வீடுகளுக்கும் அதே சேவையை விரிவு படுத்தியுள்ளனர். உங்கள் வீட்டுக்கே வந்து உங்களின் பழைய அழுக்கு துணிகள், அழுக்கு பொம்மைகள், அழுக்கு ஷூக்கள் வாங்கி சென்று அதை சுத்தம் செய்து 48 மணி நேரத்தில் உங்கள் வீட்டிற்கே கொண்டு வந்து தந்து விடுவார்கள். இந்த சேவைதான் லாண்ட்ரோமேட் என்றும் அழைக்கப்படுகிறது.
வீட்டிலேயே பலர் நளபாகத்தில் சிறந்தவர்களாக இருப்பார்கள். என் நண்பனின் மனைவி வெங்காய சாம்பார், ரசம் வைத்தால் ஊருக்கே மணக்கும். அது போல அவர்கள் செய்யும் லட்டு மிகவும் சுவையாக இருக்கும். எப்போது அவர் வீட்டிற்கு சென்றாலும் இது தான் எனக்கு தேவையான மெனு.