குப்பைகளும் எரிபொருளாகும் – மஹிந்திரா மஹிந்திராவின் முன்னோடி திட்டம்
இந்தியாவில் தூக்கி எறியப்படும் குப்பைகள்தான் அதிகம், அந்த குப்பைகளை எரிபொருளாக மாற்றுவது எப்படி என்று பெரிய நகரங்களில் அரசுடன் இணைந்து மஹேந்திரா வேஸ்ட் டு எனர்ஜி (Mahindra Waste to Energy) திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
மஹிந்திரா மஹிந்திரா கம்பெனிக்கு Waste to Engery கம்பெனி ஒரு ஸ்டார்ட் அப் கம்பெனி ஆகும். ஆமாம், இந்த கம்பெனியில் மஹிந்திரா தவிர மஹிந்திராவின் ஊழியர்கள் பலரும் கிரவுட் ஃபண்டிங் முதலீடு செய்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் பெரிய நகரங்களில் முனிசிபல் கார்ப்பரேஷன் உடன் இணைந்து ஆர்கானிக் குப்பைகளை எரிபொருள் ஆக்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. தற்போது அவுரங்காபாத், திருப்பதி, சென்னை, இந்தூர் ஆகிய நகரங்களில் 10 டன் முதல் 40 டன் வரை உள்ள ப்ளாண்ட்- களை அமைத்துள்ளது. இது தவிர பல ஊர்களில் சிறிய ப்ளாண்ட்களையும் செயல்படுத்தியுள்ளது.
இந்தூர் நகரத்தில் இவர்கள் அமைத்துள்ள பயோ காஸ் பிளாண்ட் 90 சதவீதத்திற்கும் மேலான சுத்தமான சி.என்.ஜி. எரிபொருளை கொடுப்பதால் அது வீட்டு உபயோகம் தவிர, அங்கிருக்கும் ஸ்மார்ட் சிட்டி பஸ்களிலும் பயன்படுத்தப்படுகிறது.
இந்தியாவில் இந்தூரை நம்பர் ஒன் கிளீன் சிட்டி என்ற பெயர் வாங்க வைத்ததுடன், யுனைடெட் நேஷன் 72 நாடுகளில் இதுபோன்ற திட்டத்தை அமல்படுத்துங்கள் என்றும் அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
எதிலிருந்து எல்லாம் பயோ கேஸ் தயாரிக்கிறார்கள் என்று பார்த்தால் ஆச்சர்யமாக இருக்கிறது. அதாவது உணவு கழிவுகள், மாமிசக் கழிவுகள், காய்கறி கழிவுகள் ஆகியவைகளிலிருந்து எல்லாம் பயோ சி.என்.ஜி. தயாரிக்கிறார்கள்.
இது போல, அவுரங்காபாத்தில் 3000 தொழிற்சாலைகள் இருக்கின்றன. அங்கு வேலை செய்பவர்கள் சுமார் 100,000 பேர். தொழிற்சாலைகளும், அங்கு வேலை செய்பவர்களும் தூக்கி எறியும் கழிவுகளில் இருந்து 30 டன் பிளாண்ட் அமைத்துள்ளார்கள்.
பஞ்சாப் மாநிலத்தில் இருக்கும் பெரிய பிரச்சனை அங்கு உற்பத்தி செய்த நெல், கோதுமை ஆகியவைகளின் வைக்கோலை அதே நிலத்தில் வைத்து எரித்து விடுவது தான். இப்படி எரிப்பது நச்சுப்புகையாக மாறி டெல்லி மாநகரம் வரை சென்று பெரும் சுற்றுப்புற சுகாதார கேடுகளை உண்டாக்கி வருகிறது. இந்த கழிவுகளில் 10,000 டன்னை எரிபொருளாக மாற்றுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார்கள்.இந்த ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் சி.ஈ.ஓ.வாக தமிழரான பழநியப்பன் இருப்பது நமக்கெல்லாம் பெருமைதான். இவரை தொடர்பு கொள்ள மொபைல் 99679 78133. ஈமெயில் plpalani@gmail.com