இந்த நாடே பெருந்தொற்று நோயுடன் போராடிக் கொண்டிருக்கும்போது ‘Necessity is the mother of invention’ (தேவைதான் கண்டுபிடிப்பின் தாய்) என்ற வாசகத்துக்கு இணங்க, சில புதிய முயற்சிகளும் கண்டுபிடிப்புகளும் நாள்தோறும் வந்து கொண்டிருக்கின்றன.
முன்னமெல்லாம் காதி என்றாலே காத தூரம் ஓடுவோம். ஆனால் தற்போது காதி பிராண்ட் இந்திய அளவில் பிரபலமாகிக் கொண்டு வருகிறது.
பிரதமர் மோடி தனது சமீபத்திய “மான் கி பாத்” வானொலி பேச்சில் உள்ளூர் பொம்மைகள் உற்பத்திக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
சில்லறை விற்பனையில் சாதனை படைத்த ஃப்யூச்சர் குழுமத்தின் நிறுவனரான கிஷோர் பியானி எழுதியுள்ள புத்தகம், IT HAPPENED IN INDIA. ராஜஸ்தானில் உள்ள நடுத்தர வியாபார பனியா கூட்டு குடும்பத்திலிருந்து மும்பைக்கு குடியேறிய கிஷோரின் குடும்பத்தினர் டெக்ஸ்டைல் வியாபாரத்தை நடத்தி வந்தனர். பாரம்பரிய வணிகத்தில் இருந்து விலகி இருந்த கிஷோர், இந்தியாவின் சில்லறை விற்பனை முறையை ஆழ்ந்து கவனித்தார் . இந்தியா ஒரு மாறுபட்ட நாடு என்பதையும் பிராந்திய அளவில் நுகர்வோர்களின் நடத்தைகளிலும் விருப்பங்களிலும் பல்வேறு மாறுபாடுகளைகொண்டிருக்கிறது என்பதை உணர்ந்த கிஷோர் ஆரம்பகாலங்களில் சந்தைகளிலும், கடை வீதிகளிலும் தனது நேரத்தை செலவிட்டார்.
இந்தியாவின் நிதி ஆயோக், அட்டல் இந்நோவேஷன் மிஷன் இரண்டும் இணைந்து 15 புதிய சவால்களை ஸ்டார்ட் அப் கம்பெனிகளுக்கும், எம்எஸ்எம்இ கம்பெனிகளுக்கும் அறிவித்துள்ளன.