இந்தியாவில் தேன் சந்தை வருடந்தோறும் 10% வளர்ந்து வருகிறது, மேலும் 2024 க்குள் 2800 கோடி ரூபாய் மதிப்பை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேனீ வளர்ப்பு ஒரு லாபகரமான தொழிலாக தற்போது இருக்கிறது.
இந்தியாவில் 70 சதவீதத்துக்கும் அதிகமான மக்கள் கிராமப்புறங்களில் வசிக்கிறார்கள். அதேநேரம் 70 சதவீதத்துக்கும் மேலான டாக்டர்கள் நகரங்களில் வசிக்கின்றனர்.
“ஐ வோன்ட் மிஸ்” என்பது செயலி போல் செயல்படும். இந்த அதிவேக பயனர்கள் செயல்முறைக்கு (APProach) எந்தவித தரவிறக்கமோ, உங்கள் மொபைலில் நிறுவும் வேலையோ, அனுமதி தருவிக்கும் பிரச்னைகளோ கிடையாது.
100 ஆண்டுகளைக் கடந்த பூனா பொறியியல் கல்லூரி, 160 ஆண்டுகளை கடந்த சசூன் மருத்துவமனைக்காக ‘நார்ட் டிரைவ் சிஸ்டம்’ நிறுவனத்தின் இந்திய தொழிற்சாலையின் தொழில்நுட்ப உதவியுடன் மோட்டார் பொருத்தப்பட்ட ஸ்ட்ரெச்சர் படுக்கையை சமீபத்தில் வடிவமைத்து தயாரித்துள்ளது.
நம் அனைவருக்கும் குழந்தைகள் என்றால் உயிர். ஆட்டிஸம், பெருமூளை வாதம் (செரிபரல் பாலஸி), பேச்சுத் திறன் குறைவு போன்ற குறைபாடு உள்ள குழந்தைகள் பேசும்போது, என்ன சொல்ல வருகிறது என பல நேரங்களில் நமக்குப் புரியாது. குழந்தை என்ன சொல்கிறது என்று புரியாமல் அதன் பெற்றோர்கள் தவித்துப் போவார்கள்.
கால்களில் சக்கரத்தை மாட்டிக்கொண்டு இயந்திரகதியாக ஓடிக்கொண்டிருக்கும் மக்களுக்கு தற்போதைய தொழில் நுட்பம் மிகவும் துணை போகிறது.
உலகமே ரூம் போட்டு யோசித்து கொண்டிருப்பது கொரோனாவை எப்படி ஒழிப்பது அல்லது படிப்படியாக குறைப்பது என்பதுதான். பெங்களூரை சேர்ந்த விஞ்ஞானி ஒரு கருவியை கண்டுபிடித்துள்ளார். ட்ரம் வடிவில் இருக்கும் அந்த கருவிக்கு ஷைக்கோகேன் (Shycocan) என்று பெயரிட்டுள்ளது. கரோனா வைரஸில் பரவியிருக்கும் ஸ்பைக் புரோட்டீனை நடுநிலையாக்குவதில் இந்த கருவி பெரும் பங்கு வகிக்கிறது. இந்த ஸ்பைக் புரோட்டீனை நடுநிலையாக்குவதால் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க முடிகிறது. கொரோனா வைரஸ் உள்ள ஒருவர் தும்மும்போதும், இருமும் போதும் பரவும் வைரஸ் கிருமிகளை பெருமளவில் இந்த கருவி கட்டுப்படுத்துகிறது. இந்தக் கருவியை அமெரிக்காவிலுள்ள யுஎஸ் எப்.டி.ஏ., யூரோப்பியன் யூனியன் ஆகியவை அங்கீரித்துள்ளன. இந்த கருவியிலிருந்து வெளியேற்றப்படும் எலக்ட்ரான் கதிர்கள் சுமார் 99.6 சதவிகிதம் கொரோனா வைரஸ் கிருமிகளை கொல்லும் ஆற்றல் கொண்டவை. விரைவில் அமெரிக்காவில் முதலில் சந்தைக்கு வரும் என எதிர்பார்க்கலாம்.
இந்த நாடே பெருந்தொற்று நோயுடன் போராடிக் கொண்டிருக்கும்போது ‘Necessity is the mother of invention’ (தேவைதான் கண்டுபிடிப்பின் தாய்) என்ற வாசகத்துக்கு இணங்க, சில புதிய முயற்சிகளும் கண்டுபிடிப்புகளும் நாள்தோறும் வந்து கொண்டிருக்கின்றன. இப்போது எல்லா அலுவலகங்கள், தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் என எங்கு சென்றாலும் உள்ளே நுழையும்போதே சானிடைசர் பயன்படுத்தி கைகளை சுத்தம் செய்ய வேண்டியிருக்கிறது. சானிடைசரை டிஸ்பென்ஸ் செய்வதற்காக காலால் பெடல் மூலம் இயக்கப்படும் சானிடைசர் டிஸ்பென்சர் என்ற ஒரு இயந்திரம் கிட்டத்தட்ட கட்டாயம் இருக்க வேண்டும் என்ற சூழ்நிலை உருவாகியிருக்கிறது. இப்போது சந்தையில் விற்றுக் கொண்டிருக்கும் இயந்திரங்கள் ஸ்டீல் ஆங்கிள்களை பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது. அதற்கு மாற்றாக கார்ட்போர்டு என்ற காகித அட்டைகளைக் கொண்டு தயாரிக்கப்படும் சானிடைசர் ஸ்டாண்டுகளை பொறியியல் பட்டதாரி இளைஞர் திரு. கார்த்திக் ரத்தினம் ஒரு ஸ்டார்ட்அப்தொழிலாக ஆரம்பித்து இந்த தயாரிப்பை வெற்றிகரமாக சந்தைக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறார். அவருடன் நாம் அலைபேசியில் தொடர்பு கொண்ட கலந்துரையாடலின் விவரங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.
இறைவன் தந்த இயற்கையானகாற்றை நாம் சுதந்திரமாக சுவாசிக்க கூட முடியாத சூழ்நிலையில் இருக்கிறோம். முகக் கவசம் அணிந்து வேறு நபருடன் பேசும்போது நாம் சிரிக்கிறோமா அல்லது கோபப்படுகிறோமா என்பதை வெளிப்படுத்த முடிவதில்லை, எளிதாக மூச்சு விட முடிவதில்லை. தொடர்ந்து முகக்கவசம் அணிய முடியாமல் தவிக்கிறோம். ஒட்டுமொத்த மனித குலமும் கொரோனா வைரசுக்கு பயந்து நடுங்கிக் கொண்டு வீட்டுக்குள் முடங்கி கிடக்கிறது
சமீப காலமாக மனிதர்களை யானைகள் தாக்குவதும், மனிதர்களால் யானைகள் பல்வேறு சிரமங்களுக்கு உட்படுவதும் தினசரி நிகழ்வாக மாறிவிட்டது.