சிறிய பிசினஸ் செய்பவர்கள் தொழிலில் கவனம் செலுத்துவதா? அல்லது கணக்கு வழக்குகளை சரிவர வைத்துக் கொள்வதில் கவனம் செலுத்துவதா? என்ற பெரிய கவலை தற்போது இருக்கிறது. அதுவும் ஜிஎஸ்டி வந்த பிறகு கணக்கு வழக்குகளை முறையாக வைத்துக்கொள்வது என்பது முக்கியமான ஒன்றாகி விட்டது. திடீரென இந்த முறைகளுக்கு மாறுவது சிறிய அளவில் பிஸினஸ் செய்பவர்களுக்குபெரிய கஷ்டமான ஒன்றாகும்.
சிறிய பிசினஸ் செய்பவர்களின் பிரச்சினைகள் என்னவாக இருக்கும்? அவர்கள் போடும் இன்வாய்ஸ்-களை ஒழுங்காக சரியான முறையில் வைத்திருக்க இயலாதது, சரக்குகளின் இருப்பு எவ்வளவு என்ற கணக்குகள் தெரியாதது, யாரிடம் இருந்து எவ்வளவு பணம் வர வேண்டும் எப்போது வர வேண்டும் என்ற விவரங்களை சரியாக பதிந்து வைக்க இயலாதது, அப்படி பணம் தர வேண்டியவர்களுக்கு முறையான ரிமைண்டர்கள் அனுப்பி சரியான சமயத்தில் பணத்தை வசூல் செய்ய முடியாதது. இதனால் பணம் கொடுக்கல் வாங்கல்களில் நிறைய பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது.
இவற்றையெல்லாம் போக்குவதற்கு சந்தையில் பல சாப்ட்வேர்கள் இருந்தாலும் அவற்றை இயக்குவதற்கு தனிப்பட்ட ஆட்கள் தேவையிருக்கிறது, அந்த சாப்ட்வேர் வாங்குவதற்கு அதிகமான பணம் செலவழிக்க வேண்டும் என்ற ஒரு நிலையில் விலை மிகவும் குறைவாக அதே சமயத்தில் கடையின் முதலாளியே கூட இயக்கும் அளவிற்கு எளிதாக ஒரு சாப்ட்வேர் இருந்தால் எப்படி இருக்கும்? இந்த இடைவெளியைப் போக்குவதற்காக ஜிம் புக்ஸ் (www.gimbooks.com) என்ற ஒரு ஸ்டார்ட் அப் சாப்ட்வேர் கம்பெனி மிகவும் எளிதாக சிறிய பிசினஸ் பண்ணக்கூடியவர்கள் உபயோகப்படுத்தக் கூடிய வகையில் தங்களின் இணையதளத்தை வடிவமைத்திருக்கிறார்கள்.
சந்தையில் பல சாப்ட்வேர்கள் இருந்தாலும் அவை எல்லா இண்டஸ்ட்ரி களுக்கும் பொதுவானதாகவே இருக்கிறது. ஆனால் இந்த ஜிம் புக்ஸ் சாப்ட்வேரில் பலவிதமான இண்டஸ்ட்ரிகளுக்கு அவர்களுக்கு தேவையான விதத்தில் இன்வாய்ஸ்கள் தயாரிக்க உதவுகிறது.
கொட்டேஷன் கொடுப்பது, ஜிஎஸ்டி-க்கான ஈ-வே பில் தயாரிப்பது, ஜிஎஸ்டி ரிட்டர்ன் பைல் செய்ய தேவையானவைகளை செய்வது போன்றவைகளையும் இந்த இணையதளமே உங்களுக்கு செய்ய உதவுகிறது.
இந்த ஸ்டார்ட் அப் கம்பெனி இந்திய அரசாங்கத்தின் சிறந்த ஸ்டார்ட்அப் கம்பெனி என்ற விருதையும் பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை 500,000 க்கும் மேலான சிறிய பிசினஸ் செய்பவர்கள் இந்த இணைய தளத்தை உபயோகித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
முதலில் 15 நாட்களுக்கு நீங்கள் உபயோகித்து பார்க்க இலவசமாக உங்களுக்கு அளித்தாலும், பின்னர் மிகக் குறைவான கட்டணத்தில் சேவை செய்கின்றனர் என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளவும்.
கணக்கு வழக்குகளை சரிவர வைத்துக் கொள்வது என்பது இந்த காலகட்டத்தில் முக்கியமான ஒன்றாகும். இல்லாவிடில் அரசாங்க அதிகாரிகள் கேள்விகளுக்கும் மற்றும் உங்களுக்கு சரியான சமயத்தில் வர வேண்டிய பணங்கள் வராமலும் போவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
இவர்களுடைய இணையதளத்தை www.gimbooks.com சென்று பாருங்கள், அது உங்களுடைய கணக்கு வழக்குகளை சரிவர வைத்துக் கொள்ள உதவும்.