உலக மக்கள் இன்று அதிகம் உபயோகிக்கும் செயலிகளில் முதன்மை இடத்தை தக்க வைத்துள்ளது வாட்ஸப் செயலி தான். இதற்கு முழுமுதற்காரணம் அதன் இலவச தரவிறக்கம் என்பது மட்டுமல்ல, அதன் பயன்பாடு மிக எளிமையாகவும், நேர்த்தியாகவும், நம்மை கவரும் விதமாகவும் அமையப் பெற்றது தான்.
அன்றாட தேவைகளுக்கு நவீன முறையில் தீர்வுகளை சுலபமாக வழங்குவதே இவர்களது நோக்கம். ஆமாம் ரொம்ப சிம்பிளாக உங்கள் சட்டை பாக்கெட்டில் சூப்பர் மார்க்கெட்டை செயல்பட வைத்திருக்கிறார்கள்.
அடுத்த வருடம் நுகர்வோர்களின் தேவைகளில் என்னென்ன மாற்றங்கள் வரும் என்பது பலருக்கு தெரியாமல் இருக்கும் சூழ்நிலையில், சிறிய மற்றும் நடுத்தர கம்பெனிகளின் உரிமையாளர்களிடம் சென்று அடுத்த பத்து வருடங்களை பற்றி தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள், அப்படி தெரிந்து வைத்துக் கொண்டால்தான் உபயோகிப்பாளர்களின் மனங்களை புரிந்து கொண்டு நீங்கள் அதற்கு தகுந்தாற்போல் உங்களுடைய தயாரிப்புகளை நுகர்வோர்களிடம் கொண்டு செல்ல முடியும் எனக் கூறினால்
பல உணவகங்கள் மேலே உள்ள கம்பெனிகளின் செயலிகளில் தங்களை பதிவு செய்து கொண்டு தங்களது விற்பனைகளை கூட்டிக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் தோன்றிய ஒரு புதிய முயற்சிதான் “கிளவுட் கிச்சன்” (Cloud Kitchen). இதில் நீங்கள் போய் உட்கார்ந்து சாப்பிட முடியாது, ஆர்டர் மட்டுமே பண்ண முடியும்.
2000 வருஷத்தில் இந்தியாவில் நுழைந்த ஈ-காமர்ஸ் துறை இன்றைய தினத்தில் கொடி கட்டிப் பறக்கிறது. காரணம் மொபைல் உபயோகம், இந்தியாவின் மக்கள் தொகை. 2000 ம் வருஷத்தில் பாசி.காம் (baazee.com) என்ற வாங்குபவர், விற்பவர் இணையதளம் ஆரம்பிக்கப்பட்ட போது பலர் இணையம் மூலமாக யாராவது பொருட்கள் வாங்குவார்களா? என்ற பெரிய கேள்வியை எழுப்பினார்கள். பின்னர் 2004ம் ஆண்டு இந்த இணையதளத்தை ஈபே நிறுவனம் 55 பில்லியன் டாலர் (இன்றைய மதிப்பில் ரூபாய் 385 கோடி) கொடுத்து வாங்கி தன்னகப்படுத்திக் கொண்டது.
2007ம் வருடம் அமேசான் நிறுவனத்தில் வேலை பார்த்த இரண்டு இளைஞர்கள் சச்சின் பன்சால், சஞ்சய் பன்சால் அவர்களுடைய அமேசான் அனுபவத்தை வைத்து பிளிப்கார்ட் நிறுவனத்தை ஒரு கார் ஷெட்டில் ஆரம்பித்தார்கள். அன்றைய தினத்தில் புத்தகங்களை மட்டும் ஆன்லைனில் விற்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட கம்பெனியாகும். ஆனால் இன்றைய தினத்தில் பிளிப்கார்ட் மூலம் விற்காத பொருட்களே இல்லை என்ற அளவிற்கு வந்து நிற்கிறது. கடந்த வருடம் பிளிப்கார்ட் தனது நிறுவனத்தை வால்மார்ட் நிறுவனத்திற்கு 16 பில்லியன் டாலருக்கு (இன்றைய மதிப்பில் 102,000 கோடி ரூபாய்களுக்கு) விற்று இருக்கிறது.
2007க்கு பிறகு பல வெற்றிகரமான டிராவல்ஸ், கல்யாண புரோகர், வாங்குபவர் விற்பவர் இணையதளங்கள் ஆகியவை வந்து இன்றைய தினமும் அவை சக்கைப் போடு போட்டுக் கொண்டிருக்கின்றன. ஐஆர்சிடிசி, மேக்மை டிரிப், யாத்ரா, கிளியர்டிரிப், ஓயோ, பாலிசி பஜார், பாங்க் பஜார், ரெண்ட்மோஜோ போன்ற நூற்றுக்கணக்கான ஏன் ஆயிரக்கணக்கான இணையதளங்கள் வந்தன.
