வித்தியாசமான பெயரில் விசித்திரமான முறையில் ஒருங்கிணைந்த இயற்கை வேளாண் பண்ணையை குவைத்தில் இருந்தபடியே வழி நடத்துகிறார் திரு. குமரேசன்.
எந்த ஒரு வணிகத்திலும் கூட்டாண்மை என்று சொல்லக்கூடிய பார்ட்னர்ஷிப் மூலம் நிறுவனங்கள் முதலீடு, மனித வளங்கள் போன்றவற்றைத் திரட்டுவது மட்டுமல்லாமல், தனிப்பட்ட முறையில் அடைவதற்கு எட்டாக்கனியாக இருக்கும் இலக்குகளையும் அடையலாம்.
அமேசான் நிறுவன பங்குகளில் எண்பது சதவிகிதத்துக்கும் மேலான பங்குகளை வைத்திருப்பவர்கள் வெளியில் இருப்பவர்கள். பூஜ்யத்தில் ஆரம்பித்து கடந்த 26 வருடங்களில் அந்தப் பங்குதாரர்களுக்கான சொத்தை 1 ட்ரில்லியன் டாலராக உருவாக்கியிருக்கிறோம்.
சிறிய பிசினஸ் செய்பவர்கள் தொழிலில் கவனம் செலுத்துவதா? அல்லது கணக்கு வழக்குகளை சரிவர வைத்துக் கொள்வதில் கவனம் செலுத்துவதா? என்ற பெரிய கவலை தற்போது இருக்கிறது.
சுருக்கு பை என்றாலே நமது பாட்டிகளின் நினைவுதான் நமக்கு வரும். அந்த அளவுக்கு பழங்காலம் தொட்டே பாட்டிகளை தொட்டு உறவாடும் சுருக்கு பைகள்.
தென்னிந்தியாவில் எந்த அளவு சக்தி மசாலா, ஆச்சி மசாலா பிரபலமோ அந்த அளவு இந்தியாவின் பல மாநிலங்களில் MDH மசாலா மிகவும் பிரபலம்.
தொழில் தொடங்குவதற்கு ஆசை இருந்தும் அனுபவம் இல்லை என்று அஞ்சுபவர்களுக்கு ஏற்ற தொழில் பிரான்சைஸி என்று சொல்லப்படும் உரிமை வணிகம்.
உலக முதலீட்டாளர்களின் `பிதாமக’னான வாரன் பஃபெட் அவரது நிறுவனமான `பெர்க்ஷைர் ஹாத்வே’ 1999லிருந்து 2019வரை ஏற்பாடு செய்திருந்த பதினோரு பங்குதாரர்கள் கூட்டங்களில் முதலீடு சம்பந்தமாக பேசிய பல கருத்தியல்களை டாக்டர் கிறிஸ்டியன் கோஷ் (Dr. Christian Koch) அலசி ஆராய்ந்து பார்த்து எட்டு முக்கியமான கருத்தியல்களை வாரன் அடிக்கடி சொல்லியதாக `பிசினஸ் இன்சைடர்’ இணையதளத்தில் கட்டுரையொன்றை எழுதியிருக்கிறார். அவை என்னென்ன? எந்த ஆண்டு அவை குறித்துப் பேசியிருக்கிறார் என்பதைப் பார்ப்போம்.
2011 ஆம் ஆண்டில், இந்தியாவில் டியோட்ரண்ட் சந்தை இந்துஸ்தான் யுனிலீவரின் ஆக்ஸ் , பார்க் அவென்யூ மற்றும் நிவியா போன்ற நிறுவனங்களின் தயாரிப்புகள் சந்தையை பெருமளவில் கைப்பற்றியிருந்தன.
எங்கள் பணியாளர்களில் ஒருவரான பாட்ரிசியா சோடோ கேரியர் சாய்ஸ் திட்டத்தின் வெற்றிக்கதையில் ஒருவராவார். அடுத்தவர்களுக்கு உதவ வேண்டுமென்ற சிந்தனை கொண்ட இவருக்கு மருத்துவத் துறையில் பணி செய்ய விருப்பம், ஆனால் உயர்நிலைப்பள்ளி டிப்ளமாவும், அதிக செலவும் அவர் மேலே படிப்பதற்குத் தடையாக இருந்தது. எனவே அவருக்கு தன் கனவு நிறைவேறுமா என்பது உறுதியாகத் தெரியவில்லை. ஆனால் கேரியர் சாய்ஸ் திட்டத்தின் மூலம் படித்து மருத்துவப் பட்டயம் வாங்கிய பின் அவர் அமேசானிலிருந்து விலகி Sutter Gould Medical Foundationல் மருத்துவ உதவியாளராகச் சேர்ந்து தனக்குப் பிடித்த பணியைப் புதிதாகத் தொடங்கினார். பாட்ரிசியா போல தான் விரும்பியதை அடைய முடியாது என நினைத்த பலரும் தங்களது இரண்டாவது பணியை கேரியர் சாய்ஸில் சேர்ந்ததன் மூலம் அடைய முடிந்தது.