டீ கடைக்கு நாம் சென்றால் “நாலு டீயில் ரெண்டு அரை சக்கரை, ஒண்ணு சக்கரை இல்லாமல், ஒண்ணு நார்மல் சக்கரை” என சொல்லக் கேட்பது சகஜம். அந்த அளவுக்கு பெரும்பாலான மக்களை சர்க்கரை நோய் பாடாய்ப்படுத்துகிறது. சர்க்கரை நோயாளிகளுக்கு வரப்பிரசாதமாக வந்திருப்பது இனிப்புத் துளசி எனப்படும் சீனித்துளசி.
சென்னை – ஆழ்வார்ப்பேட்டை ‘மில்லட் மேஜிக் மீல்’ உணவகத்தில் ‘மில்லட்’ வகைகளில் பல சுவையான ‘மேஜிக்’ ரெசிபிகளைப் பார்க்கலாம்!
இந்திய அரசின் உணவு பதப்படுத்தும் தொழில்களின் அமைச்சகம் வெளியிட்ட உலக உணவு இந்தியா 2017 மாநாட்டின் அறிக்கையின் புள்ளி விபரங்களை இங்கு காண்பது மிகவும் முக்கியமானது. நவீன அறுவடை முறைகள் மற்றும் குளிர்பதன வசதிகள் உள்கட்டமைப்பு போதுமானதாக இல்லாததால், ஆண்டுதோறும் பழங்கள் மற்றும் காய்கறிகள் 4.6% முதல் 15.9% வரை வீணடிக்கப்படுவதை நாம் காணமுடிகின்றது.
ராஜஸ்தான் – பிகானீர் என்ற ஊரில் சிறிய அளவில் தொடங்கப்பட்ட “ஹல்திராம்” இன்று இந்தியாவில் தலைசிறந்த நொறுக்குத்தீனி பிராண்டுகளில் ஒன்றாகும்.
கிராமங்களில் பசுமாடு வளர்ப்பவர்கள் சீம்பால் பற்றி நிச்சயம் அறிந்திருப்பார்கள். ஆனால் நகரவாசிகள் பெரும்பாலானவர்களுக்கு சீம்பால் மற்றும் அதன் நன்மைகள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. பசு கன்று போட்டதும் முதல் மூன்று நாட்கள் வரும் பாலைத்தான் சீம்பால் என்று அழைப்பார்கள். அதில் இருக்கும் சத்துக்கள் வீணாகாமல் பதப்படுத்தி தூளாக்கி சந்தைப்படுத்தும் ஸ்டார்ட் அப் தொழிலைத் நடத்தி வருகிறார் சென்னையைச் சேர்ந்த எஸ். முரளி.
சென்னை ஆதம்பாக்கத்தில் ஒரு வீட்டில் இயங்குகிறது ‘ஸ்பெஷாலிட்டி ஃபுட்ஸ்’ என்னும் அந்த சிறு உணவுத் தொழிற்சாலை. பகல் வேளையில் பம்பரமாகச் சுழன்று மணக்க மணக்க சேவை, பொடி இட்லி, மினி இட்லி மற்றும் கொழுக்கட்டை வகைகளை தயாரிக்கின்றனர். பாரம்பரிய முறையில் தயாரிக்கப்படும் அந்த பலகாரங்கள் பிற்பகலில் ‘பேக்கிங்’ செய்து, நகரின் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களின் கேட்டரிங் துறைகளுக்கு அனுப்புகின்றனர்
தற்போதைய காலகட்டத்தில் பொருட்கள் உபயோகப்பாளர்களுக்கு கிடைப்பதில் பல்வேறு மாற்றங்களை காண முடிகின்றது. ஒரு சமயத்தில் தேவைக்கும் அதிகமாக பொருட்கள் கிடைக்கும் சூழ்நிலை. மற்றொரு சமயத்தில் தட்டுப்பாடான சூழ்நிலை. இந்த மாதிரி வேறுபட்ட சூழ்நிலைகளுக்கு பல்வேறு காரணிகள் மூலமாக இருக்கின்றது.
காரைக்குடியில் ‘தரமான, சுவையான உணவகம் என்றால் நினைவுக்கு வருவது ‘காரைக்குடி அன்னலெக்ஷ்மி’ தான். ஆரம்பித்த நாளில் இருந்து இன்று வரை உணவு வகைகள் காலத்துக்கேற்ப மாறியதே தவிர, சுவை, தரம், தூய்மை எதுவுமே மாறாமல் 20 ஆண்டுகளாக நிர்வகிக்கும் அந்தப் பெருமைக்குரியவர் காரைக்குடியைச் சேர்ந்த நா. நாராயணன்.
சமையலில் கமகமக்கும் நம் தென்னகத்து மசாலாக்களை ‘சதர்ன் ஸ்பைசஸ்’ என்ற பெயரில் தயாரித்து, சந்தைப்படுத்தி வருபவர்கள் சென்னையைச் சேர்ந்த ஜெயமீனாட்சி மற்றும் வள்ளியம்மை. இன்ஸ்டன்ட் தோசை மாவு, இன்ஸ்டன்ட் இட்லி, சாம்பார் பொடி, இன்ஸ்டன்ட் ரசப்பொடி, இன்ஸ்டன்ட் குழம்பு பொடி, பருப்பு மிளகு பொடி, இட்லிப் பொடி, மிளகாய்பொடி, சுக்குப்பொடி, மஞ்சள்பொடி என்று ‘பிரிசர்வேடிவ் மற்றும் செயற்கை நிறம்’ சேர்க்காத இவர்களின் தயாரிப்புகள், இப்போது வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் பணிபுரிபவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம்.
காவிரி ஆற்றை ஒட்டி இருக்கும் தஞ்சாவூர், நாகை பட்டுக்கோட்டை, திருச்சி போன்ற மாவட்டங்களில் விவசாயம், பால் உற்பத்தி மூலம் கிடைக்கும் வருமானமே முதன்மையானது. விவசாயத்தில் உள்ள கழிவு பொருட்கள் மாடுகளுக்கு தீவனமாக பயன்படுத்தப்படுவதால் இப்பகுதியில் உள்ள விவசாயிகளில் பெரும்பாலோர்