பேட்டி, கட்டுரையாளர் : அ. ஹுமாயூன், சிதம்பரம்.
மதுரையில் பைபாஸ் ரோட்டில் உள்ள வனமலைநகரில், துரைசாமி நகரில் சென்றால் ஒரு வித்தியாசமான உணவகத்தை காண முடியும்.
மதுரையில் முதன் முதலாக இப்படி ஒரு கேமிங் கான்செப்ட் காபி ஷாப் தான் காபுள் டாபுள் (Gobble Dobble). வெள்ளையப்பம், கார சட்னிக்கு பேர் போன கோபு ஐயங்கார் குடும்பத்தினர் ஆரம்பித்திருக்கும் கடை இது . இங்கு வீடியோ கேம்ஸ் மட்டும் இல்லாமல் வித விதமான போர்டு விளையாட்டுகள், பூஸ்பால், கேரம், செஸ் மற்றும் டான்ஸ் ப்ளோர் என இப்படி எல்லா தரப்பினரின் தேவைகளையும் பூர்த்தி செய்கிறார்கள். விளையாட விருப்பம் இல்லாதவர் சாப்பிட்டு மட்டும் போகலாம். வீடியோ கேம்ஸ் தவிர எல்லா விளையாட்டுகளும் இலவசம் என்பது தான் முக்கியமான அம்சம்.
இப்போதெல்லாம் இளைஞர்கள் வெறும் சாப்பாடு மட்டும் கிடைக்கும் உணவகங்களை அவ்வளவு விரும்புவதில்லை. சுவையான உணவையும் மீறி, அந்த உணவகத்தின் உட்புறத் தோற்றம் – சூழ்நிலை ஆகியவை பெரிய விஷயமாகி விட்டது. நல்ல வசதியான சோபாக்கள், நண்பர்களோடு எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் அரட்டை அடிக்க அனுமதி, அவர்களுக்கு பிடித்த மாதிரி மியூசிக், அதற்கும் மேல் சுவையான வித்தியாசமான உணவு. இப்படி வித விதமாய் எதிர்பாப்புகள் இருக்கின்றன.
இதில் இப்போதைய டிரண்ட், “தீம் டு கபே”. அதாவது ஒரு கான்செப்டை அடிப்படையாக கொண்டு, உணவகத்தை அமைப்பது. Bikers, Artists, Writers, Gamers இப்படி ஒவ்வொருவருக்கும் பொதுவான அம்சங்களை எடுத்துக் கொண்டு அதை சுற்றியே உணவகம் அமைக்கப்பட்டிருக்கும். உள்ளே நுழைந்ததிலிருந்து வெளியே வரும் வரை, எல்லாவற்றிலும் அந்த கான்செப்ட் இருக்கும்.
“கேமிங் கபே” என்பது இளைஞர்கள் மத்தியில் இப்போதைய கிரேஸி. உணவோடு விளையாட்டு, விளையாட்டோடு உணவு – இது தான் கான்செப்ட். விளையாட்டு என்றாலே இப்போதெல்லாம் வீடியோ கேம்ஸ், ப்ளே ஸ்டேஷன், எக்ஸ் பாக்ஸ் என்று மட்டும் அல்லாமல், இதை நேரடியாக நண்பர்களுக்கும் மொபைல் போன் மூலம் “லைவ் ஷோ” மாதிரி ஸ்டீரீம் செய்கிறாரகள்.
இந்த கடையின் நிறுவனர் சுபா அவர்கள், இந்த பிண்ணனி பற்றி கூறும்போது சொல்கிறார் – “பாரதியார் கவிதைகளில் வரும் ஒரு நல்ல வரி, “மாலை முழுதும் விளையாட்டு என்று பழக்க படுத்திக்கொள்ளு பாப்பா”. இது சாதாரண விஷயம் இல்லை. நம்ம இந்திய வாழ்க்கை முறையில் விளையாட்டை ரொம்ப குறைத்து மதிப்பிடுகிறோம். நண்பர்களோடு, குடும்பத்தோடு சேர்ந்து விளையாடும் போது அது நம் ஆரோகியத்திற்கு, மூளை யோசிப்பு திறமைக்கு, ஸ்ட்ரெஸ் குறைப்பதற்கு, வெற்றி தோல்விகளை அறிவதற்கு செய்யும் நன்மைகள் சொல்லி மாளாது. வெளியில் போய் (outdoor games) விளையாடுவது உடலுக்கு நல்லது என்றால், இண்டோர் கேம்ஸ் மனதுக்கும், மூளைக்கும் மிகவும் நல்லது. அதனால் தேடி தேடி இங்கே கேம்ஸ் வாங்கி அடுக்கி வைத்திருக்கிறோம். பள்ளி, கல்லூரி இளைஞர்கள் இதை மிகவும் விரும்புகிறார்கள். மதுரையில் முதன் முதலில் பூஸ் பால் டேபிள் (foos ball table) இங்கு இருப்பதால், அதற்கு பெரிய டிமாண்ட் உள்ளது. இதற்கும் மேல், பெண்களும் தயக்கம் இல்லாமல் வந்து போகணும் என்பதாலேயே, மாதத்திற்கு ஒரு முறை பெண்கள் மட்டும் அனுமதிக்கப்படும் “dance night ” நடத்துகிறோம். DJ மியூசிக்கும் உண்டு. சனிக்கிழமை கேம்ஸ் நைட், ஸ்டாண்ட் அப் காமடி ஷோ, மியூசிக் பேண்ட் ஷோ இப்படி நிறைய நிகழ்வுகள் நடக்கிறது” என்கிறார்.
இவை எல்லாவற்றிக்கும் மேலாக செம்மையாக ஹிட் ஆயிருக்கும் விஷயம் சர்ப்ரைஸ் பர்த்டே பார்ட்டீஸ். முன் கூட்டியே புக் செய்து விட்டால், மிகவும் வித்தியாசமான அலங்காரங்கள், மியூசிக், பர்த்டே கேக், டான்ஸ் என்று ரொம்பவே பிரமாதமாக்கி தருகிறார்கள். இது மதுரையின் “பார்ட்டி டெஸ்டினேஷன் ” என்றே சொல்லலாம்.
உணவு வகைகளில் இத்தாலியன் உணவு முக்கியமான அம்சம். காபி, பிட்ஸா, பர்கர், மோமோஸ், பாஸ்தா மற்றும் வேபுள், மில்க் ஷேக், பான் கேக், மாக் டைல், ஐஸ் கிரீம் என அடுக்கிக் கொண்டே போகிறது.
இந்த கடை மதுரை பைபாஸ் ரோடு KFC க்கு பின்னால், கோபு ஐயங்கார் கடைக்கு மேல் மடியில் உள்ளது. அவ்வப்போது நடக்கும் நிகழ்வுகள் பற்றி அறிந்து கொள்ள – www.gobbledobble.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம். இவர்களை இன்ஸ்டாகிராமில் gobbledobblecafe பாலோ செய்யவும்.