ஆப்பிள், அது பழமாக அல்லது தகவல் தொழில்நுட்ப நிறுவனமாக எப்படி இருந்தாலும் ஆதாம், ஏவாள் காலத்திலிருந்து அதற்கென்று ஒரு வரலாறு உண்டு.
உடலுக்குத் தீங்கு தராத, கெமிக்கல் ஏதும் கலக்காத வகையில் கொசுக்களைக் கொல்லும் ஒரு சிறிய கருவியையும், அதில் உபயோகப்படுத்துவதற்கான கொசுவிரட்டி திரவத்தையும் கண்டு பிடித்துக் கொடுத்திருக்கிறார்கள் சென்னை ஐஐடியில் படித்த முன்னாள் மாணவர்கள்
பாட்டி தனது பேரனின் நலனில் அக்கறைக் கொண்டு முளைக் கட்டிய தானியங்களால் சத்து மாவு தயார் செய்து அதில் நல்ல பலன் தெரிந்ததால் அதையே வியாபாரமாக திண்டுக்கல்லில் தொடங்கியதுதான்
மீனவர்கள் கடலுக்கு செல்லும் போது அவர்களின் பெரிய பிரச்சனையே அவர்கள் மீன் பிடிக்க செல்லும் இடத்தில் மீன் கிடைக்குமா, கிடைக்காதா என்பதுதான். தினசரி ஒரு கேள்விக்குறியுடன் தான் மீனவர்கள் கடலுக்குள் செல்கின்றனர். இவர்களின் இந்த பிரச்சனையை ஒரு கருவி மூலமாக
உலகமே பிளாஸ்டிக் கழிவுகளைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறது. அதற்கு மாற்று வழி என்ன என்று தேடிக்கொண்டிருக்கிறது.
பல உணவகங்கள் மேலே உள்ள கம்பெனிகளின் செயலிகளில் தங்களை பதிவு செய்து கொண்டு தங்களது விற்பனைகளை கூட்டிக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் தோன்றிய ஒரு புதிய முயற்சிதான் “கிளவுட் கிச்சன்” (Cloud Kitchen). இதில் நீங்கள் போய் உட்கார்ந்து சாப்பிட முடியாது, ஆர்டர் மட்டுமே பண்ண முடியும்.
இப்போது எங்கு சென்றாலும் உங்களின் கையடக்கமான மொபைல் போனில்பல்லாயிரக்கணக்கான புத்தகங்களை ஓரிடத்தில் பார்க்க முடியும் படிக்க முடியும் என்ற நிலை வந்துவிட்டது. முன்பெல்லாம் ஊருக்கு போறோம்ன்னா நாம் எடுத்து வைக்கிற சாமான்களுடன் நான்கு புத்தகங்களும் கூடவே இருக்கும். புத்தகங்கள் துணை இல்லாமல் பலர் வெளியூர் செல்லவே மாட்டார்கள் தற்போது பலருக்கு படிக்கும் பழக்கமே மறந்துவிட்டது. மேலும் புத்தகங்களை எடுத்துச் செல்வது சிரமமாக இருப்பதால், புத்தகங்கள் படிக்கும் பழக்கத்தை இனிமையாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் பல வருடங்களுக்கு முன்பு கிண்டில் ரீடர் வந்தது. கையடக்க பதிப்பு போல, கையடக்க ரீடர்.
பல்லாயிரக்கணக்கான புத்தகங்களை தன்னகத்தே கொண்டு உனக்கு வேண்டியவற்றை எடுத்து படி என்று ஆவலைத் தூண்டுகிறது. இது போல பல ரீடர்கள் வந்துவிட்டாலும், தற்போது சந்தைக்கு புதிதாக வந்திருப்பது ஏர்டெல் புக்ஸ் (Airtel Books). இதில் என்ன புதிய அம்சம் என்றால், இதை தனியாக கிண்டில்ரீடர் போல எடுத்துச் செல்ல வேண்டாம். உங்களிடம் தற்போது இருக்கும் மொபைலில் இந்த செயலியை நிறுவிக் கொள்ளலாம். இதன் மூலம் பல ஆங்கிலம் மற்றும் இந்தி புத்தகங்களை படிக்கும் வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கிறது. ஆனால் புத்தகம் படிப்பதற்க்கும் டவுன்லோட் செய்வதற்க்கும் சிறிது பணம் கட்ட வேண்டியிருக்கும் என்பதை நினைவில் கொள்ளவும். பயணத்தில் தனிமை என்ற பயம் இனி வேண்டாம். உங்களுடன் புத்தகங்களும் பயணிக்கிறது என்பது ஒரு இனிமையான அனுபவம். புத்தகப்பிரியர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம். ஆரம்பித்த ஒரு மாதத்திலேயே ஒரு லட்சம் டவுண்லோட் கள் செய்யப்பட்டுள்ளது என்பது இதன் சிறப்பம்சம்.
ப்ளே ஸ்டோரில் சென்று Airtel Books யை டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
உலகத்தின் பெரும்பான்மையான நீர் பரப்பை கடின நீர் தான் ஆட்கொண்டுள்ளது. மென் நீர் உலகத்தில் 2.5 சதவீதம் தான் உள்ளது.
கடின நீரை மென் நீராக ஆக்காமல் உபயோகிப்பதால் பல விளைவுகள் இருக்கின்றன. இது பல தோல் வியாதிகள், முடி வறண்டு போவது, முடி உதிருவது, கிட்னி ஸ்டோன் ஆகியவற்றை உண்டாக்குகிறது. இது பற்றிய பல ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. பல கண்டுபிடிப்புகள் வந்துள்ளன. ஆனால் விலை குறைவாக, எளிதாக செய்யும் வசதி வந்திருக்கிறதா என்றால் அதற்கு விடை புதிதாக ஆரம்பித்து இருக்கும் இந்த ஸ்டார்ட் அப் தான். டி கால் (d-cal) என்ற இந்த கம்பெனி கடின நீரை மென் நீராக ஆக்கும் சிறிய சாதனத்தை கண்டுபிடித்துள்ளது. இது ரூபாய் 3600 விலையில் கிடைக்கும். ஒரு வருடம் உபயோகிக்கலாம். இது மார்க்கெட்டில் இருக்கும் பல ப்ராடக்ட்களை விட விலை குறைவு, உபயோகிப்பது எளிது, மின்சார செலவு இல்லை.சென்று பாருங்கள் இவர்களின் இணையதளத்தை www.dcal.co.in