ஒரு நாள் சான்ஃப்ரான்சிஸ்கோ காஃபி ஷாப்பில் அமர்ந்திருக்கும்போது, தான் ஆரம்பிக்க இருக்கும் நிறுவனத்துக்கு `அலிபாபா’ என பெயர் வைத்தால் எப்படியிருக்கும் என யோசித்துக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு அங்கு காஃபி கொண்டுவந்த பணியாளப் பெண்ணிடம் `அலிபாபா’ என்றால் என்னவென்று தெரியுமா எனக் கேட்க அவர், `ஓப்பன் சீசேம் (திறந்திடு சீசேம்)” என பதிலளித்தார்
பாகிஸ்தானில் உள்ள சிந்து பகுதியிலிருந்து வந்த ஒரு சமூகத்தினர் தான் சிந்திகள். கூடுதல் டர்ன் ஓவருக்ககாக குறைந்த லாபத்தில் வியாபாரத்தை நடத்துவதற்காக அறியப்பட்டவர்கள்
உறங்க விடாமல் செய்யும் கனவு என ஆரம்பிக்கும் இப்புத்தகம் 21 மாநிலங்களில் 100 நகரங்களில் 350 வடா பாவ் சங்கிலி கடைகள் தொடங்கிய கதைதான். மிகவும் இயல்பான நகைச்சுவை பாணியில் எழுதப்பட்டுள்ள இப்புத்தகம் தமிழ்நாட்டிலிருந்து மும்பைக்கு குடியேறிய வெங்கடேஷ் ஐயர் தனது வணிகத்தில் எதிர்கொண்ட சவால்கள் மற்றும் சங்கடங்களை விவரிக்கிறது.
மாறுபட்ட பின்னணியை கொண்ட ஐந்து வெற்றி பெற்ற குஜராத்தி தொழிலதிபர்களைப் பற்றிய புத்தகம்தான் இது. எழுத்தாளர் ஷோபா பாண்ட்ரே முதலில் மராத்தியில் எழுதி பின்னர் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது . குஜ்ஜு என்றழைக்கப்படும் குஜராத்திய வணிகர்களின் கூர்மையான புத்திசாலித்தனத்தை கொண்டாடும் இந்த புத்தகம் அனைத்து இந்தியர்களுக்கும் ஒரு உத்வேகம் அளிக்கக் கூடியதாகும்.
இந்திய நாகரீகத்தை முன்னேற்றுவதிலும் , இந்தியாவை வர்த்தக மற்றும் பொருளாதார ரீதியாக உயர்த்துவதற்கும் மார்வாரி நிறுவனங்களால் ஆற்றப்பட்ட தெளிவான ஆற்றல் மிக்க சிறப்பான பங்கு மிகவும் குறிப்பிடத்தக்கது. பூகோள ரீதியாக வட மாநிலமான கிழக்கு ராஜஸ்தானில் “மார்வார்” என்ற பகுதியைச் சேர்ந்தவர்கள் மார்வாரிகள். 19ம் நூற்றாண்டில் கொஞ்சம் கொஞ்சமாக பஞ்சாப் ,உத்தரப் பிரதேசம், வங்காளம் ,மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், கர்நாடகா என இவர்கள் இல்லாத மாநிலமே இல்லை என்று சொல்லும் அளவிற்கு எங்கும் வியாபித்து இருக்கிறார்கள். நம்மூரில் செல்லமாக