கிராமங்களில் பசுமாடு வளர்ப்பவர்கள் சீம்பால் பற்றி நிச்சயம் அறிந்திருப்பார்கள். ஆனால் நகரவாசிகள் பெரும்பாலானவர்களுக்கு சீம்பால் மற்றும் அதன் நன்மைகள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. பசு கன்று போட்டதும் முதல் மூன்று நாட்கள் வரும் பாலைத்தான் சீம்பால் என்று அழைப்பார்கள். அதில் இருக்கும் சத்துக்கள் வீணாகாமல் பதப்படுத்தி தூளாக்கி சந்தைப்படுத்தும் ஸ்டார்ட் அப் தொழிலைத் நடத்தி வருகிறார் சென்னையைச் சேர்ந்த எஸ். முரளி.
சென்னை ஆதம்பாக்கத்தில் ஒரு வீட்டில் இயங்குகிறது ‘ஸ்பெஷாலிட்டி ஃபுட்ஸ்’ என்னும் அந்த சிறு உணவுத் தொழிற்சாலை. பகல் வேளையில் பம்பரமாகச் சுழன்று மணக்க மணக்க சேவை, பொடி இட்லி, மினி இட்லி மற்றும் கொழுக்கட்டை வகைகளை தயாரிக்கின்றனர். பாரம்பரிய முறையில் தயாரிக்கப்படும் அந்த பலகாரங்கள் பிற்பகலில் ‘பேக்கிங்’ செய்து, நகரின் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களின் கேட்டரிங் துறைகளுக்கு அனுப்புகின்றனர்
காரைக்குடியில் ‘தரமான, சுவையான உணவகம் என்றால் நினைவுக்கு வருவது ‘காரைக்குடி அன்னலெக்ஷ்மி’ தான். ஆரம்பித்த நாளில் இருந்து இன்று வரை உணவு வகைகள் காலத்துக்கேற்ப மாறியதே தவிர, சுவை, தரம், தூய்மை எதுவுமே மாறாமல் 20 ஆண்டுகளாக நிர்வகிக்கும் அந்தப் பெருமைக்குரியவர்
காரைக்குடியில் ‘தரமான, சுவையான உணவகம் என்றால் நினைவுக்கு வருவது ‘காரைக்குடி அன்னலெக்ஷ்மி’ தான். ஆரம்பித்த நாளில் இருந்து இன்று வரை உணவு வகைகள் காலத்துக்கேற்ப மாறியதே தவிர, சுவை, தரம், தூய்மை எதுவுமே மாறாமல் 20 ஆண்டுகளாக நிர்வகிக்கும் அந்தப் பெருமைக்குரியவர் காரைக்குடியைச் சேர்ந்த நா. நாராயணன்.
காவிரி ஆற்றை ஒட்டி இருக்கும் தஞ்சாவூர், நாகை பட்டுக்கோட்டை, திருச்சி போன்ற மாவட்டங்களில் விவசாயம், பால் உற்பத்தி மூலம் கிடைக்கும் வருமானமே முதன்மையானது. விவசாயத்தில் உள்ள கழிவு பொருட்கள் மாடுகளுக்கு தீவனமாக பயன்படுத்தப்படுவதால் இப்பகுதியில் உள்ள விவசாயிகளில் பெரும்பாலோர்
முன்பு பாக்குமட்டை என்பது அழுகி அழியக்கூடியது என்பதாகக் கருதி அதை ஒதுக்கி வைத்திருந்தனர். ஆனால் இவர் இதற்குப் பலவித உருவங்கள் கொடுத்து உண்ணும்போது பரிமாறப் பயன்படுத்தக்கூடிய தட்டுகள், கப், காபி கப், கிளாஸ் இப்படியாகப் பல பொருட்களாக மாறி, இவை விருந்தோம்பலில் மிக முக்கியமான இடத்தைப் பிடித்துவிட்டது என்றால் மிகையாகாது.
‘‘ஃபுட் இண்டஸ்ட்ரி என்றாலே அதன் வெற்றிக்கு சுவைதான் அடிநாதம். அதுக்கு நல்ல மாஸ்டர்ஸ் வேணும். இதே தொழிலில் இருந்த நண்பர்கள் எங்க கடைக்கு நல்ல மாஸ்டர்களை அறிமுகம் செய்துவச்சாங்க. முதல் கடையை 2016 நவம்பரில் ராஜகீழ்ப்பாக்கத்தில் ஆரம்பிச்சோம். பிசினஸ் தொடங்கிய மறுவாரத்திலேயே மிகப் பெரிய சவாலாக பணமாற்றம் வந்தது. அந்தச் சமயத்தில் யாரும் பணம் கொடுத்து வாங்கவே முன்வரலை. அக்கம்பக்கத்தில் இருந்த பலருக்கு, பணத்தைப் பிறகு வாங்கிக்கிறேன்னு சொல்லி, எங்க உணவை கிரெடிட்ல கொடுத்தேன். ஏன்னா, என்னோட கடை உணவின் சுவையை முதலில் அவங்களுக்கு அறிமுகம் செய்து வைக்கணும் என்பதுதான் அப்போதைக்கு என் நோக்கமாக இருந்துச்சு!
‘கிளாஸிக் செட்டிநாடு’ என்ற இவருடைய ஸ்டார்ட் அப் பிசினஸ் மூலமாக இவர் தயாரிக்கும் ஸ்நாக்ஸ், பொடி, ஊறுகாய் வகைகளுக்கு சென்னையிலும் மற்ற இடங்களிலும் நல்ல வரவேற்பு.
பாட்டி தனது பேரனின் நலனில் அக்கறைக் கொண்டு முளைக் கட்டிய தானியங்களால் சத்து மாவு தயார் செய்து அதில் நல்ல பலன் தெரிந்ததால் அதையே வியாபாரமாக திண்டுக்கல்லில் தொடங்கியதுதான்