இந்தியாவில் இருக்கும் நடுத்தர, சிறிய மற்றும் குறு தொழில் நிறுவனங்களுக்கு உள்ள முக்கிய பிரச்சினையே நிதி ஆதாரம் தான். பல சமயங்களில் வங்கிகள் கடன் கொடுக்க முன் வந்தாலும் நடைமுறை தாமதங்களால் அவை சரியான சமயத்தில் கிடைக்காமல் போய் விடுகிறது. வங்கிகளுடைய தாமதத்தால் கிடைத்த ஆர்டரை சரியான சமயத்தில் செயல்படுத்தி கொடுக்க முடியாத நிலை பல கம்பெனிகளுக்கு இருக்கிறது. சில சமயங்களில் ஆர்டர்களை எப்படியாவது செய்து முடிக்க வேண்டும் என்ற கட்டாயத்தால், தனிப்பட்ட நபர்கள் கொடுக்கும் கடன் வசதிகளை எதிர்நோக்க வேண்டியிருக்கிறது. இதனால் அவர்களிடம் அதிக வட்டிக்கு கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. இதனால் இவ்வகை கம்பெனிகளின் லாப மார்ஜின்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகிறது. அதிக வட்டியால் சில சமயம் நஷ்டங்களும் அந்த ஆர்டர்களில் அடைய நேரிடுகிறது.
2016ம் வருடத்திற்கு பிறகு பார்த்தால் மோடியின் ஸ்டார்ட் அப் இந்தியாவின் திட்டத்தின் கீழ் பல என்.பி.எப்.சி. கம்பெனிகள் நடுத்தர, சிறிய மற்றும் குறு நிறுவனங்களுக்கு கடன் கொடுப்பதை முன் வைத்து ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இது போல நூற்றுக்கணக்கான கம்பெனிகள் கடந்த 3 வருடங்களில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
உங்களுக்கு வங்கிகளில் கடன்கள் கிடைக்காத பட்சத்தில், தனிப்பட்ட நபர்களிடம் சென்று 24 முதல் 36 சதவீதம் வரை வட்டி கொடுத்து கடன்கள் வாங்குவதை விட, இது போன்ற என்.பி.எப்.சி., கம்பெனிகளிடம் கடன்கள் வாங்குவது சிறந்தது. இவர்களிடம் வட்டி 12 முதல் 20 சதவீதம் வரை இருக்கலாம்.
இவர்களுக்கு எப்படி நிதி ஆதாரம் கிடைக்கிறது?
பொதுவாக நமக்கு ஒரு சந்தேகம் வரலாம், இவர்களுக்கு நிதி ஆதாரம் எப்படி கிடைக்கிறது என்று?. அது இவர்கள் போடும் மூலதனம், என்.சி.டி.க்கள் மூலமாக கிடைக்கும் பணம், இந்தியாவில், வெளிநாடுகளில் இருக்கும் பி.ஈ. பண்டுகள் (பிரைவேட் ஈகுவியூட்டி பண்டுகள்) இவர்களிடம் செய்யும் முதலீடுகள். இது தவிர வங்கிகளிடமிருந்து கடன்களும் வாங்குகின்றனர்.
இவ்வகை நிதி நிறுவனங்கள் வந்த பிறகு எம்.எஸ்.எம்.ஈ. கம்பெனிகளுக்கு நிதி வசதிகள் கிடைப்பதில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
யார், யார் எம்.எஸ்.எம்.ஈ. கம்பெனிகளுக்கு கடன் வசதிகள் தருகிறார்கள்?
எம்.எஸ்.எம்.ஈ. கம்பெனிகளுக்கு கடன்கள் கிடைக்க வழிவகை செய்கிறது.
ரூபாய் 2 கோடி வரை கடன்கள் கிடைக்க வழி வகை செய்கிறது.
இந்தியாவில் 1300 இடங்களில் இருக்கிறது. இதுவரை 40000 லோன்கள் கொடுத்துள்ளது. இதில் 30000க்கும் அதிகமானவை சிறிய பிசினஸ் செய்பவர்கள்.
ஸ்கூல் பைனான்ஸ், டாக்டர்களுக்கு பைனான்ஸ், சப்ளை செயின் பைனான்ஸ், ஆன்லைன் செல்லர் பைனான்ஸ், மர்ச்சென்ட் கேஷ் அட்வான்ஸ் போன்ற வகை கடன்களுக்கு உதவி செய்கிறது.
30 நகரங்களில் இருக்கிறது. வருடத்திற்கு 400 கோடி வரை லோன்கள் கொடுக்க ஏற்பாடு செய்கிறது. ஒரு நாளைக்கு 400 லோன்கள் வரை கொடுக்கிறது. மார்க்கெட் ப்ளேஸ் கம்பெனி வகையை சேர்ந்தது.
கம்பெனிகளின் டீலர்களையும், கம்பெனிகளையும், கடன் கொடுக்கும் நிறுவனங்களையும் இணைக்கிறது. இதுவரை 24000 டீலர்களுக்கு மேலாக இவர்கள் மூலமாக கடன்கள் கொடுக்க வழிவகை செய்துள்ளது.
பர்சனல் லோன், பிசினஸ் லோன் வாங்க உதவும் கம்பெனி.
நமஸ்தே கிரிடிட் என்ற கம்பெனி லோன் கொடுப்பவர்களையும், லோன் வாங்குபவர்களையும் இணைக்கும் கம்பெனி. லோன் வாங்கிக் கொடுக்கும் ஏஜெண்டுகளும், சி.ஏ., போன்றவர்களும் இதில் இணைந்து கொள்ளலாம்.
இந்த கம்பெனியை மார்க்கெட் பிளேஸ் என கூறலாம். உங்களுக்கு சரியான வங்கி அல்லது என்.பி.எப்.சி. யில் 60 லட்சம் வரை கடன் வாங்க உதவுகிறது.
10,000 கோடி ரூபாய்க்கு மேல் கடன்கள் கொடுத்துள்ளது. 800,000 கடன்களுக்கு மேல் கொடுத்துள்ளது. இருபது நாடுகளுக்கு மேல் கிளைகள் வைத்துள்ளது. ஏற்றுமதி இறக்குமதி கடன்கள் கொடுக்க வழி வகை செய்கிறது. சப்ளை செயின் பைனான்ஸ் கிடைக்க உதவுகிறது.