இந்த ஈ காமர்ஸ் துறை 2021ம் வருடம் 5.88 லட்சம் கோடி ரூபாய்க்கு வர்த்தகமாகும் துறையாக இருக்கும் என கணிக்கப்பட்டிருக்கிறது. அதே சமயத்தில் ரீடெய்ல் துறையில் வர்த்தகம் 84 லட்சம் கோடிகளுக்கு நடக்கும் என கணிக்கப்பட்டிருக்கிறது.
இந்த துறையின் அபரிதமான வளர்ச்சியை மனதில் கொண்டு ரிலையன்ஸ் நிறுவனமும், பிளிப்கார்ட், அமேசான் நிறுவனங்களுக்கு போட்டியாக ஈகாமர்ஸ் துறையில் பெரிய அளவில் வந்து கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடதக்கது.
கோடிக்கணக்கானவர்களின் கையில் மொபைல் இருப்பதால், உங்களிடம் நல்ல யோசனைகள் இருந்தால் பல லட்சங்களுக்கு ஏன் கோடிகளுக்கு நீங்களும் அதிபராகலாம்.
இந்தியாவிற்கு அடுத்தபடியாக இந்திய மக்கள் அதிகம் உள்ளது ஐக்கிய அரபு நாடுகள் தான். அங்கிருக்கும் இந்திய மக்களை குறிவைத்து எப்படி விற்பனை செய்வது என்று பலரும் ரூம் போட்டு யோசித்துக் கொண்டிருக்கும் போது, அமேசான் இந்தியா ஐக்கிய அரபு நாடுகளில் இருக்கும் இந்திய மக்களுக்கு ஆன்லைன் மூலமாகவே இந்தியாவிலிருந்து உங்கள் பொருட்களை விற்கும் வசதியை கொண்டுவந்துள்ளது. அப்படி நீங்கள் விற்கும் பொருட்கள் ஏற்றுமதி என்ற கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.
ஐக்கிய அரபு நாடுகளில் எதற்கு நல்ல வாய்ப்புகள் இருக்கிறது என்று பார்க்கும் போது தங்க ஆபரணங்கள், வைர ஆபரணங்கள், ஆடைகள், அழகு சாதனப் பொருட்கள், மளிகை சாமான்கள் ஆகியவற்றிர்க்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.
ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால் அமேசான் யுஏஇ அங்கு முன்பு பிரபலமாக இருந்த சூக் (Souk) என்ற கம்பெனியை 2017 ஆம் வருடம் கையகப்படுத்தியுள்ளது. இதனால் பலலட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள் அமேசான் யூஏஇ க்கு அப்படியே மாறி இருந்தார்கள்.
வெளிநாடுகளில் வியாபாரம் மூலமாக அமேசான் இந்தியா தற்போது வருடத்திற்கு 7 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு செய்து வருகிறது. இதை 35 ஆயிரம் கோடி ரூபாயாக கூட்டுவதற்கான முயற்சிகள் நடந்து வருகிறது.
ஐக்கிய அரபு நாடுகளில் இருக்கும் மக்களில் 4 சதவீத மக்கள் ஆன்லைன் மூலமாக வாங்குவதற்கு ஆர்வமாக இருக்கின்றனர். அங்கு 20 லட்சம் இந்தியர்கள் இருக்கிறார்கள். இது ஐக்கிய அரபு நாடுகளின் மொத்த மக்கள் தொகையில் 27 சதவீதம் ஆகும். கடந்த வருடம் ஐக்கிய அரபு நாடுகளுக்கு மட்டும் 31 பில்லியன் டாலர் அளவிற்கு, அதாவது 2 லட்சத்து 17 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஏற்றுமதி நடைபெற்றிருக்கிறது.
தற்போது அமேசான் இந்தியா இந்தியாவிலிருந்து அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு தங்கள் பொருட்களை விற்கலாம் என்று அனுமதி அளித்திருக்கிறது. இனி இதில் ஐக்கிய அரபு நாடுகளும் சேரும்.
இந்திய ஆடைகள் அங்கு இந்தியர்களாலும், அரபு நாட்டு மக்களாலும் விரும்பி வாங்கப் படுவதால் திருப்பூர் போன்ற ஊர்களில் இருக்கும் கம்பெனிகளுக்கு ஒரு பெரிய வாய்ப்பாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
ஷாப்பிங் மால்களின் முக்கிய அம்சமே விண்டோ ஷாப்பிங்தான். அதாவது மாலுக்கு போய், அங்கிருக்கும் எல்லாவற்றையும் பார்க்கலாம், வாங்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. தரம் நன்றாகவும், விலை குறைவாகவும் டிஸ்கவுண்ட் அதிகமாகவும் யார் தருகிறார்களோ அங்கு பார்த்து வாங்கலாம்.
