ஆம்னி பஸ்களுக்கு ரெட் பஸ் , ஹோட்டல்களுக்கு OYO போன்ற ஒரு தளம் மாதிரிதான் இந்த பட்ஜெட் பிரைவேட் பள்ளிகள். அமைப்பு சாராத பள்ளிகளை WOW என்ற ஸ்டார்ட்அப் அமைப்பின் மூலமாக ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்தைச் சார்ந்த மாணவர்களுக்கு சிறந்த கல்வி சேவைகளை கட்டுபடியாகக் கூடிய குறைந்த கட்டணத்தில் வழங்குவதற்கான நடவடிக்கைதான், WINGS OF WONDER.
WOW என்றபிராண்டின் கீழ் மேம்பட்ட கற்றல் அமைப்புடன் தரமான கல்வியை வழங்க கூட்டாண்மை மூலம் ஒரு ஒழுங்கமைக்கப்படாத மற்றும் மக்கள்தொகை கொண்ட பட்ஜெட் தனியார் பள்ளிகளை (பிபிஎஸ்-BUDGET PRIVATE SCHOOL) ஒழுங்கமைக்க ஒரு வலுவான தளத்தை உருவாக்குதல்தான் எங்கள் நோக்கம் என்கிறார் இதன் நிறுவனரான திரு. சாம் நிக்கோலஸ். அவருடன் நாம் அலைபேசி மூலம் எடுத்த பேட்டி :
கல்வி சேவை வழங்குநர்கள், கல்வி வல்லுநர்கள், முதலீட்டாளர்கள், சி.எஸ்.ஆர் கார்ப்பரேட் நன்கொடையாளர்கள், நிதி நிறுவனங்கள், சமூக சிந்தனையாளர்கள், கல்வி சம்பந்தப்பட்ட புத்தகங்கள், பொருள்களின் விற்பனையாளர்கள் மற்றும் சங்கத் தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு பங்குதாரர்களை ஒன்றிணைத்து நடத்தப்படும் பள்ளிகள் என்ற அடிப்படையில் நன்கு மேம்படுத்தப்பட்ட கற்றல் தளத்தை உருவாக்கவும், கல்வி பயிற்று முறையில் மாற்றங்களை ஏற்படுத்தி, கற்றலை மலிவான கட்டணத்தில் சமூகத்தில் இருக்கும் கீழ்த்தட்டு மக்களையும் சென்றடையும் வகையில் உருவாக்கப்பட்ட இந்த அமைப்பு முதலில் சோதனை முறையில் தமிழ்நாட்டில் ஸ்டார்ட்அப் நிறுவனமாக சேவையை வழங்க இருக்கிறது.
இதன் அடிப்படை நோக்கங்கள்
- நன்கு கட்டமைக்கப்பட்ட வேளாண்மை, இசை, விளையாட்டு மற்றும் கலை மற்றும் கைவினைக் கல்வி மூலம் இளம் மனதில் சமூக மதிப்பு உருவாக்கம்
- தரமான ஆரம்பக் கல்வியை மேம்படுத்துதல் (பாடத்திட்டம், கற்பித்தல், மதிப்பீடுகள், முதலியன) மற்றும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு வளமான கல்வியை வழங்குதல்.
- வளர்ந்து வரும் வறுமையான குழந்தைகளிடையே சமத்துவம் மற்றும் கண்ணியம் போன்ற ஒழுக்கங்களை கற்றுக்கொடுத்தல்.
- தேசத்தின் வளர்ச்சியில் பங்களிப்பு. தேசத்தின் சமூக நிலப்பரப்பை மாற்றுவது மற்றும் பொருளாதார முன்னேற்றத்தில் கவனம் செலுத்துவது.
- ஆசிரியர்களுக்கான தொடர் பயிற்சி, திறன் மேம்பாடு
வேலைவாய்ப்பை உருவாக்குதல்.
பட்ஜெட் பள்ளிகள் என்பது தனிப்பட்ட முறையில் நடத்தப்படும் குறைந்த கட்டண தொடக்கப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகள். இவை குறைந்த வருமானம் கொண்ட நடுத்தர குடும்பங்களுக்கு கட்டுபடி ஆகக்கூடிய மலிவான கட்டணத்தில் கல்வியை வழங்குகின்றன.
சுமார் ஒன்றரை கோடி பள்ளிகள் உள்ள நமது நாட்டில் ஏறக்குறைய 15% பள்ளிகளில், பட்ஜெட் பிரைவேட் பள்ளிகள் 30 சதவீதத்திற்கும் அதிகமான மாணவ மாணவியர்களுக்கு கல்வியை வழங்குகின்றன. ஆனால் இதில் 90 சதவீதத்திற்கும் அதிகமான பள்ளிகள் முழுமையாக நடத்தப்படுவதில்லை. கட்டணங்கள் குறைவாக இருந்தபோதிலும் மாணவர்கள் சுமார் 15 முதல் 20 சதவீதத்திற்கு சேர்கின்றனர். இதனால் பள்ளி நிர்வாகத்தின் பணப்புழக்கம் பெருமளவு பாதிக்கிறது.
