உலக சுகாதார மையம் (WHO), ஆயுஷ் (AYUSH), மற்றும் ஐஎஸ்ஓ (ISO) போன்ற அங்கீகாரங்களைப் பெற்ற, திருச்சியில் உள்ள ஆரண்யா ஹெல்த்கேர் நிறுவனர் திருமதி. வீரஜோதி அவர்களை அலைபேசியில் பேட்டி எடுக்கும் ஒரு வாய்ப்பு கிடைத்தது. இயக்குனராக இருந்து நிறுவனத்தை திறம்பட இயக்கும் இவரது கணவர் திரு. மாரிமுத்து அவர்களும் பேட்டியில் இணைந்து கொண்டார்.
‘மூலிகைக் கடல்’ என சொல்லும் அளவிற்கு மூலிகை மருந்துகள், அழகு சாதனங்கள், பழரச வகைகள், ரெடிமிக்ஸ் பாக்கெட் உணவு என அனைத்து மூலிகை தயாரிப்புகளும் ஒரே இடத்தில் ஆச்சரியப்படும் அளவுக்கு உள்ளன.
2013 இல் தொடங்கப்பட்டது இந்நிறுவனம். தனது அனைத்து உணவுப் பொருட்களையும், மூலிகைகளையும் ஆர்கானிக் முறையில் தயாரிக்கிறது. இவர்கள் இயற்கை மூலிகைகளின் தரத்தில் எவ்வித சமரசத்திற்கும் இடம் அளிக்காததால் மூலிகைகள் அனைத்தும் மிகவும் கடுமையான தர சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு பின்னர் வாடிக்கையாளர்களை வந்தடைகிறது. உலகில் அனைவரும் ஆரோக்கியமான வாழ்க்கையின் ஆனந்தத்தை அனுபவிக்க வேண்டும் என்பதே எங்களின் நோக்கம் எனவே எங்கள் தயாரிப்புகளை உலகம் முழுவதும் விரிவுபடுத்தி வருகிறோம் என்றார்.
கொரோனாவுக்கு எதிராக மக்கள் தூய்மை நடைமுறையை பின்பற்றி அடிக்கடி கை கழுவும் பழக்கம் வழக்கமாகி வருகிறது. அதற்கு பயன்படுத்த இவர்கள் நிறுவனம் நீம் சோப் தயாரித்துள்ளார்கள்.
ஆயுர்வேதத்தில் வேம்பு ஒரு அதிசய மரமாக கருதப்படுகிறது. வேப்ப மரத்தின் வேர், பழம், இலை, பட்டை என ஒவ்வொரு பகுதியும் மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.பல்வேறு நோய்களிலிருந்து பாதுகாக்கவும் உதவுகிறது, எனவேதான் வேம்பு ‘சர்வ ரோஹ நிவாரணி’ என்பார்கள்.
எவ்வித இயந்திர உதவியும் இல்லாமல் முழுக்க முழுக்க கையால் தயாரிக்கப்படும் ஹேண்ட் மேட் சோப் இது. வேப்ப இலை பறித்து அதனை கையால் அரைத்து சோப் கையால் தயாரிக்கப்படுகிறது. சோப்பை பார்க்கும் போது அதில் உள்ள வேப்ப இலை துகள்கள் நன்றாக தெரியும். மற்றவர்களின் நீம் சோப்பு மூன்று மாதங்களில் பூஞ்சனம் பூத்துவிடும், ஆனால் இவர்களின் தயாரிப்பு மூன்று ஆண்டுகள்வரை வீணாகாது. இதுபோலவே அனைத்து தயாரிப்புகளிலும் இவர்கள் மற்றவர்களை விட தனித்துவம் பெற்று விளங்குகிறார்கள்.
