வித்தியாசமான பெயரில் விசித்திரமான முறையில் ஒருங்கிணைந்த இயற்கை வேளாண் பண்ணையை குவைத்தில் இருந்தபடியே வழி நடத்துகிறார் திரு. குமரேசன்.
தென்னிந்தியாவில் எந்த அளவு சக்தி மசாலா, ஆச்சி மசாலா பிரபலமோ அந்த அளவு இந்தியாவின் பல மாநிலங்களில் MDH மசாலா மிகவும் பிரபலம்.
சிதம்பரம் ஸ்ரீ ஷண்முகவிலாஸ் ஸ்வீட் ஸ்டால் நிறுவனம் நகரின் முக்கிய பகுதியான தெற்கு ரத வீதியில் அமைந்துள்ளது. இதன் உரிமையாளர் திரு. கணேஷ் அவர்களுடன் தொலைபேசியில் பேசும்போது மிகவும் சுவாரசியமான, அறுசுவை தகவல்கள் தெரிந்து கொள்ள முடிந்தது.
பரபரப்பான இந்த உலகத்தில் நாம் சாப்பிடும் உணவுகள் உண்மையில் ஆரோக்கியமானதா என்ற சந்தேகம் அனைவருக்குமே இருக்கிறது.
பீகாரை சேர்ந்த ‘சாப்த் கிருஷி சயின்டிபிக்’ என்ற கம்பெனி, விவசாயிகளின் விளைபொருட்களை, குறிப்பாக, காய்கறிகளை குறைந்தபட்ச நாட்கள் கெடாமல் வைத்திருக்க உதவும் ஒரு குளிர்சாதனப் பெட்டியை கண்டுபிடித்திருக்கிறது. இது, ‘சப்ஜி கோதி’ என்று அழைக்கப்படுகிறது. குறைந்த விலையில் உருவாக்கப்பட்ட சேமிப்பு மற்றும் போக்குவரத்துக்கான ஒரு தீர்வு.
கோயம்புத்தூர் – பி. என். புதூரில் இயங்கும் சவுமி ஹெர்பல்ஸ் (Soumee Herbals) நிறுவனர் திரு. ராமநாதன் அவர்கள் விற்பனை செய்து வரும் மூலிகை டீ மற்றும் மூலிகை தலைக் குளியல் பவுடர் (Head Wash Powder) குறித்து அலைபேசியில் பேசும்போது, நமது முன்னோர்கள் கண்டுபிடித்து பயன்படுத்திய பல மூலிகைகளின் அருமை, பெருமைகளை தெரிந்து கொள்ள முடிந்தது.
சிதம்பரம் ஸ்ரீ ஷண்முகவிலாஸ் ஸ்வீட் ஸ்டால் நிறுவனம் நகரின் முக்கிய பகுதியான தெற்கு ரத வீதியில் அமைந்துள்ளது. இதன் உரிமையாளர் திரு. கணேஷ் அவர்களுடன் தொலைபேசியில் பேசும்போது மிகவும் சுவாரசியமான, அறுசுவை தகவல்கள் தெரிந்து கொள்ள முடிந்தது. கொரொனா பெருந்தொற்று பெருகிய இந்த காலகட்டத்தில் கூட இந்நிறுவனம் தனது சிறப்பான சேவையை சிதம்பரம் மற்றும் சுற்று வட்டார மக்களுக்கு ஆற்றிவருவது பாராட்டத்தக்கது.
உலக அளவில் நொறுக்குத்தீனிகள் மார்க்கெட் கிட்டத்தட்ட 170 பில்லியன் டாலராக (ரூபாய் 12,75,000 கோடி) இருக்கிறது. ஆண்டுதோறும் இந்தத் துறை 7% வளர்ச்சி அடைவது குறிப்பிடத்தக்கது. கொரோனா காலத்திலும் அதிகம் பாதிக்காத துறைகளில் இதுவும் ஒன்று.
திண்டுக்கல் – கரூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தாடிக்கொம்பு என்ற இடத்தில் ஆறு ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வரும் உலகத் தரம் வாய்ந்த குளிர் சாதன கிடங்கு NSR ஃபார்ம் ஃபிரெஷ் (NSR Farm Fresh). தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் இந்த குளிர்பதன கிடங்கு நிறுவனர் திரு. N.S.ரத்தினம் சந்திரசேகரன் அவர்கள் தனது மகன்களோடு சேர்ந்து சிறப்பாக நிர்வாகம் செய்து வருகிறார். இது தென்னிந்தியாவின் மிகப் பெரிய காய்கறி மொத்த வியாபார சந்தைக்கு பெயர்போன ஒட்டன்சத்திரத்திற்கு மிக அருகில் இருப்பதால், கம்பம், தேனி, கொடைக்கானல், கரூர், திருச்சி மற்றும் பெரம்பலூர் போன்ற பகுதிகளில் உள்ள விவசாயிகள் எளிதில் சென்று அணுக முடிகிறது. சுற்றுவட்டார விவசாயிகளுக்கு பேருதவியாக இருக்கிறது.