வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பெறுவது கடினம். ஆனால் இழப்பது எளிது. உங்களுடைய வணிகம் என்ன என்பதை உருவாக்க வாடிக்கையாளர்களை அனுமதிக்கும்பட்சத்தில் அவர்கள் உங்களுக்கு விசுவாசமாக இருப்பார்கள்.
இந்தியாவில் தற்போது ஆறு கோடிக்கும் அதிகமான குறு, சிறு மற்றும் நடுத்தர கம்பெனிகள் இருக்கின்றன. அதாவது எம்.எஸ்.எம்.இ., (MSME) என்று அழைக்கப்படும் கம்பெனிகள். இது தவிர இந்தியாவில் லட்சக்கணக்கான கைவினைக் கலைஞர்கள், ஸ்டார்ட் அப் கம்பெனிகள் உள்ளது. இவர்கள் வெளிநாடுகளில் தங்களுடைய பொருட்களை விற்பதுதான் கடினமான காரியம், இதுதான் இந்த கம்பெனிகளின் தலையாய பிரச்சினை.
தமிழகத்தின் பின்னலாடை நகரம் திருப்பூரில் இயற்கை சாயங்கள் தயாரிக்கும் ஸ்டார்ட் அப் பிசினஸ் செய்து வருகிறார் இளைஞர் திவாகர். இவர் இயற்கை சாயங்கள் கொண்ட ஆடைகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்பவர்.
சில்லறை விற்பனையில் சாதனை படைத்த ஃப்யூச்சர் குழுமத்தின் நிறுவனரான கிஷோர் பியானி எழுதியுள்ள புத்தகம், IT HAPPENED IN INDIA. ராஜஸ்தானில் உள்ள நடுத்தர வியாபார பனியா கூட்டு குடும்பத்திலிருந்து மும்பைக்கு குடியேறிய கிஷோரின் குடும்பத்தினர் டெக்ஸ்டைல் வியாபாரத்தை நடத்தி வந்தனர். பாரம்பரிய வணிகத்தில் இருந்து விலகி இருந்த கிஷோர், இந்தியாவின் சில்லறை விற்பனை முறையை ஆழ்ந்து கவனித்தார் . இந்தியா ஒரு மாறுபட்ட நாடு என்பதையும் பிராந்திய அளவில் நுகர்வோர்களின் நடத்தைகளிலும் விருப்பங்களிலும் பல்வேறு மாறுபாடுகளைகொண்டிருக்கிறது என்பதை உணர்ந்த கிஷோர் ஆரம்பகாலங்களில் சந்தைகளிலும், கடை வீதிகளிலும் தனது நேரத்தை செலவிட்டார்.
கோயம்புத்தூர் – பி. என். புதூரில் இயங்கும் சவுமி ஹெர்பல்ஸ் (Soumee Herbals) நிறுவனர் திரு. ராமநாதன் அவர்கள் விற்பனை செய்து வரும் மூலிகை டீ மற்றும் மூலிகை தலைக் குளியல் பவுடர் (Head Wash Powder) குறித்து அலைபேசியில் பேசும்போது, நமது முன்னோர்கள் கண்டுபிடித்து பயன்படுத்திய பல மூலிகைகளின் அருமை, பெருமைகளை தெரிந்து கொள்ள முடிந்தது.
“ஐ வோன்ட் மிஸ்” என்பது செயலி போல் செயல்படும். இந்த அதிவேக பயனர்கள் செயல்முறைக்கு (APProach) எந்தவித தரவிறக்கமோ, உங்கள் மொபைலில் நிறுவும் வேலையோ, அனுமதி தருவிக்கும் பிரச்னைகளோ கிடையாது.
தமிழ்நாட்டில் ஜி.எஸ்.டி பதிவு செய்திட என்ன தகுதிகள் தேவை?
நிச்சயமாக இந்த மூன்றெழுத்தை பல இடங்களில் பார்த்திருப்பீர்கள். இது தரத்துக்கான (Quality) தாரக மந்திரம்.
நம் தொழிலில் தரத்தை (Quality) உயர்த்த விரயங்களை குறைப்பதும் ஒரு வழி என கடந்த இதழில் அறிந்தோம். அந்த விரயங்களை தவிர்ப்பதற்கான தொழில்நுட்பத்தின் பெயர்தான் “Poka-Yoka”.