கிராமங்களில் பசுமாடு வளர்ப்பவர்கள் சீம்பால் பற்றி நிச்சயம் அறிந்திருப்பார்கள். ஆனால் நகரவாசிகள் பெரும்பாலானவர்களுக்கு சீம்பால் மற்றும் அதன் நன்மைகள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. பசு கன்று போட்டதும் முதல் மூன்று நாட்கள் வரும் பாலைத்தான் சீம்பால் என்று அழைப்பார்கள். அதில் இருக்கும் சத்துக்கள் வீணாகாமல் பதப்படுத்தி தூளாக்கி சந்தைப்படுத்தும் ஸ்டார்ட் அப் தொழிலைத் நடத்தி வருகிறார் சென்னையைச் சேர்ந்த எஸ். முரளி.
காவிரி ஆற்றை ஒட்டி இருக்கும் தஞ்சாவூர், நாகை பட்டுக்கோட்டை, திருச்சி போன்ற மாவட்டங்களில் விவசாயம், பால் உற்பத்தி மூலம் கிடைக்கும் வருமானமே முதன்மையானது. விவசாயத்தில் உள்ள கழிவு பொருட்கள் மாடுகளுக்கு தீவனமாக பயன்படுத்தப்படுவதால் இப்பகுதியில் உள்ள விவசாயிகளில் பெரும்பாலோர்