அது போல உங்களுக்கு கடன்கள் வாங்கும் போது முன் பின் தெரியாத ஒரு வங்கியில் அல்லது நிதி நிறுவனத்திடம் போய் விழ வேண்டாம். யார் குறைவான வட்டியில் தருகிறார்கள் என்று ஒப்பிட்டு பார்த்து விட்டு வாங்க பல இணையதளங்கள் வந்து விட்டன. அதில் முக்கியமான இணைய தளங்களில் ஒன்று “மை லோன் கேர்” (myloandcare.in).
மை லோன் கேர் என்ற கம்பெனி இந்தியாவின் பெரிய ஆன்லைன் மார்க்கெட் பிளேஸ் ஆகும்.
இந்த இணையதளத்தில் உங்களுக்கு என்ன லோன் தேவை என்று கூறிவிட்டால் உங்கள் தகுதிக்கு ஏற்ப எந்த வங்கி அல்லது நிதி நிறுவனம் உங்களுக்கு ஒத்து வரும் என்று கூறி அதிலிருந்து கடன்கள் வாங்க உதவி செய்கிறார்கள்.
புது வீட்டுக் கடன், வீட்டு அடமானக் கடன், வாகனக் கடன், கோல்டு லோன், பிசினஸ் லோன், கிரிடிட் கார்டு, பர்சனல் லோன் ஆகியவைகள் வாங்குவதற்கு இந்த இணையதளம் உதவி செய்கிறது.
இவர்களிடம் 20 லட்சம் பதிவு செய்த உபயோகிப்பாளர்கள் இருக்கிறார்கள். 25 வங்கிகளிடம் பார்ட்னர் பேங்க் அரேஞ்ச்மெண்ட் வைத்துள்ளார்கள். ஆன்லைன் மூலமாகத்தான் விண்ணபிக்க வேண்டும். இவர்கள் இந்தியாவில் 1100 ஊர்களில் உங்களுக்கு கடன்கள் கிடைக்க வழி வகை செய்கிறார்கள். நீங்கள் ஆன்லைனில் அப்ளை செய்த பிறகு நீங்கள் கடன் பெறத் தகுதியானவர் என்றால் அவர்கள் கம்பெனியிலிருந்து உங்களை கூப்பிட்டு வேறு தேவையான டாக்குமெண்ட்களை கேட்பார்கள்.
இதுவரை 30,000 பேருக்கு கடன்கள் வாங்க உதவியுள்ளார்கள்.
உங்களுக்கு லோன் தேவை இருக்கும் பட்சத்தில், இவர்களின் இணையதளத்தில் சென்று உங்களின் விபரங்களை பதிவு செய்ய வேண்டும். நீங்கள் கடன் வாங்க தகுதியானவரா என்று பார்ப்பார்கள். அப்படி தகுதி உங்களுக்கு இருக்கும் பட்சத்தில் அவர்கள் பார்டனர் வங்கிகள் மூலமாக கடன் பெற்று தர ஏற்பாடு செய்வார்கள்.இவர்களுடைய இணையதளம் www.myloancare.in
இப்போது எங்கு சென்றாலும் உங்களின் கையடக்கமான மொபைல் போனில்பல்லாயிரக்கணக்கான புத்தகங்களை ஓரிடத்தில் பார்க்க முடியும் படிக்க முடியும் என்ற நிலை வந்துவிட்டது. முன்பெல்லாம் ஊருக்கு போறோம்ன்னா நாம் எடுத்து வைக்கிற சாமான்களுடன் நான்கு புத்தகங்களும் கூடவே இருக்கும். புத்தகங்கள் துணை இல்லாமல் பலர் வெளியூர் செல்லவே மாட்டார்கள் தற்போது பலருக்கு படிக்கும் பழக்கமே மறந்துவிட்டது. மேலும் புத்தகங்களை எடுத்துச் செல்வது சிரமமாக இருப்பதால், புத்தகங்கள் படிக்கும் பழக்கத்தை இனிமையாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் பல வருடங்களுக்கு முன்பு கிண்டில் ரீடர் வந்தது. கையடக்க பதிப்பு போல, கையடக்க ரீடர்.
