சேலத்தில் கடந்த பத்து ஆண்டுகளாக இயங்கி வரும் லே பிரடோ (Le Freddo) இன்டீரியர் நிறுவனர் திரு.ராஜ்குமார் அவர்களுடன் மொபைல் மூலம் தொடர்பு கொண்டதில் இன்டீரியர் டெக்கரேஷன் குறித்து பல சுவையான செய்திகள் தெரிந்துகொள்ள முடிந்தது.
ஹோட்டல் அண்ட் ரெசிடென்சியல் இன்டீரியர் டெக்கரேஷன் செய்வதில் தமிழ்நாட்டில் முதன்மையான நிறுவனங்களில் எங்கள் நிறுவனமும் ஒன்று என சொல்லி பேச்சை தொடங்கினார்.
சென்னை, கோயம்புத்தூர் போன்ற பெருநகரங்களில் ஹோட்டல், வீடு இன்டீரியர் செய்து அழகு படுத்துவதோடு அழகிய பல விதமான வித்தியாசமான மாடுலர் கிச்சன் செய்து தருகிறோம். ‘பெரிதினும் பெரிது கேள்’ என பெரிய பெரிய வேலைகள் செய்கிறோம் என்றாலும் வாடிக்கையாளர்களின் விருப்பத்தை ஏற்று சிறிய அளவிலும் அழகுபடுத்தி தருகிறோம் என்றார்.
மற்றவர்கள் மத்தியில் உங்கள் லைப் ஸ்டைலை உயர்த்தி காட்டுபவர்கள் இவர்கள். அந்த அளவுக்கு ஸ்மார்ட் இன்டீரியர் செய்து உங்கள் அழகான இல்லங்களை மேலும் மெருகூட்டுபவர்கள். குறிப்பாக இவர்கள் வீட்டு மாடுலர் கிச்சன், ஹோட்டல், அலுவலகங்கள் போன்றவற்றுக்கு இன்டீரியர் செய்து கொடுக்கிறார்கள்.
தொடக்கத்தில் இவரது தொழிலுக்கு தேவையான தளவாடப் பொருட்கள் சைனாவிலிருந்து இறக்குமதி செய்து சுமார் 400 மாடுலர் கிச்சன் அமைத்துக் கொடுத்திருக்கிறார். பின்னர் இறக்குமதி செய்வதை நிறுத்திவிட்டு உள்நாட்டில் உள்ள பொருட்களை வைத்தே தொழிலை விரிவுபடுத்திக் கொண்டார்.
நமது குடும்ப பெண்கள் தங்கள் வாழ்நாளின் பெரும் பகுதியை கிச்சனில் கழிக்க வேண்டிய நிலை. எனவே அவர்களின் கனவு கிச்சன் நனவாக்கி அழகுற அமைத்து கொடுத்து நமது பெண்களை நாம் கௌரவபடுத்த வேண்டும் என்றார்.
ஆட்டோமேஷன் செய்து தருவதிலும் முதன்மை பெற்று வருகிறார்கள். அதைப் பற்றி அவர் விளக்கும் போது நம்மை அறியாமலேயே ஆச்சரியத்தில் வாய் பிளக்கிறோம். உங்களது மொபைல் போனில் உள்ள ஒரு பட்டனை அழுத்தி உங்களின் வீட்டில் எல்லா விளக்குகளையும் மின் சாதனங்களையும் ஆன் ஆஃப் செய்யலாம். நீங்கள் வீட்டில் நுழைவதற்கு முன்பே ஏசியை ஆன் செய்து, வீடு நுழைந்ததும் ஒரு வரவேற்கத்தக்க சூழ்நிலையை உணரலாம். வாட்டர் ஹீட்டர் கிளிக் செய்துவிட்டால் போதும் 6 மணிக்கு வெந்நீர் ரெடியானதும் தானாக ஆஃப் செய்து கொள்ளும்.