பப்பாளி சோப்பில் பப்பாளிப் பழத்திற்கு உரிய அனைத்து சிறப்பம்சங்களும் இருக்கும். பேபி சோப் தயாரிப்பில் குழந்தைகளின் நலனில் அக்கறை கொண்டு தேங்காய் எண்ணெய், தேங்காய் பால் போன்ற கலவையில் குழந்தைகளுக்கு மிருதுவான பேபி சோப் தயாரிக்கிறார்கள். இவர்களின் பேபி சோப் பெருமையை கேட்டதும் மீண்டும் குழந்தையாக மாற ஆசை வந்தது.
ஹெர்பல் மிக்ஸ் சோப் சோரியாசிஸ் என்கிற தோல் நோய்க்கு நிரந்தர தீர்வு மருந்தாகும் என்றார் மாரிமுத்து. மனிதன் தலை முதல் கால் வரை ரசாயனம் கலக்காத முழுமையான இயற்கை பொருட்களை மட்டும் பயன்படுத்தி வாழக்கூடிய அளவுக்கு அனைத்து மூலிகை தயாரிப்புகளையும் தயாரிக்க வேண்டும் என்பது இந்த தம்பதியினரின் குறிக்கோள்.
வரகு பொங்கல் மிக்ஸ், வல்லாரை, முடக்கத்தான் தோசை மிக்ஸ் போன்ற பல ரெடிமிக்ஸ் தயாரிக்கிறார்கள். வாகை மர நாட்டு செக்கில் ஆட்டப்பட்ட எண்ணெய் வகைகள். பல மூலிகை பொடிகள். ரெடி டு யூஸ் மிக்ஸ் உணவு வகைகள் பல உள்ளன. இவை அவசரகதியில் அலுவலகங்கள் போவோருக்கு மிகவும் உதவியாக இருக்கும்.
நம்மில் பலர் அறியாத பலவித அரிசிகள், ஹெல்த் மிக்ஸ், மருத்துவ குணம் கொண்ட ஜூஸ்கள். இட்லிக்கு தொட்டுக்கொள்ள, இத்தனை வகை பொடிகளா என மலைக்கவைக்கும் இட்லி பொடி வகைகள். ஏறத்தாழ 400 க்கும் மேலான பொருட்கள் விற்பனை செய்கின்றனர்.
ஆரண்யா ஹெல்த்கேர் நிறுவனத்தார் படித்த வேலையில்லா இளைஞர்களுக்காக ஒரு திட்டம் செயல்படுத்தி உள்ளனர். ஒரு கிராமத்தில் ஒரு விநியோகஸ்தர் என நியமித்து அதன் சுற்று வட்டாரத்தில் உள்ளவர்கள் இவர்களிடம் பொருட்களை வாங்க வழி வகுத்துள்ளார்கள். இத்தகைய விநியோகஸ்தர்களுக்கு வியாபாரம் பாதிக்கக் கூடாது என்பதற்காகவே, அமேசான் போன்ற ஆன்லைன் வர்த்தகம் மூலம் இவர்கள் வியாபாரம் செய்வதில்லை என்பது பாராட்டுக்குரியது.
இந்த தொழிலில் ஒரு பிரச்சனை, எந்த ஒரு பொருளும் ஆறு மாதத்திற்குள் காலாவதியாகி பூச்சி வந்துவிடும். காரணம் எவ்வித கெமிக்கலும் கலக்காமல், பூச்சி மருந்துகள் பயன்படுத்தாமல் ஆர்கானிக் முறையில் தயார் செய்வதால் பூச்சிகள் வரத்தான் செய்யும் என்றார். எனவே 6 மாதத்தில் விற்றுத் தீர்க்க கூடிய அளவுக்குதான் தயாரிப்பார்களாம்.
வாழ்வாதாரங்களை தேடி சிரமப்படும் பெண்களுக்கு வேலைவாய்ப்பு தருவதோடு, அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் அனைத்து பாதுகாப்பு நெறிமுறைகளையும் முழுமையாக பின்பற்றி வருகிறார்கள்.
“அடேங்கப்பா!” என ஆச்சரியத்துடன் விடைபெற்றேன்.
தொடர்பு கொள்ள : 82203 07404 / 0431 4972871