இந்த கொரோனா காலத்தில் பெரும்பாலான சிறிய கடைகள் திறந்து வைத்து மக்களுக்கு சேவைகள் செய்தன என்பதை யாரும் மறுக்க முடியாத உண்மை. அவர்கள் கடைகளை திறந்து வைக்காவிடில் பலருக்கு பொருட்கள் கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டிருக்கும். ஆன்லைன் ஷாப்பிங் வந்த பிறகு பலரும் மறந்திருந்த மளிகை / கிரானா கடைகள் மீண்டும் மக்களின் கண்களுக்கு தெரிய ஆர்ம்பித்ததோடு அவர்களின் மனதிலும் நீங்கா இடம் பெற்றுவிட்டது.
மளிகை / எலக்ட்ரானிக் / துணிக்கடைகள் / ரெடிமேட் என்று சிறிய அளவில் வியாபாரம் செய்து வருபவர்களுக்கு உதவும் விதமாக பி2பி ப்ளாட்பார்ம்கள் நிறைய வந்து விட்டன.
பி2பி என்றால் பிசினஸ் 2 பிசினஸ் என்று பொருள். அதாவது நீங்கள் உங்கள் கடைக்கான பொருட்களை ஹோல்சேல் கடையில் போய் வாங்குவது போலத்தான். சிலசமயம் பொருட்களை வாங்க ஆந்திரா, பெங்களூர், மும்பை, டெல்லி, சூரத், அஹமதாபாத் என்று போய் கொண்டிருப்பீர்கள். அதெல்லாம் தற்போது தேவையில்லை. உங்களுக்கு எந்த ஊர் பொருட்கள் தேவையோ அந்த ஊர் பொருட்கள் இது போன்ற இணையதளங்களில் கிடைக்கின்றன. அதில் மொத்தமாக, மொத்த விலைக்கு கிடைக்கும். அவை உங்களுக்கு கூரியர் மூலமாக அனுப்பப்படுகின்றன.
நீங்கள் மொத்த வியாபாரியாக இருக்கும் பட்சத்தில் உங்கள் கம்பெனியையும் இதில் விற்பனையாளராக பதிவு செய்து கொள்ளலாம்.
இது போன்று செயல்படும் கம்பெனிகளின் இணையதளங்களை கீழே கொடுத்துள்ளோம். சென்று பாருங்கள், உங்கள் வியாபாரம் பெருக வாய்ப்புகள் உண்டு.
www.udaan.com
www.jumbotail.com
www.metro.co.in
www.maxwholesale.in