அமேசான் நிறுவன பங்குகளில் எண்பது சதவிகிதத்துக்கும் மேலான பங்குகளை வைத்திருப்பவர்கள் வெளியில் இருப்பவர்கள். பூஜ்யத்தில் ஆரம்பித்து கடந்த 26 வருடங்களில் அந்தப் பங்குதாரர்களுக்கான சொத்தை 1 ட்ரில்லியன் டாலராக உருவாக்கியிருக்கிறோம்.
அமேசானின் வெற்றி என்பது அமேசான் கடை வாயிலாக பொருட்களை விற்கும் ஆயிரக்கணக்கான சிறிய, நடுத்தர அளவிலான தொழில்களைச் சார்ந்து இருக்கிறது என்பதை புரிந்து கொள்வது முக்கியமானதாகும்.
எங்கள் பணியாளர்களில் ஒருவரான பாட்ரிசியா சோடோ கேரியர் சாய்ஸ் திட்டத்தின் வெற்றிக்கதையில் ஒருவராவார். அடுத்தவர்களுக்கு உதவ வேண்டுமென்ற சிந்தனை கொண்ட இவருக்கு மருத்துவத் துறையில் பணி செய்ய விருப்பம், ஆனால் உயர்நிலைப்பள்ளி டிப்ளமாவும், அதிக செலவும் அவர் மேலே படிப்பதற்குத் தடையாக இருந்தது. எனவே அவருக்கு தன் கனவு நிறைவேறுமா என்பது உறுதியாகத் தெரியவில்லை. ஆனால் கேரியர் சாய்ஸ் திட்டத்தின் மூலம் படித்து மருத்துவப் பட்டயம் வாங்கிய பின் அவர் அமேசானிலிருந்து விலகி Sutter Gould Medical Foundationல் மருத்துவ உதவியாளராகச் சேர்ந்து தனக்குப் பிடித்த பணியைப் புதிதாகத் தொடங்கினார். பாட்ரிசியா போல தான் விரும்பியதை அடைய முடியாது என நினைத்த பலரும் தங்களது இரண்டாவது பணியை கேரியர் சாய்ஸில் சேர்ந்ததன் மூலம் அடைய முடிந்தது.
(அமேசானின் நிறுவனரும் தலைமைச் செயல் அதிகாரியுமான ஜெஃப்ரி பெசோஸ் (ஜெஃப்) பொறுப்பான்மைக்கு எதிரான (anti-trust), வணிக, நிர்வாக சட்டம் சம்பந்தமாக அமெரிக்க அரசின் பிரதிநிதிகள் சபையால் நியமிக்கப்பட்ட துணைக்குழுவுக்கு முன் ஜூலை 27 ஆம் தேதி சமர்ப்பித்த அறிக்கை.
அமேசான்.காம் என்கிற ஸ்டார்ட்-அப்புக்கான ஆரம்ப முதலீடு பிரதானமாக என்னுடைய பெற்றோர்களிடமிருந்து கிடைத்தது. அவர்களுடைய சேமிப்பிலிருந்து பெருமளவு தொகையை நான் செய்யப்போவது என்னவென்று புரிந்து கொள்ளாமலே முதலீடு செய்தனர்.
வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பெறுவது கடினம். ஆனால் இழப்பது எளிது. உங்களுடைய வணிகம் என்ன என்பதை உருவாக்க வாடிக்கையாளர்களை அனுமதிக்கும்பட்சத்தில் அவர்கள் உங்களுக்கு விசுவாசமாக இருப்பார்கள்.
நீங்கள் ஒரு சிறப்பான அனுபவத்தை உருவாக்கும்பட்சத்தில் வாடிக்கையாளர்கள் அது குறித்து ஒருவருக்கொருவர் பேசிக் கொள்வார்கள். வாய்மொழி (word of mouth) மிகவும் சக்தி வாய்ந்தது” என்கிறார்