நாம் வீடு மாறும் போது ஒரு வீட்டிலிருந்து இன்னொரு வீட்டிற்கு சாமான்களை கொண்டு செல்லும்போது முக்கியமாக கவலைப்படுவது, லாரிக்காரர் சாமான்களை ஒழுங்காக கொண்டு செல்வாரா? சாமான்கள் பத்திரமாக பேக் செய்யப்பட்டு, உடையாமல் புதிய இடத்திற்கு சென்று அடையுமா
சென்னை விருகம்பாக்கத்தில் இயங்கிவரும் “பிலிஸ் ஆப் புத்தா” (Bliss of Buddha) நிறுவனம் திரு. நிருபமா அவர்களால் ஸ்டார்ட் அப் பிசினஸாக தொடங்கி கடந்த எட்டு ஆண்டுகளாக கம கமவென மணம் வீசிக் கொண்டிருக்கிறது.
இது ஸ்ரீ பைரவி விவசாய பண்ணையின் ஒரு அங்கமாக செயல்பட்டு வருகிறது. இவர்கள் மலர்களின் வாசனை திரவியங்களை எசென்ஸ் வடிவில் உற்பத்தி செய்து வருகின்றனர். கரணம் தப்பினால் மரணம் என்பது போல ஒரு சில துளிகள் எசென்ஸ் மாறிவிட்டாலும் முழு தயாரிப்பின் தன்மையே தலை கீழாக மாறிவிடும்.
இந்த செறிவூட்டப்பட்ட எசென்ஸ் ஆயிரம் கிலோ மூலிகை மலர்கள் மூலம் 2 முதல் 5 கிலோ மட்டுமே எண்ணெய் பிரித்து எடுக்க முடியும். நலிந்து வரும் விவசாயம் தழைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மூலிகை மலர்கள் பயிரிடும் அனைத்து விவசாயிகளையும் ஸ்ரீ பைரவி விவசாய பண்ணை மூலம் ஒருங்கிணைத்து செயல்பட்டு வருவது பாராட்டத்தக்கது.
விவசாய உற்பத்தியாளர்கள் அமைப்புகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் மூலிகை மற்றும் மலர் கொள்முதல் செய்ய ஒப்பந்தம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இவர்கள் எதிர்பார்க்கும் நல்ல தரமுள்ள விளைப் பொருட்கள் கிடைக்கின்றன. மற்றும் நல்ல விலை இவர்கள் கொடுத்து வாங்குவதால் விவசாயிகளுக்கு திருப்தி அளிப்பதோடு, பாரம்பரியமாக தொடர்ந்து வரும் மூலிகைகளை பயிர் செய்து நல்ல வாழ்வாதாரத்தை உயர்த்தி வருகின்றனர்.
செயற்கை உரங்கள் பயன்படுத்தாமல் இயற்கை உரங்களை மட்டுமே சார்ந்து ஆர்கானிக் முறையில் அனைத்து திரவியங்களும் தயாரிக்கப்படுகின்றது. இதனால் அலர்ஜி போன்ற ஒவ்வாமை ஏதும் வர வாய்ப்புகள் குறைவு. இவர்கள் நீராவி வடிவில் மட்டுமே எண்ணெய்களை வடிக்கட்டுகிறார்கள். அத்தியாவசிய எண்ணெய்கள் என்றால் செறிவூட்டப்பட்ட தாவர சாறுகள் ஆகும். அவை இயற்கையான வாசனை மற்றும் சுவையை தக்க வைத்துக் கொள்கின்றன. இதை முறையாக சேமித்து வைத்தால் பல ஆண்டுகளானாலும் கெட்டுப் போவதில்லை.
வீட்டை சுத்தம் செய்ய ரசாயனங்களில் இருந்து நமது ஆரோக்கியத்தை பாதுகாக்கும் எண்ணத்தில் முழுமையாக இயற்கை விளை பொருள்களை கொண்டே திரவங்கள் தயாரிக்கப்படுகின்றன. இந்த அத்தியாவசிய எண்ணெய்கள் பாக்டீரியா, பூஞ்சை மற்றும் வைரஸ் எதிர்ப்பு ஆகிய மூன்று பண்புகளையும் உள்ளடக்கி வைத்துள்ளது. குளியலறை, சமையலறை மற்றும் வீடு முழுவதும் ஒரு சில நிமிடங்களில் சுத்தம் செய்யும் அளவுக்கு இலகுவான ஸ்ப்ரே தயாரிப்புகள் இவர்களிடம் நிறைய உள்ளன.
இவர்களின் தயாரிப்பில் சிறந்து விளங்குபவை இதோ:
ஜமரோசா ஆயில் (Jamarosa Oil) இது அற்புதமாக தோலை குணப்படுத்தும் எண்ணெய். தோலில் பிசுபிசுப்பை வெகு நேரம் நீடிக்க வைக்கும்.
பால்மரோசா எண்ணெய் (Palmarosa Oil) மயங்க வைக்கும் ஒரு வாசனை திரவியம்.
எலுமிச்சை புல் எண்ணெய் (Lemon Gross Oil) புத்துணர்ச்சியூட்டும் மற்றும் டாய்லெட்டில் பயன்படுத்த சிறந்தது.
