உங்கள் ஸ்டார்ட் அப் தொழிலுக்கு காதி வழிகாட்டுகிறது.
முன்னமெல்லாம் காதி என்றாலே காத தூரம் ஓடுவோம். ஆனால் தற்போது காதி பிராண்ட் இந்திய அளவில் பிரபலமாகிக் கொண்டு வருகிறது. பல பெரிய கம்பெனிகள் காதி பிராண்டுடன் இணைந்து பணியாற்ற விரும்புகின்றனர்.
ப்ளாஸ்டிக் பை கழிவுகள் தாம் நம்மை பயமுறுத்திக் கொண்டிருக்கும் ஒரு விஷயம். நமது வருங்கால சந்ததியினருக்கு ஒரு நல்ல மாசு இல்லாத இந்தியாவை விட்டுச் செல்ல வேண்டும் என்ற எண்ணம் நம்மில் பலரிடம் இல்லை என்பது ஒரு பெரிய குறை.
இந்தியாவில் வருடம் தோறும் 1,30,00,000 டன்கள் ப்ளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதில் 90,00,000 டன்கள் கழிவுகளாக மாறுகிறது. அதில் 54,00,000 மறு சுழற்சி செய்யப்படுகிறது. சுமார் 36,00,000 டன்கள் ப்ளாஸ்டிக் கழிவுகள் குப்பைக்கு வருடந்தோறும் வருகின்றன. ஒரு நாளைக்கு சுமார் 10,000 டன்கள். இதில் 43 சதவீதம் ஒரு முறை உபயோகப்படுத்தி வெளியே தூக்கி எறியப்படும் பைகள்தான். அதிக அளவு பிளாஸ்டிக் கழிவுகளை தூக்கி எறிபவர்களில் இந்திய அளவில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் இருக்கிறது.
இது போன்று தூக்கி எறியப்படும் பைகளை எப்படி மறு சுழற்சி செய்யலாம் என்று காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம், ஜெய்ப்பூரில் உள்ள குமாரப்பா தேசிய கையால் செய்யப்பட்ட காகித நிறுவனத்தின் (Kumarappa National Handmade Paper Institute) உதவியுடன் அதன் கூழை, பேப்பர் கூழுடன் கலந்து கனமான பேப்பர் பைகள் (Carry Bags) தயாரித்து விற்பனைக்கு கொண்டு வந்திருக்கிறது.
பிளாஸ்டிக் குப்பைகளை சுத்தம் செய்து, 20 சதவீதம் ப்ளாஸ்டிக் கூழை காகித பேப்பர் கூழில் கலந்து இந்த வகை பைகள் தயாரிக்கப்படுகிறது.
இந்த பிளாஸ்டிக் கழிவை உபயோகப்படுத்துவதால் தற்போதுள்ள உற்பத்தி செலவை 34 சதவீதம் குறைத்துள்ளதால் பைகளின் அடக்க விலையும் குறைகிறது. இந்த பைகள் மாசற்றது, விலை குறைவானவை, மறுபடி உபயோகிக்கலாம், மறு சுழற்சி செய்யலாம்.
காதி இந்தியா தனது கிளைகள் மூலம் இந்த பைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருக்கிறது.
இது தவிர வாழைத்தண்டிலிருந்து 9- 10 ஜி.எஸ்.எம் ஹேண்ட்மேட் டிஷ்யூ பேப்பர் தயாரிப்பு போன்ற பல புதுமையான முயற்சிகளிலும் ஈடுபட்டு வெற்றி பெற்றுள்ளார்கள்.
இந்தகுமாரப்பா தேசிய கையால் செய்யப்பட்ட காகித நிறுவனத்தின் முழு செயல்பாடுகளை அறிந்து கொள்ள இவர்களின் இணையதளத்தை சென்று பாருங்கள். www.knhpi.org.in
நீங்களும் தயாரித்து விற்பனை செய்யலாம்இந்த வகை பைகள் நீங்களும் தயாரிக்க உங்களுக்கும் ஆலோசனை மற்றும் டிரெயினிங் கொடுக்கிறார்கள். தொடர்பு கொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி knhpijaipur@gmail.com