பலருக்கு சுய தொழில் தொடங்கும் ஆசை இருந்தாலும், என்ன தொழில் செய்வது என்ற தயக்கத்தில், அந்த ஆசைக் கனவு நனவாகாமலேயே போய் விடுகிறது.
சுய தொழில் துவங்குவதற்கு பணம் முக்கியம். ஆனால் அதே நேரத்தில் என்ன தொழிலை தேர்வு செய்கிறோம் என்பதும் முக்கியம்.
குறைந்த முதலீட்டில் தேர்ந்தெடுக்க பல தொழில்கள் உள்ளன. இதில் முக்கியமானது உணவுத் தொழில். இது குறைந்த முதலீட்டில் மேற்கொள்ளக் கூடிய ஓர் அருமையான தொழில். பலர் சிறிய முதலீட்டில் சிற்றுண்டி கடை வைத்து நல்ல வருமானம் பார்க்கிறார்கள் . இதில் நஷ்டம் ஏற்பட வாய்ப்புகள் குறைவு .
சுய தொழில் தொடங்க வேண்டும் என்பவர்களின் கனவை நனவாக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறது சென்னை கோன் பீட்சா” (CHENNAI CONE PIZZA). இந்த நிறுவனத்தின் ஒருங்கிணைப்பாளரும் பயிற்சியாளருமான நிர்மல், புதிய தொழில் முனைவோர்களை உருவாக்கும் பணியில் இறங்கி இருக்கிறார். உணவுத் தொழில் பற்றி எதுவும் தெரியாதவர்களுக்கும் “கோன் பீட்சா” மற்றும் பல வகையான உணவுகளை தயாரிக்கவும் பயிற்சி அளித்து அதன் நுட்பங்களையும் கற்றுக் கொடுக்கிறார். குறைந்த தொகையை பெற்றுக் கொண்டு, பிரான்சைஸ் வழங்குகிறார்கள்.
இது பற்றி நிர்மல் கூறியதாவது:
இத்தாலியில் தவிர்க்க முடியாத உணவான பீட்ஸா, இப்போது உலகம் முழுவதும் அனைவராலும் விரும்பப்படுகிறது., அமெரிக்கர்கள் பீட்ஸாவை தங்களது முக்கிய சிறந்த உணவாகக் கொண்டாடி வருகின்றனர். நம் நாட்டிலும் பீட்ஸாவை விரும்புவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
எங்களது முக்கிய நோக்கமே, புதிய தொழில் முனைவோர்களை உருவாக்குவதுதான். உணவு விற்பனை கடைகளை தொடங்க நினைப்பவர்களுக்கு எங்கள் பிராண்ட் மூலம், பிரான்சைஸ் (FRANCHISE) வழங்குகிறோம்.
அவர்கள் உணவு விடுதியை கட்டமைக்க தேவையான அனைத்து உதவிகளையும் செய்கிறோம். PIZZA CONE , EGG STICK OMLET , SANDWICH, WHARF FOOD, GRILL BBQ ( VEG & NON VEG ) போன்ற உணவு வகைகள் செய்வதற்கு அவர்களுக்கு பயிற்சி அளிக்கிறோம்.
உணவு தயாரிப்பது குறித்த பயிற்சி கொடுப்பதோடு, உணவு விற்பனை கடையை வைக்க தேவையான அனைத்து உதவிகளையும் செய்கிறோம். கடைக்கு தேவையான தளவாடப் பொருட்கள் வாங்குவதில் தொடங்கி கடையை அலங்கரிப்பது வரை நாங்களே வழிகாட்டுகிறோம்.
அவர்களுக்கு விருப்பம் இருந்தால் எங்கள் உணவுவிடுதியில் அவர்கள் விரும்பும் வரை உணவு தயாரிப்பது பற்றி நேரடி பயிற்சியும் பெறலாம். எப்போது வேண்டுமானாலும் சந்தேகங்களை எங்களிடம் கேட்டுத் தெளிவு பெறலாம்.
தொடங்கும் தொழிலை அடுத்தடுத்த கட்ட வளர்ச்சிக்கு எடுத்துச்செல்லும் வழிமுறைகளை வழங்குவது உட்பட சுயதொழில் தொடர்பான அனைத்து வழிகாட்டுதல்களையும் வழங்கி, அவர்களை வெற்றிகரமான தொழில் முனைவோராக்கும் பணிகளைச் செய்துவருகிறோம்..
நிர்மல் குமார் அவர்களின் தொடர்புக்கு : 97104 42216