சிட்ரோனெல்லா எண்ணெய் (Citronella Oil) இயற்கை பூச்சி மற்றும் கொசு விரட்டி.
ரோஸ்மேரி எண்ணெய் (Rosemary Oil) தலைமுடிக்கு சிறந்தது.
துளசி எண்ணெய் – சளி காய்ச்சலுக்கு உள்ளிழுக்க சிறந்த ஆன்மீக எண்ணை.
இவரது தயாரிப்புகளை அமேசானில் பதிவுசெய்து அதன் மூலம் விற்பனை செய்கின்றனர். சிறந்த தயாரிப்புகளை மட்டுமே தனது வாடிக்கையாளர்களுக்கு தர வேண்டும் என்ற எண்ணத்தில் சிறப்பாக செயல்பட்டு வரும் “பிலிஸ் ஆப் புத்தா” (புத்தாவின் ஆனந்தம்) நிறுவனர் திரு.நிருபமா அவர்களின் மொபைல் எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம் :
91766 32037
வாழ்வில் மூன்றில் ஒரு பங்கு நேரத்தை நாம் தூக்கத்தில் கழிக்கிறோம். அதாவது நாளொன்றுக்கு சராசரி எட்டு மணி நேரம் நாம் தூங்க வேண்டும். அதற்கு தேவையான நவீன கொசு வலையும், கோரை குஷனிங் பாயும் தனது சொந்த தயாரிப்பாக விற்பனை செய்து வருகிறார்கள் சென்னை விருகம்பாக்கத்தில் ஹாப்பி ப்ராடக்ட்
அன்றாட வீட்டு வேலைகளுக்காக நாம் ஒதுக்கும் நேரத்தில், அதிகமான நேரத்தை விழுங்குவது துணி துவைத்து அயர்ன் போடும் வேலைதான். இயந்திர கதியாக ஓடிக்கொண்டிருக்கும் பல குடும்பங்களில், இது அதிக நேரத்தை விழுங்கும் வேலையாக கருதப்படுகிறது. இத்தகைய சூழ்நிலையில் போன் அடித்தால் போதும் உங்கள் வீட்டுக்கே வந்து அழுக்குத் துணிகளை எடுத்து சென்று துவைத்து, அயர்ன் செய்து, மெருகூட்டி
உலக மக்கள் இன்று அதிகம் உபயோகிக்கும் செயலிகளில் முதன்மை இடத்தை தக்க வைத்துள்ளது வாட்ஸப் செயலி தான். இதற்கு முழுமுதற்காரணம் அதன் இலவச தரவிறக்கம் என்பது மட்டுமல்ல, அதன் பயன்பாடு மிக எளிமையாகவும், நேர்த்தியாகவும், நம்மை கவரும் விதமாகவும் அமையப் பெற்றது தான்.
காபி உற்பத்தியைப் பெருக்கி, காபிக்கொட்டை வணிகத்தில் கொடி கட்டிப்பறந்தனர் என்றால், அதை வறுத்து அரைத்து முதல் ரக காப்பித்தூளாக ‘மிர்ராஸ்காபி’ (mirra’s) என்னும் பிராண்ட் பெயரில் விற்பனைக்குக் கொண்டுவந்து, ‘ஸ்டார்ட்அப்’ தொழிலதிபராக
சுய தொழில் தொடங்க வேண்டும் என்பவர்களின் கனவை நனவாக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறது சென்னை கோன் பீட்சா” (CHENNAI CONE PIZZA). இந்த நிறுவனத்தின் ஒருங்கிணைப்பாளரும் பயிற்சியாளருமான நிர்மல், புதிய தொழில் முனைவோர்களை உருவாக்கும் பணியில் இறங்கி இருக்கிறார்.
அன்றாட தேவைகளுக்கு நவீன முறையில் தீர்வுகளை சுலபமாக வழங்குவதே இவர்களது நோக்கம். ஆமாம் ரொம்ப சிம்பிளாக உங்கள் சட்டை பாக்கெட்டில் சூப்பர் மார்க்கெட்டை செயல்பட வைத்திருக்கிறார்கள்.
அடுத்த வருடம் நுகர்வோர்களின் தேவைகளில் என்னென்ன மாற்றங்கள் வரும் என்பது பலருக்கு தெரியாமல் இருக்கும் சூழ்நிலையில், சிறிய மற்றும் நடுத்தர கம்பெனிகளின் உரிமையாளர்களிடம் சென்று அடுத்த பத்து வருடங்களை பற்றி தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள், அப்படி தெரிந்து வைத்துக் கொண்டால்தான் உபயோகிப்பாளர்களின் மனங்களை புரிந்து கொண்டு நீங்கள் அதற்கு தகுந்தாற்போல் உங்களுடைய தயாரிப்புகளை நுகர்வோர்களிடம் கொண்டு செல்ல முடியும் எனக் கூறினால்
சமீப காலமாக ஸ்பைருலினா என்ற நீல பச்சை நிற சுருள் பாசி மிகவும் பிரபலமடைந்து வருகிறது. காரணம் அதில் உள்ள பல வித மருத்துவப் பலன்களும், சக்தியும் தான்.