அமேசான் நிறுவன பங்குகளில் எண்பது சதவிகிதத்துக்கும் மேலான பங்குகளை வைத்திருப்பவர்கள் வெளியில் இருப்பவர்கள். பூஜ்யத்தில் ஆரம்பித்து கடந்த 26 வருடங்களில் அந்தப் பங்குதாரர்களுக்கான சொத்தை 1 ட்ரில்லியன் டாலராக உருவாக்கியிருக்கிறோம்.
உலக முதலீட்டாளர்களின் `பிதாமக’னான வாரன் பஃபெட் அவரது நிறுவனமான `பெர்க்ஷைர் ஹாத்வே’ 1999லிருந்து 2019வரை ஏற்பாடு செய்திருந்த பதினோரு பங்குதாரர்கள் கூட்டங்களில் முதலீடு சம்பந்தமாக பேசிய பல கருத்தியல்களை டாக்டர் கிறிஸ்டியன் கோஷ் (Dr. Christian Koch) அலசி ஆராய்ந்து பார்த்து எட்டு முக்கியமான கருத்தியல்களை வாரன் அடிக்கடி சொல்லியதாக `பிசினஸ் இன்சைடர்’ இணையதளத்தில் கட்டுரையொன்றை எழுதியிருக்கிறார். அவை என்னென்ன? எந்த ஆண்டு அவை குறித்துப் பேசியிருக்கிறார் என்பதைப் பார்ப்போம்.
இந்தியாவில் தற்போது ஆறு கோடிக்கும் அதிகமான குறு, சிறு மற்றும் நடுத்தர கம்பெனிகள் இருக்கின்றன. அதாவது எம்.எஸ்.எம்.இ., (MSME) என்று அழைக்கப்படும் கம்பெனிகள். இது தவிர இந்தியாவில் லட்சக்கணக்கான கைவினைக் கலைஞர்கள், ஸ்டார்ட் அப் கம்பெனிகள் உள்ளது. இவர்கள் வெளிநாடுகளில் தங்களுடைய பொருட்களை விற்பதுதான் கடினமான காரியம், இதுதான் இந்த கம்பெனிகளின் தலையாய பிரச்சினை.
கோவையில் 40 ஆண்டு காலமாக 2400 சதுர அடியில் அமைந்துள்ள பிரமாண்டபமான நகைக் கடை “மீனா ஜூவல்லரி”. கோவையில் பிரபலமான நகைக் கடைகளில் முன்னணி வகிக்கிறது இது. இதன் நிறுவனர் திரு. சந்திரசேகரன் அவர்களை தொலைபேசியில் பேட்டி எடுத்தபோது, அறியாத பல அதிசய தகவல்களை அறிய முடிந்தது.
நிச்சயமாக இந்த மூன்றெழுத்தை பல இடங்களில் பார்த்திருப்பீர்கள். இது தரத்துக்கான (Quality) தாரக மந்திரம்.
நீங்க ஒரு ஸ்டார்ட்அப் கம்பெனி ஆரம்பிக்க போறீங்களா?… அப்படின்னா பல ஸ்டார்ட் அப் சம்பந்தப்பட்ட வார்த்தைகள் உங்களுக்கு புதுமையாக தோன்றும். அதை தெரிந்து கொள்வது, புரிந்துகொள்வது மிகவும் முக்கியம். அவற்றை உங்களுக்கு தொகுத்து வழங்குகிறார் திருநெல்வேலியைச் சேர்ந்த பிரபாகரன். இவர் ஒரு மிகச்சிறந்த மொழி வல்லுநர், கைதேர்ந்த ஓவியர். இந்தத் தொடர் ஸ்டார்ட் அப் ஆரம்பிக்கப் போகும் ஒவ்வொருவருக்கும் இந்த தொடர் ஒரு பொக்கிஷமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. வாருங்கள் இந்த தொடர் கட்டுரைக்குள் செல்வோம்.
நீங்க ஒரு ஸ்டார்ட்அப் கம்பெனி ஆரம்பிக்க போறீங்களா?… அப்படின்னா பல ஸ்டார்ட் அப் சம்பந்தப்பட்ட வார்த்தைகள் உங்களுக்கு புதுமையாக தோன்றும். அதை தெரிந்து கொள்வது, புரிந்துகொள்வது மிகவும் முக்கியம். அவற்றை உங்களுக்கு தொகுத்து வழங்குகிறார் திருநெல்வேலியைச் சேர்ந்த பிரபாகரன். இவர் ஒரு மிகச்சிறந்த மொழி வல்லுநர், கைதேர்ந்த ஓவியர். இந்தத் தொடர் ஸ்டார்ட் அப் ஆரம்பிக்கப் போகும் ஒவ்வொருவருக்கும் பொக்கிஷமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. வாருங்கள் இந்த தொடர் கட்டுரைக்குள் செல்வோம்.
கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்ற நிறுவனம், ஆண்டுதோறும் 70 லட்சம் சைக்கிள்கள் தயாரிக்கும் ஹீரோ சைக்கிள் ஓம் பிரகாஷ் முஞ்சல் குறித்து பிரியா குமார் சுவைபட தந்திருக்கிறார்.
மார்ச் 2020 கொரோனா தொற்றால் உலகமே போராடிக் கொண்டிருந்த காலகட்டத்தில் `பைஜுஸ்’ செயலியை தரவிறக்கம் செய்தவர்களின் எண்ணிக்கை சுமார் 60 லட்சம். பள்ளி மாணவர்களுக்குக் உதவும் வகையில் செயலியை இலவசமாகத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம் என பைஜு’ஸ் அறிவித்ததால் மாணவர்களின் எண்ணிக்கை முன்பு இருந்ததை விட சுமார் 150 சதவிகிதம் அதிகரித்தது என அதன் தலைமைச் செயல் அதிகாரியான ம்ரினாள் மோஹித் (Mrinal Mohit) தெரிவித்திருக்கிறார்.
நிகில் இனாம்தார் எழுதிய ரோக்டா – புத்தகம் ‘பனியாக்கள்’ எப்படி வியாபாரம் செய்கிறார்கள் என்ற தலைப்பில் ஐந்து மார்வாரி தொழில்முனைவோரின் கதைகளை கொண்டது. ரோக்டா – பணம் என்று பொருள்.பனியா இந்தியாவின் ஒரு வர்த்தக வர்க்க பிரிவினர்.