மோஷன் சென்சார் எனும் கருவி மாடிப்படி நீங்கள் கால் வைப்பதற்கு முன்பாகவே லைட் ஆன் செய்து கொண்டு படி ஏறி முடிந்ததும் தானே ஆப் செய்து கொள்ளும். மெயின் கேட்டை திறக்க ஆரம்பித்தவுடன் வீட்டில் தேவையான வெளிச்சத்திற்கு தானே லைட் போட்டுக்கொள்ளும். இருட்டில் தடுமாற வேண்டிய அவசியமில்லை “அனைத்து ஆணைகளும் அலைபேசியில்” என்பதுதான் ஆட்டோமேஷன் .
வாழ்க்கை ஒருமுறைதான் அதை ஆடம்பரமாக வாழ்ந்து விட வேண்டும் என எண்ணுபவர்களுக்கு தேவை இவர்களின் சேவை.
‘ஆல் இன் ஆல் அழகு சோஃபா’ போல ஒரு ஸ்மார்ட் சோபா செட் விரைவில் இவர்கள் மூலம் மார்க்கெட்டுக்கு வர இருக்கிறது. இவரது வீட்டில் தற்போது சோதனை ஓட்டத்தில் உள்ளது. இதில் உள்ள ஒரு பத்து இன்ச் ஸ்க்ரீனில் ஆயிரம் சதுரடி வீட்டுக்கான அனைத்து கண்ட்ரோலும் இருக்கும். இதை அமேசான் மூலமும் இவர்கள் வெப்சைட் மூலமும் விற்பனை செய்ய எண்ணம் கொண்டுள்ளனர்.
பணியாளர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு சில டார்கெட் கொடுக்கப்பட்டிருக்கும். அந்த டார்கெட்டை முடித்து தருவதற்கு ஏற்றார்போல் அவர்களுக்கு மாதந்தோறும் பாராட்டு போனஸ் வழங்கப்படுகிறது. மற்றும் மெடிகிளைம் போன்ற இன்சூரன்ஸ் செய்து தரப்படுகிறது. நல்ல தொழிலாளிகளை உருவாக்குவது நல்ல முதலாளிகள்தான்.
குவாலிட்டி கண்ட்ரோல் இறுதியாக தரத்தை சோதிக்கும் போது ஏதும் குறை கண்டு பிடித்தால் அவருக்கு ஒரு குறிப்பிட்ட தொகை போனஸ் கிடைக்கும். அந்த போனஸ் தொகை தயாரிப்பில் ஈடுபட்டிருந்த ஆசாரியின் போனசில் கழியும். இத்தகைய பார்முலாக்களால் வேலை தரமாகவும் வலுவாகவும் இருப்பதாக எண்ணுகிறார் ராஜ்குமார்.
உங்கள் கடையில் போதுமான இடவசதி இருந்தால் அதில் ஒரு மாடுலர் கிச்சன் செய்து வைத்து விடுவார். அவ்வப்போது மாடல்கள் மாற்றவும் செய்வார். உங்கள் கடை மூலம் வரும் ஆர்டர்களில் கிடைக்கும் லாபத்தில் உங்களுக்கு லாப பங்கு தர தயாராக இருக்கிறார். ‘எனக்கும் லாபம் உனக்கும் லாபம்’ (win&win) என்ற கான்செப்ட். விருப்பமுள்ளோர் தொடர்பு கொள்ளலாம்.
இந்தியாவில் பிரபலமான L&T, Ashok Leyland, SRM, Honda, NLC India போன்ற நிறுவனங்களின் அலுவலகங்களை அழகூட்டிய பெருமை லே பிரடோ-வை சாரும்.
LeFreddo பெயரில் Freddo என்றால் கூல் இன்டீரியர் என அர்த்தம். உண்மைதான் எங்களின் பேட்டியும் அவ்வாறுதான் கூலாக இருந்தது. மிக்க நன்றி ராஜ்குமார்.
மிகவும் அழகான வெப்சைட் வைத்திருக்கிறார்கள். www.lefreddo.com
மொபைல் : 99526 63478