மாணவர்கள் இடையில் படிப்பை நிறுத்துவதை தடுப்பதற்கும் , அவர்களுக்கு குறைந்த
கட்டணத்தில், அதிக கட்டணம் வசூலித்து நடத்தப்படும் பிரபல தனியார் பள்ளிகளுக்கு இணையான கல்வித்தரத்தை வழங்குவதற்காக உருவாக்கப்பட்ட WOW அமைப்பின் மூலம்
நலிவடைந்த நிலையில் இருக்கும் தனியார் பள்ளிகளை வளர்ச்சிப் பாதைக்கு எடுத்துச் செல்ல உதவும் .
பிற பயன்கள்
- கார்ப்பரேட் சோசியல் ரெஸ்பான்சிபிலிட்டி (CSR) பெருநிறுவன சமூக பொறுப்பு நிதி மூலம் வழங்கப்படும் நிதி முறையாக பொருத்தமான நிறுவனங்களுக்கு சென்றடையும். ஆண்டுதோறும் பல பெரிய நிறுவனங்கள் தங்களது சிஎஸ்ஆர் நிதியை பல்வேறு விதமான சமூக அமைப்புகளுக்கு செலவிடுகின்றன. அதில் கல்வி நிறுவனங்களும் அடங்கும். அந்த வகையில் இது போன்ற பள்ளிகளுக்கு செலவிடப்படும் தொகையை வழங்கிய நிறுவனங்களுக்கு தங்களின் பணம் நல்ல வழியில் உரியவர்களுக்கு சேர்கிறது என்கிற திருப்தியும் கிடைக்கும்.
- கல்வியின் தரத்தை மேம்படுத்துதல்.
- கட்டமைக்கப்பட்ட ஆசிரியர் பயிற்சி மற்றும் மதிப்பீடு.
- மையப்படுத்தப்பட்ட மாணவர் சேர்க்கை.
- கற்றல் தரத்தை மேம்படுத்துவதற்கான நிதிஉதவி.
- மென்பொருள் மூலம் பள்ளியின் செயல்பாட்டு மேலாண்மை மதிப்பீடு.
- பாடப்புத்தகங்கள், கல்விக்கான உபகரணங்கள் போன்றவற்றை குறைந்த விலையில் கொள்முதல் செய்து பள்ளிகளுக்கு வழங்குதல்.
இதனால் பள்ளியின் உரிமையாளர்கள், பெண் தொழில் முனைவோர்கள், ஏழை மாணவ மாணவியர், சமுதாயம், கார்ப்பரேட் கம்பெனிகள் என பலரும் பயன் பெறுவதோடு வேலை வாய்ப்பும் உருவாகும்.
கிட்டத்தட்ட பிரான்சைஸ் (Franchise) என்று சொல்லப்படும் உரிம அடிப்படையில் பள்ளிகளை உருவாக்கி அவற்றிற்கு STANDARD OPERATING PROCEDURE (SOP) என்ற தரப்படுத்தப்பட்ட செயல்பாட்டு முறையின் மூலமாக பள்ளியின் நிர்வாகத்தை நடத்துவதற்கு உதவுகின்ற திரு. சாம் நிகோலஸ் கல்வித்துறையில் பல்லாண்டு கால அனுபவம் பெற்ற கல்வியியல் வல்லுனர்களையும் அணி சேர்த்துக்கொண்டு தொடங்கியிருக்கும் இந்த WOW அமைப்பு வெற்றி பெறுவதற்காக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டு உரையாடலை முடித்துக் கொண்டோம்.
விலையில்லா பாடநூல்கள், நோட்டுப்புத்தகங்கள் , மடிக்கணினி, புத்தகப்பை, சீருடை, காலணிகள், சைக்கிள், பஸ் பாஸ், ஸ்காலர்ஷிப் என எத்தனையோ வழங்கி, மாணவர்களை அரசு பள்ளிகள் கூவி கூவி வரவேற்றாலும், தனியார் பள்ளியில் அதிக கட்டணம் செலுத்தி சேர்ந்தால் தான் நமது பிள்ளை நன்கு ஆங்கிலம் பேசும் என்ற நடுத்தர குடும்பத்தினரின் விழிப்புணர்வு இன்மை. அரசாங்கம், தனியார் பள்ளிகள் இரண்டுக்கும் இடையே பாலம் அமைப்பது போல், குறைந்த கட்டணம் அதே நேரம் தனியார் பள்ளிகளுக்கு இணையான கல்வித் தரத்தை வழங்குவதற்காக இந்த ஸ்டார்ட் அப் முயற்சி, “வாவ் -WOW “என்று சொல்லுவதற்கு ஏற்றதுதான்.
மேலும் தொடர்புக்கு 98 426 999 91.