பல்லாயிரக்கணக்கான புத்தகங்களை தன்னகத்தே கொண்டு உனக்கு வேண்டியவற்றை எடுத்து படி என்று ஆவலைத் தூண்டுகிறது. இது போல பல ரீடர்கள் வந்துவிட்டாலும், தற்போது சந்தைக்கு புதிதாக வந்திருப்பது ஏர்டெல் புக்ஸ் (Airtel Books). இதில் என்ன புதிய அம்சம் என்றால், இதை தனியாக கிண்டில்ரீடர் போல எடுத்துச் செல்ல வேண்டாம். உங்களிடம் தற்போது இருக்கும் மொபைலில் இந்த செயலியை நிறுவிக் கொள்ளலாம். இதன் மூலம் பல ஆங்கிலம் மற்றும் இந்தி புத்தகங்களை படிக்கும் வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கிறது. ஆனால் புத்தகம் படிப்பதற்க்கும் டவுன்லோட் செய்வதற்க்கும் சிறிது பணம் கட்ட வேண்டியிருக்கும் என்பதை நினைவில் கொள்ளவும். பயணத்தில் தனிமை என்ற பயம் இனி வேண்டாம். உங்களுடன் புத்தகங்களும் பயணிக்கிறது என்பது ஒரு இனிமையான அனுபவம். புத்தகப்பிரியர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம். ஆரம்பித்த ஒரு மாதத்திலேயே ஒரு லட்சம் டவுண்லோட் கள் செய்யப்பட்டுள்ளது என்பது இதன் சிறப்பம்சம்.
ப்ளே ஸ்டோரில் சென்று Airtel Books யை டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
நாம் இருப்பது மில்லினியல்கள் அதிகமாக வாழும் காலம். ஆதலால் பழையன கழிதலுக்கு அதிகம் ஸ்டார்ட் அப் கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதில் ஆச்சரியம் இல்லை. அந்த காலத்தில் ஒரு கட்டில் வாங்கினாலோ அல்லது ஒரு டேபிள் வாங்கினாலோ அது காலத்துக்கும் உழைக்குமா என்று பார்ப்பார்கள். பெரும்பாலும் ஆசாரி வீட்டிற்கு வந்து அந்த கட்டிலை அல்லது டேபிளை செய்து கொடுப்பார். ஆனால் இன்றைய தினத்தில் ஓடிக்கொண்டிருக்கும் உலகத்தில் யாருக்கும் எதற்கும் நேரமில்லை. குறிப்பாக இளைஞர்களுக்கு நேரமே இருப்பதில்லை. ஆதலால் எல்லாவற்றையும் “டூ மினிட்ஸ் நூடுல்ஸ்” போல உடனடியாக கடைக்கு சென்று வாங்க நினைக்கிறார்கள். அது 3 முதல் 5 வருடம் வரை உழைத்தால் போதும் என்று நினைக்கிறார்கள். ஏனெனில் 5 வருடம் கழிந்தால் புதிய மாடல் வந்து விடும், அதை வாங்க வேண்டும் என்ற எண்ணம் தான். இதனால் இவர்களை குறி வைத்து பல பழையன கழிதலுக்கு இணையதளங்கள் வந்துள்ளன. இதன் மூலம் பழைய பொருட்களை ஒருவர் விற்க முடியும். அதை வாங்கவும் ஒருவர் இருப்பார் என்பது தான் கால சக்கரம்.
இது போன்ற இணையதளங்கள், உபயோகப்படுத்தப்பட்ட மொபைல் போன் களிலிருந்து, கார்கள் வரை விற்கின்றன. ஒருவருக்கு உபயோகப்படாத பொருள் இன்னொருவருக்கு மிகவும் தேவைப்படும் பொருளாகவும் இருக்கலாம். இதை வைத்துதான் இந்த இணையதளங்கள் தங்கள் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கின்றன.
இதற்கென ஆரம்பிக்கப்பட்டுள்ள சில ஸ்டார்ட் அப் இணையதளங்கள் சில பொருட்களில் மட்டுமே கவனம் செலுத்துகின்றன. சில இணையதளங்கள் சில ஊர்களில் மட்டுமே கவனம் செலுத்துகின்றன என்பதை நினைவில் வைக்க வேண்டும். கீழ்க் கண்ட இணையத்தளங்களுக்கு போய் பாருங்கள் :
வீட்டிலேயே பலர் நளபாகத்தில் சிறந்தவர்களாக இருப்பார்கள். என் நண்பனின் மனைவி வெங்காய சாம்பார், ரசம் வைத்தால் ஊருக்கே மணக்கும். அது போல அவர்கள் செய்யும் லட்டு மிகவும் சுவையாக இருக்கும். எப்போது அவர் வீட்டிற்கு சென்றாலும் இது தான் எனக்கு தேவையான மெனு.